Pages

Saturday, July 30, 2011

பதிவர்கள் மன உலைச்சலில் இருந்து விடுபட

பதிவர்கள் என்ன எழுதுவது என்று யோசித்து அதிக மனஉலைச்சலி்ல் இருப்பது தெரிந்த விஷயம் தான் எனக்காகவும் அவர்களுக்காகவும் சில சிந்தனைகள். 

1.கடைசி நிமிடப் பரபரப்பைத் தவிருங்கள்.

எங்காவது செல்ல வேண்டுமென்றால் ஓர் அரை மணி நேரம் முன்பாகவே கிளம்புவது, காலையில் ஒரு பதினைந்து நிமிடம் முன்னதாகவே எழுந்து விடுதல், பயணத்திற்குத் தேவையானவற்றை முந்தின நாளே எடுத்து வைத்துக்கொள்வது, போன்றவற்றை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

2. ஒரு நேரம் ஒரு வேலையை மட்டுமே செய்யுங்கள்.

எட்டு வேலைகளைப் பற்றி சிந்தித்துக்கொண்டு ஒன்பதாவது வேலையைச் செய்துகொண்டிருந்தால் உங்கள் மன அழுத்தம் அதிகரிக்கும். என்ன செய்யவேண்டும் என்பதைப் பட்டியலிடுங்கள். மிக முக்கியமான விஷயங்களை முதலில் செய்யுங்கள். எல்லா வேலைகளையும் செய்ய வேண்டுமென்ற கட்டாயமில்லை. போதுமான ஓய்வு நேரம் உங்கள் பட்டியலில் நிச்சயம் இருக்கட்டும். (ஒரு நாளைக்கு ஒரு பதிவு மட்டுமே வெளியிடுங்கள் 2 அல்லது 3 பதிவுகள் வெளியிட்டு மற்றவர்களை மன உளைச்சல் உட்படுத்தாதீர்)

3. உங்களுக்கு மன அழுத்தம் தரக்கூடிய விஷயங்களை ஒதுக்குங்கள்.

இரைச்சல், வெளிச்சம், தாமதம், சிலவகை வாசனைகள், சில நபர்கள்………. இத்தியாதி….. இத்தியாதி என இந்தப்பட்டியல் எவ்வளவு பெரிதாக வேண்டுமானால் இருக்கலாம். முடிந்தவரை ஒதுக்குங்கள். ஒதுக்க முடியாத சூழல்களில் நீங்களே கொஞ்சம் ஒதுங்கிப் போய் விடுங்கள். (பிரபலமான இடுகைகள் பக்கம் போனால் நிச்சயம் மன அழுத்தம் உண்டாகும்)

4. உடற்பயிற்சி செய்யுங்கள்.

ஆரோக்யமான உடல், மன அழுத்தத்தின் எதிரி. உடலில் ரத்த ஓட்டமும், ஆக்சிஜன் விநியோகமும் சீராக இருக்கும்போது மன அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது. எனவே மூச்சுப் பயிற்சி போன்றவையும், வாக்கிங், ஜாகிங், போன்றவையும் உங்கள் தினசரி அட்டவணையில் இடம் பெறட்டும்.
ஒரு வருடத்தில் 5 சிறந்த பதிவுகளையாவது  போட வேண்டும் கடவுளை தினம் வேண்டிக்கொள்ளுங்கள்  விரைவில் நிறைவேறும்

5. தீய பழக்கங்களை கை கழுவி விடுங்கள்.

புகை, மது, போதை போன்றவைகள் மன அழுத்தத்தை அதிகரிக்கும் காரணிகள்.
(சுட்ட பதிவு போடுவது கில்மா பதிவு வெளியிடுவது)

6. எதிர்பார்ப்புகளைக் குறைத்துக்கொள்ளுங்கள்.

