Pages

Saturday, July 9, 2011

ஒசாமா பின்லேடனை தேடி அலையும் ஒரு அமெரிக்கர்

ஒசாமா பின்லேடனை தேடி ஒருவர் அலைந்து கொண்டிருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆக வேண்டும்.

மெரிக்கா படைகளால் சுட்டுகொள்ளப்பட்ட ஒசாமாவின் உடலை அரபிக் கடலில் ரகசிய இடத்தில் சமாதி ஆக்கப்பட்டது. அந்த உடலை கடலில் தேடுதல் வேட்டையில் இறங்கி இருக்கிறார் ஒரு அமெரிக்கர் அவரது பெயர் பில் வாரன். ஆழ்கடல் நீச்சல் வீரரான இவர் கடலில் மூழ்கி கிடக்கும் கப்பல்களில் உள்ள பொருட்களை மற்றும் கடலில் இருக்கும் பொக்கிஷங்களை  தேடிக்கொடுக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார்.
 
பில்வாரன் ஒசாமாவின் உடல் கடலில் வீசப்பட்டது என்பதை நான் நம்ப தயாராக இல்லை என்று கூறுகிறார். அமெரிக்கா ராணுவம் இதற்கான ஆதார புகைப்படங்களை  வெளியிட்டு இருக்க வேண்டும் என்கிறார். அந்த உடலை தேடி தனது கடல் பயணத்தை துவக்கி தேடி வருகிறார் பில் வாரன்.
 
இந்த தேடுதல் வேட்டைக்காக சுமார் 4 லட்சம் அமெரிக்க டாலர் செலவு செய்யப்போகிறார். இதற்காக இந்தியாவில் இருந்து ஒரு கப்பலை வாடகைக்கு பிடிக்க இருக்கிறார். ரிமோட் மூலம் இயங்கும் குட்டி நீர் மூழ்கி எந்திரம் மற்றும் நவீன சென்சார் கருவிகள் மூலம் தேடுதல் வேட்டை நடத்தப்போகிறார் இந்த வாரன்.

இதுவரை 200க்ககும் மேற்பட்ட மூழ்கிய கப்பலை கண்டு பிடித்துள்ளார். ஒசாமா உடல் கடலில் எந்த இடத்தில் வீசப்பட்டது என்பது குறித்த ரகசிய தகவல் அவருக்கு கிடைதுள்ளதாம் அதன் அடிப்படையில் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளார். 

யானை இருந்தாலும் ஆயிரம் பொன்  இறந்தாலும் ஆயிரம் பொன் என்பார்கள் அதுபோல தான் பின்லேடன்  தலைக்கு உயிருடன் இருக்கும் போது  கோடிக்கணக்கில் விலை வைத்திருந்தார்கள் இப்போது இறந்தபிறகும் அவருக்காக கோடிக்கணக்கில் பணம் செலவழிக்கிறார்கள்.

1 comment:

Post a Comment