Pages

Saturday, August 31, 2013

தடுமாறும் ஆயாக்கள்



   கடந்த இரண்டு வாரமாக அந்த ஆயா நினைப்பு தான் வரவே காணோம் என்ன ஆயிருக்கும் ஒரு வேளை இப்படியே அப்படியே ஆயிருக்குமோ என மனதில குடைந்து கொண்டு இருந்தது மூன்று வருடமாக தெரியும் வாரத்தில் ஒரு நாள் கண்டிபாக வரும் ஆயா இரண்டு வாரமா காணோம் அதை எங்குன்னு போய் தேட முடியும் இந்த பாட்டி  தனது பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு நாடோடி வாழ்கை முறைதான் ஒரு வழியா நேற்று பொறுமையாக நொண்டி நொண்டி வருது என்ன ஆயா என்னாச்சு இல்லாய்யா விழுந்துட்டான்னு கால்ல பாருன்னு அடிபட்ட இடத்தை காண்பிக்குது இதனால உடம்பு சரியில்லை எழுதிருக்கவே முடியலை சேறு தண்ணி இல்லாம கஷ்டபட்ட ய்யா என்று  சொன்னார். வரும்பொழுது எல்லாம் எங்கள் கடையில் உள்ள எல்லாரையும் விசாரிப்பார்.   அரக்கோணத்துல கோவில்களில் தான் தாங்குவராம் அங்கிருந்து ரெயில் தான் வருவாராம்....  

Thursday, August 1, 2013

காணாமல் போன கிராமத்தின் நிழல்கள்.....


மண் சாலையில்  பயணித்தும் விளையாடியும் வளர்ந்த கால்கள்
இன்று சிமெண்ட் சாலையாக இருந்தும் ஏனோ  
அதில் செல்ல மனிதர்கள் தான் இல்லை.....

நாங்கள் பந்தடித்து வளர்ந்த இந்த தெருவில் பல பெரிசுகளின்
 ஏச்சுகளும் பேச்சுகளும் தான் அதிகம்
ஏனே இன்று அந்த பெரிசுகளும் இல்லை
 யாருமற்று கிடக்கிறது இந்த சாலை..........

மாலை நேரத்தில் கை பம்பில் தண்ணீர் கொண்டு வர  
சொல்லும்  பெண்களுக்கு  எங்களின் பந்தடிகள் பழகிய ஒன்று  
அதில் புத்துார் கட்டும் ஒன்றிரண்டு.......

இன்று பல தண்ணீர் குழாய்கள் இருந்தும்
 தண்ணீர்  பிடிக்க கூட்டம் இல்லை......

எங்களது பல  கார்க் பந்துகள் வீட்டின் ஓட்டை உடைத்தது
  சண்டையிட்டும் பந்தை வாங்க முடியாது.......

இன்று பல வீடுகள் இடிந்தும் வீழுந்தும் கொண்டு இருக்கிறது


ஒவ்வொரு பருவத்திலும் ஒன்பது குழந்தைகளாது இருக்கும் இன்று
ஒரு குழந்தைக்கும் விளையாட யாரும் இல்லை....

ஊர் கூடி பாறையில் நடக்கும் பஞ்சாயத்து  இன்று பாறைமட்டும் 
அனாதையாக  நிற்கிறது பஞ்சாயத்து இல்லாமல்....

மார்கழி மாத பூ கோலங்காளில் நடனம் ஆடும் தெருக்கள் 
எல்லாம் மயானமாய் காட்சியளிக்கிறது.......

பசுமையான இலைகளுடன் நிழல் தரும் மரங்கள் எல்லாம் தன் 
கண்ணீராக இலைகள் உதிர்த்து  சருகுகளுடன் சாக காத்திருக்கிறது...
இந்த மனிதர்களற்ற இந்த கிராமத்தில் ....

தேய்பிறையான கிராமங்கள்
வளர்பிறையான நகரத்தை பார்த்து ஏங்குகிறது 
என்னை அழித்து கொண்டு இருக்கிறாய் என்று.......

ஓடிக்கொண்டே இருக்கிறான் மனிதன் மட்டும் ந(ர)கரத்தில்.....