திருப்தியடையும் மனநிலை இருந்தால் வாழ்க்கை அழகாகும். குழந்தைகளுக்கு மன அழுத்தம் வருவதில்லை. காரணம் அவர்கள் எதையும் எதிர்பார்ப்பதில்லை. (எல்லா பதிவுகளுக்கும் பாராட்டுக்கள் வரும் என்று எதிர்பார்கக வேண்டாம் சில திட்டுக்களையும் வரும்) இந்த பதிவுக்கு எவ்வளவு வரபோகுதோ  தெரியவில்லை

7. ஒரு நல்ல பொழுதுபோக்கை கைவசம் வைத்திருங்கள்.

உங்களுக்கு ரொம்பவே பிடித்த விஷயமாய் அது இருக்கட்டும். உங்களுடைய மனதை உற்சாகமாகவும், ஆனந்தமாகவும் வைத்திருக்க அது உதவும். குழந்தைகளுடன் பொழுதைக் கழிப்பது, செல்லப் பிராணிகளுடன் விளையாடுவது என தினமும் கொஞ்ச நேரம் செலவிடுங்கள். சில நேரம் மெக்கை பதிவை போடுவதாக இருக்கலாம். (இதைபோல)

8. பாசிடிவ் சிந்தனைகளை மனதில் கொண்டிருங்கள்.

நடந்து முடிந்த நிகழ்வுகளின் மோசமான பக்கங்களை (மெக்கையான பதிவுகளை பற்றி ) அடிக்கடி நினைத்துக் கொண்டிருக்காதீர்கள்.

9. சின்னச்சின்ன வெற்றிகளைக்கூட கொண்டாடுங்கள்.

சின்னச் சின்ன வெற்றிகளின் கூட்டுத்தொகையே பெரிய வெற்றி என்பதை மனதில் எழுதுங்கள் (ஆமாம் உங்களை பின் தொடரும் பதிவர்களை நினைத்து கொண்டாடுங்கள் பாவம் இந்த சந்தேஷமாவது கிடைக்கட்டும்)

10. பிறருடன் நம்மை ஒப்பிடாதீர்கள்.
நிறைய ஓட்டுக்கள். பின்னூட்டங்கள் அவரைபோல நமக்கு இல்லையே என்று
பிறருடன் நம்மை ஒப்பிட்டுப் பார்ப்பது தேவையற்ற மன அழுத்தத்தை கொண்டு வந்து சேர்க்கும். அவர்களுடைய வெற்றி, தோற்றம், அந்தஸ்து, பணம் என எதை ஒப்பிட்டாலும் அது உங்களுக்கு மன அழுத்தத்தையே தரும்
உங்களின் வீண் விமசர்னங்கள் வரவேற்கப்படுகின்றன
நன்றி

Friday, July 29, 2011

ஜே.ஆர்.டி. டாடா இந்திய தொழில் துறையின் ஒரு சகாப்தம்டாடா என்ற ஒரு நிறுவனம் மட்டும் இந்தியாவில் இல்லையென்றால் இந்தியத் தொழில்துறை பல ஆண்டுகள் பின்னோக்கிய நிலையில் இருந்திருக்கும்.

அத்தகைய சக்தி வாய்ந்த நிறுவனத்தில் ஜே.ஆர்.டி.டாடா   53 வருடங்களாக தலைவராக நிறுவனத்தை நிர்வாகித்து வந்தார். அரை நூற்றாண்டு காலத்தில் பல தொழில்களை உருவாக்கி அரசங்கத்திற்கு அடுத்தபடியாக வேலை வாய்பை உருவாக்கி தந்தவர். இந்தியர் அனைவரும் டாடா என்ற நிறுத்தின் பெயரை கூற வைத்தவர்.
தொழில் துறையில் ஜே.ஆர்.டி.டாடா என்ற பெயரை கூறினால் அனைவரும் எழுந்து நிற்பர் அத்தகைய மரியாதை தொழில் துறையில் அவர் பெற்றிருந்தார்.

