Pages

Sunday, March 3, 2013

சாரா - ரி்ச்சார்ட் ஒரு உண்மை காதல் கதை


காலைபொழுதின் அழுதத்தை  இரவுகள் நேரத்தில் புத்தகம் மற்றும் இசையின் மூலமாக என்னை புதுப்பித்து கொள்ளவதே என்னுடைய வாடிக்கை  

நேற்றைய இரவில்  fm Radio  சேனல் மாற்றிகொண்டு இருக்கையில் ஒரு சேனலில் ஒரு பெண் அழுதுக்கொண்டே தன்னுடைய காதல் கதையை  அந்த ரேடியோ ஜாக்கியிடம் (லவ் குரு) பகிர்ந்து கொண்டு இருக்கிறாள் அவள் பெயர் சாரா என்றும் அவளுடைய காதல் கணவன் பெயர் ரிச்சர்ட்  என்றும் அவளது உணர்வுபூர்வமான வார்த்தைகள் ஆரம்பிக்கிறது.

சாரா காதல் திருமணம் செய்து 5 மாதத்தில் பிரிவு. பிரிவை தாங்க முடியாத பெரும் துக்கம் அவளது வாழ்வில்.  பெங்களுரை பூர்விகமாக கொண்ட  ஒரு தமிழ்பெண் சிறந்த படிப்பு உயர்ந்த பன்னாட்டு நிறுவனத்தில் சென்னையில் வேலை ரிச்சர்ட் அவளுடன்  பணிபுரிந்தவன் தன்னுடைய முதல் பார்வையில் அவளின் மீது காதல் கொண்டு தொடர்நது 6 மாதம் அவள் பின்னால் அலைந்து காதலுக்கு கீரின்  சிக்னல். என தன்னுடைய அற்புதமான காதல் கதையை சொல்லிக் கொண்டு இருக்கிறாள் சாரா  சிறந்த படிப்பறியுள்ள குடும்ப பிண்ணனி   நிறைவான வாழ்க்கை   காதலை பெற்றோரிடம் தெரிவித்து முதலில் சம்மந்தம்  வாங்கி தன்னை பெண் பார்க்க ரிச்சார்ட் குடும்பத்தை வர  வைத்துள்ளாள் இருவீட்டாரின் சம்மதத்தில் வெகு சிறப்பாக திருமணம் நடந்தேறியது.

     மருமகளாய் சென்னையில் ரிச்சார்ட் விட அதிக படிப்பு அதிக சம்பளம் என தன் சுய முயற்சியால் முன்னேற்றிக் கொண்டவள். அப்புறம் எப்படி  சார 5 வது மாதத்திலே டைவர்ஸ் வரைக்கும் கேட்க.  ஆமாம் லவ் குரு என் மாமியார் தான் எல்லாம் பிரச்சனைகளுக்கும் காரணம். எனக்கு கூட்டு  குடும்ப வாழ்ககை தான் பிடிக்கும் அப்படியே தான் அமைந்தது. இருவரும் அதே இடத்தில் தான் வேலை செய்து கொண்டு இருந்தோம் எனக்கு பல கனவுகள் media பணியற்ற  வேண்டும் என்பது அதற்கான முயற்சியும்  எடுத்தேன் ஆனால் என் மாமியார் இதெல்லாம் எங்க குடும்பத்திற்கு சரிவாரது நீ டி.வி யில் நடிப்பது  குடும்பத்திற்கு நல்லதல்ல என கனவுகளுக்கு  தடை போட்டார்கள். ரிச்சர்ட்டும்  அவர் அம்மாவின்  சொல்லுக்கு மட்டுமே தலையாட்டுகிறார். அவங்க சொன்ன நல்லது தான் சொல்லுவாங்க  கேளுன்னு சொல்லவார். எனக்கு ஒரு புரிதல் இருந்தது வேண்டாம் என்று வி்ட்டு வி்ட்டேன். வேலையை விட்டு விட்டு வீட்டில் இருந்து கணவர்  மாமியார் சந்தோஷத்துடன் வாழ கூட ஆசைப்பட்டேன் ஆனால் அதிகப்படியான பிரச்சனைகள் என்னை வேலைக்கு போக வைத்தது  என்னுடைய   சேமிப்பு முழுவதையும்  என் கணவரின் குடும்பத்திற்காக செலவி்ட்டேன் பணம் ஒரு பெரியதாக நான் எப்போதும் நினைத்ததேயில்லை.  பல  தனிப்பட்ட ஆசைகளை கூட தியாகம் செய்தேன். 


