Pages

Showing posts with label எனது கிராமம். Show all posts
Showing posts with label எனது கிராமம். Show all posts

Saturday, December 1, 2012

காக்கையின் கிராமம்


சென்னையிலிருந்து 150 கி.மி எங்கள் கிராமம் சென்னை வந்து 10 ஆண்டுகள் நெருங்கிவிட்டது.  படிப்படியாக என் கிராமத்து பயணமும் குறைந்து விட்டது. கடைசியாக உள்ளாட்சித்தேர்தல் ஓட்டு போட்டு  வந்த பிறகு இப்போது தான் போகும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. பெரும்பாலும் பொங்கலுக்கு போவோம் ஆனால் இந்த தடவை போக முடியுமா என்பது சந்தேகம் ஏற்பட ஒரு நிகழ்ச்சிகாக வந்தாவசி வரை சென்றோம் அங்கிருந்து 40 கி.மி தான் போக முடிவு செய்து 2வீலரில் பயணம் காலை 7.00 மணிக்கு கிளம்பி பைபாஸ் சாலையில வண்டி பறந்து கொண்டு காஞ்சிபுரம் அடைந்தது. அதற்கு பிறகு ஒற்றை வழிப்பாதை கிராமத்தின் சாரலில் பயணம் 5 கி.மி ஒரு கிராமம் என எங்களுடைய கிராமத்து நினைவுகளை  ஞாபகப்படுத்தியே வந்தது காலியான சாலைகள் சத்தம் இல்லாமல் டூவிலரில் ஒரு சுகமான பயணம் தான் கிராமத்தை நோக்கி நகரும் போது பரபரப்புகள் குறைந்து இயல்பான கிராமத்து தன்மைக்குள் புகுந்துவிடுகிறோம்.  



சில நாட்களுக்கு முன் பொய்த மழையால் எங்கும் பசுமையாக தான் இருக்கிறது நிலங்கள்.  அங்கங்கே இந்த சென்னை பண முதலைகள் சில இடங்களை ஆக்கிரமித்து பிளாட் போட்டு விற்பனை செய்து கொண்டு இருக்கிறார்கள். 12 லிருந்து 15 மணி நேரம் மின்சாரம் இல்லை என்ன பண்ண முடியும் இந்த சிறு விவசாயி விளை நிலங்களை ரியல் அதிபர்களின் கைக்கு மாறுகிறது. நேரபரபரப்புக்குள் சிக்கி தவிக்காத கிராமத்து மக்களை பார்க்கும் பொழுது நிச்சயம் மனம் ஏங்கும்.  10 மணிக்கு வந்தவாசி அடைந்து நிகழ்ச்சி முடித்து விட்டு 1 மணிக்கு எங்கள் கிராமத்தை நோக்கி பயணம் ஆரம்பித்தது.
மூடு விழாவை ஏதிர்நோக்கியுள்ள நான் படித்த ஆரம்பபள்ளி