1904 ஆம் ஆண்டு பிரான்சிஸ் பிறந்து பள்ளி படிப்பு அங்கே முடித்து கேம்ப்ரிட்ஜ் பல்கலைகழகத்தில் பட்டம் பயில வந்தஆவர் பாதியிலே அதை கைவிட்டு 21ம் வயதில் டாடா ஸ்டில் நிறுவனத்தில் சக ஊழியர்களுடன் வேலை செய்தார்.
தன்னுடைய அசாத்திய திறமையினால் அனைத்தையும் விரைவிலேயே கற்றுக்கொண்டவர் ஜே.ஆர்.டி. 1932ல் இந்தியாவில் முதன் முதலாக டாடா ஏர்லைன்ஸ் என்ற விமான சேவையை தொடக்கி அக்டோபர் 15ம்தேதி விண்ணில் பறந்தது அதை ஓட்டியவர் ஜே.ஆர்.டி தான்.  திறமையான இளைஞர்களை கண்டுபிடித்து அவர்களை டாடாவினுள் அழைத்து வந்து அவர்களுக்கு முக்கிய பொறுப்புகளை நம்பி ஒப்படைப்பது இதுவே அவரது பல தொழில் வளர்ச்சிக்கு வெற்றியாக அமைந்தது.

1938ஆம் ஆண்டு டாடா நிறுவனத்தின் ஒட்டு மொத்த பொறுப்பேற்று இரண்டு தலைமுறை ஊழியர்கள் தலைவர்கள் அவருடைய கட்டுப்பாட்டில் இருந்து விலகாமல் டாடா நிறுவனங்களுக்கு மட்டுமின்றி இந்திய தொழில் துறைக்கே அவருடைய வழிகாட்டுதால் மிகப்பெரிய பலமாக அமைந்தது இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு உள்நாட்டு உற்பத்தி  தேவை அதிகரிக்க அப்போதைய பிரதமர் நேருவுடன் இணைந்து இந்தியாவில் உற்பத்தியை அதிகரிக்க செய்தவர் ஜே.ஆர்.டி. இந்திய தொழில் துறை வளர்ச்சிக்காக அவர் ஆற்றிய பங்கிற்கு அவருக்கு 1992 ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது  பெறும் முதல் தொழில் அதிபர் ஜே.ஆர்.டி. தான்.
உள்நாட்டு வெளிநாட்டு சந்தைகளையும் அவர் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார். சின்ன சிறு மாற்றம் கூட அவர் கண்ணில் இருந்து தப்பியதில்லை. ஒரு தொழிலில் வரும் லாபத்தை கொண்டு அடுத்த ஒரு தொழிலை உருவாக்கி பலருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடு்ப்பது தான் அவர் வழக்கமாக கொண்டிருந்தார்.
தொழில் துறையின் லாபத்தை விட அதன் மீது வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் சிறந்த மதிப்பே உயர்ந்தது என்பார்.
இன்போசி்ஸ் தலைவர் நாராணமூர்த்தியின் துணைவியர் சுதா நாராயணன் ஆரம்ப காலத்தில் டாடா நிறுவனத்தில் தான் வேலை செய்தார் அந்த நிறுவனத்தை விட்டு நிற்கும் தருவாயில் ஜே.ஆர்.டி.யை அவர் சந்தித்தார் அப்பொழுது ஜே.ஆர்.டி. அவருக்கு வாழ்த்து கூறி நீ எந்த சமூகத்தால் பலனடைகிறாயே அதை அதே சமூகத்திற்கு திருப்பி அளிக்க வேண்டும் என்று கூறினார் அதுவே பின் நாளில் இன்போசீ்ஸ் அறக்கட்டளை உருவாக காரணமாக இருந்தது என்று  சுதா நாராயணன் அவர் ஒரு பத்திரி்க்கையாளர் சந்திப்பில் கூறினார்.