எல்லாவற்றிற்கும் குற்றம்!..  நீங்க சொல்லுங்க குரு ஒரு கலருக்காக கூட சண்டை போட முடியுமான்னு எனக்கு பிடித்த purple color  புடவை மற்றும் சில பொருட்களை  உள்ளது அது கூட அவர்களுக்கு பிடிக்காதாம்  நான் விட்டு விட  வேண்டுமாம் என்ன இது வாழ்க்கை பாருங்கள் என   கண்ணீரோடு கூறும் சாரா பெரும்பாலும் ஆங்கிலத்தில் தான் பேசினாள். தமிழும் நன்றாக தான் பேசினாங்க. 21 வயது சொல்லுற அவங்ககிட்ட நிச்சயம் 28 வயசுக்கு உண்டான பக்குவம் நிறையவே இருந்தது அவளின் பேச்சுகளில்.

இவங்க purple color  பற்றி சொல்லும் போது சமீபத்தில் நான் படிச்ச எஸ். ராவின் புத்தகத்திலிருந்து சில வரிகள். பஸ் நிலையம் இரயில்  நிலையம் நான் பல பெண்களை நான் பார்த்திருக்கிறேன்  அவர்கள் முகத்தில் சிரிப்பு மகிழ்ச்சி என்பது காணாமல் போன கானல் நீரை  நெடுங்காலமாய் வாழ்வதை பார்கக முடியும் அது  போல ஒரு பொண்னை மையமாக கொண்டு  ஸ்டீபன் ஸபீல்பெர்க் இயக்கிய வியாபாரத்தை  தாண்டியது தான் சினிமா என்று அவர் எடுத்த THE COLOR PURPLE படம் உலகின் சிறந்த படங்களில் ஓன்றாம். வறுமை குடும்பத்தில் பிறந்த எமி  என்ற பெண் பிறந்தது முதல் ஆண்களால் அனுபவித்து வரும் பல கொடுமைகளை தன்னுடைய அழுத்தமான பதிவின் மூலம் பார்க்கும் அனைத்து  ஆண்களின் மனசாட்சிகளை தட்டி எடுப்பும் தலை சிறந்த படமாக உள்ளது என் கூறுகிறார்.  

சரி சாராவின் கதைக்கு வருவோம் 5 மாதத்தில் பிரச்சனைகள்  அதிகரிக்க  ஒரு நாள் கோபத்தில் நான் வீட்டை வீட்டு வெளியேறுகிறேன் என  கிளம்பி ஹாஸ்டலில் தங்கிவிடுகிறார். சொல்லிவிட்டு அழுகிறாள் இது தான் வாழ்வில நான் செய்து மிகப்பெரிய தவறு இதற்காக என் கணவர்  ரிச்சர்ட்யிடம் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க தயாராக இருக்கிறேன். அப்புறம் என்ன  ஆச்சு சொல்லுங்க சாரா என ரேடியோ ஜாக்கி (லவ் குரு)  கேட்க  முதலில் எப்படியும் அவர் ஆபீஸ் வருவார் அங்கே சந்தித்து பேசிக்கலாம் என சர்வ சாதாரணமாக தான் இருந்தேன் லவ் குரு 

