Pages

Saturday, July 2, 2011

STORNG TEA அதிர்ச்சி ரிப்போர்ட்

ஸ்ட்ராங் டீ ஸ்லோ பாய்ஸன் - கதற வைக்கும் கலப்படம்! தேநீர்ப் பிரியர்களே உஷார்
சோர்வைப் போக்குவதற்கு நாம் நம்பிக் குடிக்கிற டீயே நம் ஆரோக்கியத்திற்கு ஆப்பு வைக்கிற அநியாயம், அவ்வளவு சீக்கிரம் முடிவுக்கு வராது போலிருக்கிறது.

தமிழகம் முழுவதும் அடுத்தடுத்து ஆயிரக்கணக்கான கிலோ அளவில் சிக்கும் கலப்பட டீத்தூள் ரகங்கள் விடுக்கிற எச்சரிக்கை இதுதான்.

மரத்தூள், புளியங்கொட்டை, குதிரைச்சாணம், இலவம்பஞ்சு விதை என காலத்துக்கும் தொழில் நுட்ப வசதிக்கும் தகுந்தபடி கை வைக்கிற கலப்படக்காரர்களின் தற்போதைய முதலீடு முந்திரக்கொட்டையின் மேற்புறத்தோல்.

"பழுப்புநிறத்தில் உள்ள அந்தத் தோலை வறுத்து, பொடியாக்கி, டீயில் கலந்துட்டா குறைந்த அளவு விற்பனையில் அதிக லாபம் பார்க்கலாம்.

குடிக்கிறப்போ டீ அடர்த்தியாகவும் இருக்கும். பச்சையாக இருக்கும்போது சாப்பிட்டால், நம் வாயை புண்ணாக்கிடுற முந்திரிக்கொட்டைத் தோல் நல்லா காய்ஞ்ச பிறகும் உடலுக்கு பாதிப்பைத்தானே ஏற்படுத்தும்?'' என்று கேட்கிறார், "கன்ஸ்யூமர் அசோசியேஷன் ஆஃப் இந்தியா'வின் நிறுவனர் தேசிகன்.

தேயிலையில் உள்ள இரண்டு இலை, ஒரு மொட்டு மட்டும்தான் டீத்தூளாக பயன்படுத்தப்பட முடியும். ஆனால் இதுவரை கழிவாக ஒதுக்கப்பட்ட காம்பு, தழை போன்ற ஃபைபர் சமாச்சாரங்களையும் டீயில் தற்போது கலக்கிறார்களாம். டீத்தூளின் எடையைக் கூட்டத்தான் இந்த டெக்னிக்.

இன்னொரு பக்கம் டார் டாராசைன், அட்ராசைன், கார்மோசைன், சன்செட் யெல்லோ என நீள்கிறது.

டீயின் கலருக்காக கலக்கப்படுகிற கெமிக்கல்களின் பட்டியல். ""இந்த மோசடிக்கு ஒரு வகையில் நுகர்வோர்தான் காரணம். டீன்னாலே செம்மண் கலர்ல, "ஸ்ட்ராங்' ஆக இருக்கும்கிற மக்களின் தவறான நம்பிக்கையத்தான் கலப்படக்காரர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கிறாங்க'' என்று எச்சரிக்கிறார், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் ராஜராமன்.

I.S.O தரச் சான்றிதழ் பெற்ற நிறுவனங்கள் முதல் லோக்கல் பார்ட்டிகள் வரை இந்த கலப்படத்தை, அவரவர் தங்கள் சக்திக்கு ஏற்ப செய்து வருகின்றனர். சரி, இந்தக் கலப்பட டீத்தூள் என்ன செய்யும்? இதற்கு உணவுப் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப வல்லுனர் சுந்தர் தருகிற பதில், ""டீயில் கலக்கப்படுகிற கலர்கள் முதலில் கிட்னியைப் பாதிக்கும்.

பிறகு வயிற்றுப் பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தும். கலப்பட டீயை அளவுக்கு மீறி குடிச்சா, கேன்சர் வர்றதுக்கும் வாய்ப்பு இருக்கு. துணிக்குப் போடற சாயம் கலந்த டீ என்றால் இன்னும் அபாயம்!'' டீக்கடைகளைப் பார்த்தாலே நுழைந்து விடுகிற தேநீர்ப் பிரியர்களே உஷார்..........

6 comments:

கூடல் பாலா said...

அய்யய்யோ வர வர ஒன்றுமே சாப்பிட முடியாதபடி ஆகிவிடும் போலிருக்கிறதே .....

cisco said...

முட்டாள் பசங்களே இந்தியாவில் தண்ணியே நம்பி குடிக்க முடியாது இதில டீ வேறயா

கோவை நேரம் said...

இனி டீ குடிப்போம் ..? சான்சே இல்லை

Unknown said...

HEALTH CONSCIOUS INFORMATION.THANKS.

Unknown said...

voted for good post...tq bro ...
really a good post

மாய உலகம் said...

//மரத்தூள், புளியங்கொட்டை, குதிரைச்சாணம், இலவம்பஞ்சு விதை என காலத்துக்கும் தொழில் நுட்ப வசதிக்கும் தகுந்தபடி கை வைக்கிற கலப்படக்காரர்களின் தற்போதைய முதலீடு முந்திரக்கொட்டையின் மேற்புறத்தோல்.//

அதனால் தானே நமக்கெல்லாம் மூன்றாம் தரம் என்கிற பெயரில் டஸ்ட் டீ என தருகின்றனர்

Post a Comment