Pages

Thursday, May 26, 2011

இதயம் பறக்கிறது

ஒரு சில நாட்கள் என் கால்கள் உன் பின்னால் சுற்றியது
இந்நாள் வரை என் இதயம் உன்னை சுற்றியே பறக்கிறது
இது தான் காதலின் சாபமோ?

Saturday, May 21, 2011

விளையாட்டு பசங்க

இந்த வெட்டி பசங்க பண்ணற லூட்டி கொஞ்சம் ரசியுங்கள்
                                                              அப்படி போடு போடு.........
எங்க பின்னழகை பார்த்து ஊரே மயங்கி கிடக்கு
பால் அடிக்க இடமா கிடைக்கல? சிறுபிள்ளத்தனமா இருக்கு

இப்படை தோற்க்கின் எப்படை வெல்லும்
யாருக்கும் தெரியாம டம் அடிக்கிறதே தனி சுகம்
என்னை பார்த்து ஊத்தவாய் என்று செல்லிட்டா
ஓடி ஒடி உழைக்கணும் ரோடு மேல நடக்காணும்

Tuesday, May 17, 2011

விழிகள்

உன் விழிகளால் பார்த்தாய்
என் விழிகளுன் பேசினாய்
சில நாட்களிலே விழிகளை மறைக்கிறாய்
ஏனாடி பெண்ணே?
தொலைந்தது என் எதிர்காலம்
தெளிவான என் மனம்
அலை கடலை அலைகிறது
எங்கு முடியும் இந்த விழிகளின் உறவு
காத்திருக்கும் எந்தன் விழிகளுக்கு என்ன முடிவு?

Saturday, May 14, 2011

தேர்தல் வெற்றி மக்களுக்கு என்ன லாபம்?

                  தி.மு.க கட்சி பல சாதனைகள் செய்தாலும்மக்களுக்கு மிகுந்த வேதனையையும் அளித்திருக்கிறது என்பது தேர்தலின் படுதோல்வியில் தெரி்ந்துவிட்டது.

மக்களின் எதிர்பார்ப்பு இலவசங்கள் அல்ல? சிறந்த மாற்றம் கொண்டு வர வேண்டும் என்பதே உண்மையான முன்னேற்றம் வேண்டும் என்பதே மக்களின் எதி்ர்பார்ப்பு!
 
உண்மையான அரசியல்வாதிகள் மக்களின் ஆதரவை என்னும் பெறுவார் என்பதற்கு புதுச்சேரி முன்னாள் முதல்வர் ரங்கசாமியின் வெற்றி மிகச்சிறந்த நிரூபணம்

ஆட்சி ஏற்கும் அதிமுக அரசு மக்களுக்கு என்ன செய்ய போகிறது. விலைவாசி, மின்வெட்டு, வேலையின்மை, பள்ளிகளில் அதிக கட்டணம், ஊழல் போன்றவற்றை சரிசெய்துமக்களுக்கு  நன்மைசெய்ய போகிறதா? இல்லை தி.மு.க கட்சியின் குறைகளை கூறிகொண்டு இருக்க போகிறதாதெரியவில்லை.
எதுவாகினும் இதற்கு மேல் மக்கள் ஒரு மெழுகு சிலை மட்டுமே! 

முந்தைய அரசு எந்த திட்டங்கள் செய்தாலும் அதை நிறுத்தாமல் அப்படியே ஏற்றுக்கொண்டு புதிய திட்டங்களை செய்ய முனைவதே ஒரு சிறந்த அரசுக்கான பணி அதை முதலவர் ஜெயலலிதா செய்வர்களா என்பது சந்தேகம் தான்?

புதிய சட்டப்பேரவையை பயன்படுத்தாமல் பழைய தலைமைசெயலகத்தை பயன்படுத்த சீர் செய்ய துவங்கி விட்டார்கள் எதற்கு மாற்றம்.

மக்களுக்காக மனசாட்சியுடனும் எளிமையாகவும் சேவை செய்யும் அரசியல்வாதிகள் என்றுமே மக்கள் மனதில் இருப்பார்கள் ஜெயலலிதா என்ன செய்வர்? 

தேர்தல் வெற்றி மக்களுக்கு லாபம் கிடைக்குமா பொறுத்திருந்து பார்ப்போம்!
மற்றங்களை ஏற்போம்!!