ஆனால்  மறுநாள் அவருக்காக காத்திருந்த எனக்கு  மிகப் பெரிய அதிர்ச்சி அவருடைய ராஜனாம கடிதம் நிறத்திவிட்டாங்க அவருடைய அம்மா அவரை நாங்கள் வேலை செய்த கம்பெனியிலிருந்து.  மறபடியும் நான் அவரை சந்திக்க எடுத்த முயற்சிகள் எல்லாம் தோல்வி என் சொல்லீறிங்க சாரா இந்த  காலத்தில் போய் அவரை தொடர்பு கொள்ள முடியலான்னு சொல்லறீங்க   போன் செய்திருக்கலாமே  செய்தேன் லவ்குரு நிறைய தடவை எந்த பதிலும் இல்லை பேசுவதில்லை msg க்கு Reply இல்லை எடுத்தால் அவர் அம்மா பேசுறாங்க இதற்கு மேல் உனக்கு என் பையனுக்கும் எந்த  சம்பந்தமும் இல்லை டைவர்ஸ் பண்ண அவன் ரெடியா இருக்கான். நீ கையொழுத்து போடு என் அடுத்த ஒரு அதிர்ச்சி ஏற்படுத்தினாங்க.

எந்தவொரு 5 அறிவு விலக்கினத்திற்கும் தன் இனத்தாலே எந்தவொரு பாதிப்பே. துன்பமே வருவதில்லை மனிதன் மட்டும் தான்  மற்றவர்களை  அழித்தும் துன்பப்படுத்தியும் தன் வாழ்வை வளமைப்படுத்திக் கொள்ள எப்போதும் முயன்று கொண்டு இருக்கிறான்.

அடுத்தது எங்கவீட்லஇருந்து அப்பா அம்மா. அண்ணா எல்லா வந்து பேசுனாங்க  டைவர்ஸ் தவிர அவங்க வார்த்தையில  வேறு எதையும்  பேசவில்லையாம். ரிச்சார்ட் என்னங்கா பேசினாரம்........ அவரா அவ்வளவு திமிரா விட்டை விட்டு வெளியே போனல போகட்டும் இப்ப என்ன என்று   கூறுகிறாராம். இந்ந 21 வயதுல எங்கப்பா அழுது நான் பார்த்ததேயில்லை ல்வ்குரு ஆனா இப்பாநான் அவரை அழவெச்சுட்டேன்...........................................என  அழுகிறாள் அவளும்.

 எங்க அண்ணா கிட்ட கூட சொன்னேன் அவரை நான் ஒரு தடவை பார்த்த எல்லா பிரச்சனையும் சரியாகிவிடும்  அவரை  பார்கக ஏற்பாடு செய் என்றேன் அவருக்கு என்னை பார்கக விருப்பமில்லையாம். அப்படி என்ன நான் பெரிய தப்பு செஞ்சிட்டேன் நான் வீட்டை விட்டு  வரும் போது போகதே என்று ஒரு வார்த்தை கூறவில்லை அவர். என் அப்பா அம்மா நீ இங்கு இருக்க வேண்டாம் எங்களும் பெங்களுர் வந்துவிட என்றுகூறினார்கள் இல்ல இல்ல நான் ரிச்சார்ட் பார்ககாம  இங்கிருந்து வர மாட்டேன். நாங்க இரண்டு பேரும் ஒன்றாக பெங்களுர் வருகிறோம் என அவர்களுக்கு ஆறுதல் கூறி அனுப்பினேன் என்ன பண்ணறது 

