Pages

Showing posts with label இந்தியா. Show all posts
Showing posts with label இந்தியா. Show all posts

Thursday, January 26, 2012

குடியரசு தினமும் மத்திய அரசின் கஞ்சத்தனமும்

பிரபல தமிழ் நாளிதழில் 11 பக்கத்தில் இன்று குடியரசு தினத்திற்கான மத்திய அரசின் விளம்பரம்

இந்த விளம்பரத்திலுள்ள வாசகம்
ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை மூவர்ணகொடி நமது சுயமரியதை
இந்த விளம்பரத்தில் நமது தேசிய கொடியின் ஒருவர்ணமும் இல்லை
எவ்வளவு சிக்கனம் இது தான் மக்களுக்காக  அரசு கட்டும் சுயமரியாதை தலைவர்களின் படங்களுடன்  13 பக்கத்தில் அழகிய மல்டி கலருடன் விளம்பரம் செய்ய லட்சங்களில் செலவு செய்யும் மத்திய அரசு மக்களுக்கு இது போதும் என்ற நினைப்பும் மூவர்ணகொடி வாசகம் வேற

அடுத்தாக இந்த பிரபல பத்திரிக்கை கள்ளகாதலை கட்டம் போட்டு கலரில்
கொடுக்கும் இந்த நாளேடு ஏனே மத்திய அரசு கொடுத்த பணத்திற்கு சரியாக வேலை செய்கிறது.  அதில் கொடுக்கப்பட்ட வாசகத்திற்காகவாவது
கலரில் அச்சிட்டு இருக்கலாம்? 

 இது தான் பத்திரிக்கை சுதந்திரமோ..........

Friday, December 30, 2011

கிராமத்து நிழல்கள் (இந்தியா)

கிணற்றில் குடிநீர் எடுக்கும் பெண்கள் 1950 

 
பெங்காலி இன மக்கள்

வட இந்தியா கிராமம்

1870 தென்னிந்திய கிராமம்

1880ல் எடுக்கப்பட்ட புகைப்படம்

இருளர் இன மக்கள் 1880

Sunday, September 4, 2011

மந்திரிகளின் சொத்துவிவரங்கள் ஒரு கண்துடைப்பு

32 கேபினட் மந்திரிகளின் 44 இணை மந்திரிகளின் சொத்து விவரம் அடங்கிய பட்டியலை பிரதமர் அலுவலகம் நேற்று வெளியி்ட்டுள்ளது
முக்கிய மந்திரிகளின் சொத்து விவரம் 
பிரதமர் மன்மோகன் சிங் ரூ 5கோடி
மதிப்பிலான சொத்துக்கள்.
 சண்டிகரில் 90 லட்சம் மதிப்பில் வீடு
டெல்லி குஞ்ச் பகுதியில் ரூ.89 லட்சத்தில் பிளாட்
வங்கியில் வைப்பு தொகை ரூ.2 கோடியே 30 லட்சம் 151 கிராம் தங்க நகைகள்
மருதி 800 கார் மேலும் ஒரு வங்கியில் 11 லட்சம் பணம்
நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி ரூ.3 கோடி
அதி்ல் மனைவி பெயரில் சுமார் 2 கோடி சொத்துகள்
கொல்கத்தாவில் 2 வீடுகள் விவசாய நிலங்கள்
போர்டு ஐகான் கார். அம்பாசிடர் கார்
ஏழை மந்திரி ஏ.கே. அந்தோணி
கேரள முன்னாள் முதல் மந்திரியான இவருக்கு வங்கி சேமிப்பு கணக்கில்
ரூ. 1லட்சத்து 82 ஆயிரம் மேலும் ஒரு வங்கியில் 20 ஆயிரமும் உள்ளது.
மனைவி பெயரில் 15 லட்சம் மதிப்பில் ஒரு வீடு. 5 சென்ட் நிலமும் 25 பவுன் நகை வேகன் கார் அதே நேரத்தில்   1லட்சத்து 36 ஆயிரம் வங்கியில் கடன் உள்ளது.
ப.. சிதம்பரம் 12 கோடி சொத்துக்கள்
குடகு மலையில் 28 லட்சம்  மதிப்பதில் காபி எஸ்டேட்
80 லட்சத்தில் சென்னையில் வீடு 24 லட்சம் மதி்ப்பில் கார்
சரத் பவாருக்கு 13 கோடி 
புனே நகரில் 2 கோடி மதிப்பில் வீடு 96 லட்சம் மதிப்பில் குடியிருப்பு
மராட்டிய மாநிலத்தில் இரண்டு வீடு
பணக்கார மந்திரி கமல்நாத் ரூ. 263 கோடி
மு.க அழகிரி மற்றும் கபில் சிபில் ரூ. 30 சொத்துக்கள்

      இந்த கணக்கை முழுவதும் உண்மையான நம்ப மக்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை இவர்களின் சுவீஸ் வங்கி கணக்குகளை அரசாங்கம் வெளியிட வேண்டும் என்பதே மக்களின் விருப்பம்

Thursday, September 1, 2011

விநாயகர் ஒரு ஆல்ரவுண்டர்

விநாயகர் சில மாறுபட்ட படங்கள்







விநாயகர் சில மாறுபட்ட படங்கள்

Sunday, August 21, 2011

இளைஞர்களின் எழுச்சி நாயகன்

      கடந்த வாரத்தில் நமது காந்திய தேசத்து பாரத பிரதமர் உண்ணாவிரதத்தால் ஒன்றும் பெரிதாக சாதிக்க முடியாது என்று கூறியவர் இன்று அதை தவறு என்று உணர்த்தும் வகையில் அன்னாவின் பின்னால் இருக்கும் கோடிக்கணக்கான மக்களின் எழுச்சியும் ஒட்டுமொத்த நாட்டு மக்களின்  மன வேதனைகளும் அன்னாவிற்கு முழுவதுமாக ஆதரவாக உள்ளது அகிம்சையால் அடைந்த சுதந்திர நாட்டில் மீண்டும் ஒரு சுதந்திர போராட்டம் என்றுதான் கூற வேண்டும்.

           அன்னாஹசாரேயின் கோரிக்கை குறித்து மத்திய அரசு பேச்சு நடத்தவும், அவரது குழுவினருடன் விவாதிக்கவும் தயாராக இருக்கிறது என்று பிரதமர் மன்மோகன்சிங் நேற்று அறிவித்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் அன்னாஹசாரே இன்று ராம்லீலா மைதான உண்ணாவிரத மேடையில் இருந்தவாறு ஆதரவாளர்கள் மத்தியில் கூறியதாவது:-

மத்திய அரசுடன் பேச்சு நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்கள் கதவு மூடப்படவில்லை. திறந்தே வைத்திருக்கிறோம். பேச்சுவார்த்தை மூலமே பிரச்சினையை தீர்க்க முடியும்.   எங்களுடன் பேச்சு நடத்த தயார் என்ற பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்துள்ளார். ஆனால் மத்திய அரசிடம் இருந்து முறைப்படி எந்த தகவலும் வரவில்லை.
 
பாராளுமன்றத்தை விட, மக்கள் மன்றம் மிக உயர்ந்தது. எம்.பி.க்கள் மீது நம்பிக்கை வைத்து மக்கள் அவர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்புகிறார்கள். மக்கள் பணத்தை கொள்ளை அடிக்க அனுப்பவில்லை. இப்போது மக்கள் இந்த விஷயத்தில் விழித்துக் கொண்டார்கள். ஊழலில் ஈடுபட்ட மந்திரிகள் பதவி இழந்துள்ளனர். சிலர் சிறையில் இருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.


அன்னாஹசாரே குழுவைச் சேர்ந்த கெஜ்ரி வால் கூறுகையில், இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம் சார்பில் நடந்த உயர்மட்ட குழு கூட்டத்தில் லோக்பால் மசோதா குறித்து 5 முடிவுகள் எடுக்கப்பட்டன. இதுபற்றி யாருடன் எங்கே போய் பேச்சு நடத்துவது என்று தெரியவில்லை என்றார்.   எம்.பி.க்கள் வீடுகள் முன்பு தர்ணா போராட்டம் நடத்துமாறு ஆதரவாளர்களுக்கு அன்னாஹசாரேயும், கெஜ்ரிவாலும் நேற்று தெரிவித்து இருந்தனர். இப்போது மத்திய மந்திரிகளின் வீடுகள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களின் வீடுகள் முன்பும் தர்ணாவில் ஈடுபடுமாறு ஆதரவாளர்களுக்கு இருவரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
     காங்கிரஸ் கட்சியின் கபட நாடகத்தின் மூலம் இந்த உண்ணாவிரதத்தை நிறுத்தி எரியும் விளக்கை அனைத்துவிடலாம் என மூத்த அரசியல் தலைவர்கள் காய் நகர்த்தி வருகின்றனர் ஆனால் இந்தியாவி்ன் அனைத்து இளைஞர் சக்திகளும் ஒன்று திரண்டு மிகப் பெரிய போரட்டத்தை அரசாங்கம் சந்திக்கும் என்பதில் சந்தேகமில்லை

நம்மால் முடிந்த பங்கை அந்தந்த பகுதிகளில் ஊழலுக்கு எதிராக நடக்கும் போராட்டங்களில் பங்கேற்போம். நாங்கள் காந்தியை பார்த்தது இல்லை ஆனால். இந்த காந்தியவதி (அன்னா ஹசாரே) இந்த நாட்டுக்கு தேவையான காந்தியாக வாழ்கிறார் இளைஞர்கள் மனதில்.
இந்த வயதான இளைஞனுக்கு பின்னால் துணை நிற்போம்