என்னல எங்க குடும்பத்தில இருக்கிற அனைவரும் உடைஞ்சு போயிட்டாங்க. லவ்குரு. அப்புறம் என்ன எனது நண்பர்கள் ஆபி சில் வேலை செய்த  அவரின் நண்பரகள் என அனைவரும் பேசியாச்சு எந்த பலனும் இல்லை கடந்த ஒருமாதம வேலை முடிச்சுட்டு கேப்ல வரும்போது இந்த லவ் குரு  நிகழ்ச்சிதான் ஆறுதால். போன வாரத்துல கடைசியா ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை முயற்சி செய்ய துணிந்துவிட்டேன். ஒரு  நிமிடம் என் சிந்தனை விழிப்பு பெற்றது. நான் இறந்தும் வாழ்நாள் முழுவதும் என்னால் தான் இறந்தாள் என்ற வேதனைஏற்படுத்தி விடும். என  சுதாரித்துக் கொண்டேன். அவ்வளவு தைரியமான பொண்ணுங்க நான் எனக்கு எப்படி இந்த எண்ணம் தோன்றியது  என் மேல் எனக்கு வெறுப்பாக  இருக்கிறது சரியான தூக்கம் இல்லை என்னையே  வறுத்திக்கொண்டேன் கையை கிழித்துக்கொண்டேன. கடைசியாக என் தோழிகள் வீட்டில் தெரிவித்து என்னை விட்டிற்கு அனுப்ப நாளை காலை 11.30 எனக்கு பஸ் நான் பெங்களுர்பேறோன்  இந்த நிகழ்ச்சி மூலம்ஏதாவது அதிசயம் நடத்து  ரிச்சர்ட் என்னுடன் வரமாட்டாரா என துடித்துக் கொண்டுக்கிறது என் மனது இரவு முழுவதும் யாராவது உதவி செய்ய மாட்டார்களா என ஏங்குகிறது. என் மனம் ..............லவ்குரு நாங்க முயற்சிக்கிறோம் 

உங்கள் கணவன் போன் நம்பர் கொடுங்க  நிகழ்ச்சி முழுவதும முயற்சித்து தோல்வியே மிச்சம் 
என லவ் குரு சொல்ல ஆம் போன் Switch OFF  தெரியும் வல்குரு இதெல்லாம் சாத்திய படாது என்று தெரியும் இருந்தாலும்  ஏதாவது ஒரு  அதிசயம் நடக்கும் ஒரு கற்பனை உலகத்தில் இருக்கிறேன்................................

கடைசியாக அவள் கூறிய வார்த்தை என்னுடைய அதிகப்பாடியான நம்பிக்கையும் அளவுக்கு அதிகமான காதாலும் எல்லாம் இருந்தும் என்னை  அனாதையாக ஆக்கிவிட்டது என கண்ணீருடன் தன் அழைப்பை துண்டிக்கிறாள்........................

கடைசியாக லவ்குரு இந்த நிகழ்ச்சியை கேட்டு கொண்டு இருக்கும் ரிச்சர்ட் நண்பர்கள் பணி புரிபவர்கள் அல்லது உறவினர்  சாரா வின் இந்த  கண்ணீரை ரிச்சாட்யிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டுகிறோம் அப்படி சேர்ந்தால் இந்த நிகழ்ச்சி செய்த மிகப் பெரிய சாதனையாக அவரிகளின் இருக்கும் என நிகழ்ச்சி முடிகிறது.       

சேர்ந்தார்களா இல்லை என்பது காலத்தின் கையில்...........??????????

பென்குயின் பறவை தன் இணையை ஆசையுடன் தேடிக்கொள்ளுமாம் தன் இணையுடன் இணைந்த பின் வேறு எந்த பென்குயினுடன் சேராதாம். அப்படியே தன் இணையான பெண் இணை இறந்தாலும்  அந்த இடத்தையே சோகத்துடன் சுற்றி சுற்றி வருமாம். 5 அறிவு கொண்ட உயிரினங்களிடம்  அன்பு பரஸ்பரம் 6 அறிவு கொண்ட மனிதனிடத்தில் காணாமல் போய்விடுகிறது பெரும்பாலான காதல் திருமணங்கள் தேய்பிறை போல அன்பை  கொண்டுப்பது ஏனே தெரியவில்லை.  எஸ். ரா கூறுவது போல இவர்களை பாரக்கும் போது வாலற்ற (வெறி) நாய்களின் பிம்பம் தோன்றி மறைகிறது  என கூறுகிறார்.......................................

1 comment:

Post a Comment