ஜே.ஆர்.டி. தொழில் துறையில் மட்டுமின்றி சமூக நலனிலும் இந்தியாவின் மீதும் கடைசி வரை மிகுந்த அக்கரை கொண்ட மனிதராகவே நடந்து கொண்டார் இந்த சாதனை மனிதன்.

Thursday, July 28, 2011

என்னவள்

உன்னுடன் பேசியதை விட 
சண்டையிட்ட நாட்கள் தான் அதிகம்
உன் கண்கள் பேசியதை கூட 
ஏனோ வார்த்தைகளால் பேச மறுத்துவிட்டாய்
உன் மௌன சிரி்ப்பிலே 
என் வார்த்தைகளுக்கு பதில் கூறினாய்
இப்பொழுது ஏனோ விலகி விலகி செல்கிறாய் 
என் இதயம் பின்னோக்கிய உன் நினைகளுடன் 
சுற்றிகொண்டிருக்க
என் கண்கள் தினமும் உன்னை
தேடிக் கொண்டுதான் இருக்கிறது
ஒரு போதும் நீ என்னை கண்டுகொள்வதேயில்லை
உன் தொலைப்பேசியின் ஹலோ என்ற 
ஒற்றை குரலை கேட்டுகொண்டுதான் இருக்கிறேன்
உனக்கும் எனக்கும் மத்தியில் 
காலத்தின் சிறு இடைவெளி தான்
காத்திருப்பேன் உன் மௌன சிரிப்பிற்காகவே 
என்னவளே.........

Tuesday, July 26, 2011

உலகிலேயே இந்தியாவில் தான் சினிமா டிக்கெட் விலை அதிகம்

த்து வருடத்துக்கு முன்பு  வரை உலகிலேயே மிகக்குறைவான சினிமா கட்டணம் இந்தியாவில் தான் இருந்தது.

சினிமா டிக்கெட் விலையை எப்படி கணக்கிட்டு குறைவு என்று சொல்கிறார்கள் என்றால் அதற்கு ஒரு அளவீடு வைத்திருக்கிறார்கள் அதன்படி சினிமா டிக்கெட்டின் விலை அந்நாட்டின் மனித உழைப்புக்கு கொடுக்கப்படும் சம்பளம் இவற்றை அடிப்படையாக கொண்டு அளவீடுகள் நிர்ணயிக்கப்படுகின்றன. 

அந்த அளவீட்டுப்படி இந்தியாவில்  ஒருவர் சினிமா பார்ப்பதற்கு வெறும் 16 நிமிடம் மட்டும் உழைத்தால் போதும். வேறு எந்த நாட்டிலும் இவ்வளவு குறைந்த உழைப்பில் ஒரு சினிமா பார்த்து விட முடியாது அமெரிக்காவில் ஒரு சினிமா பார்க்க  24 நிமிடம் உழைக்க வேண்டும் அதாவது இந்த கணக்கு பத்து வருட முந்தையது இந்தியாவில் அப்போதைய டிக்கெட் விலை ரூ.8 ஆக இருந்தது  ஆனால் இன்று நிலைமையோ தலைகீழ் இன்றைக்கு டிக்கெட் விலை ரூ.100ல் தொடங்கி 350 வரை என்று இமாலய அளவை தொட்டு நிற்கிறது. ஒரு முறை குடும்பத்துடன் சினிமா தியேட்டருக்கு போய் வர சாராசரி இந்தியர் தனது மாத வருமானத்தில் 27 சதவீதம் வரை செலவழிக்கிறார்கள். இந்தியர்களின் இன்றைய சாராசரி மாத வருமானம் ரூ.3700 மட்டுமே இலட்சங்கள் இல்லை ஒருவர் மட்டும் தியேட்டருக்கு சென்று வருவதாக இருந்தாலும் தனது வருமானத்தில் 4 சதவீதம் வரை செலவழிக்க வேண்டும்.

 இதே அமெரிக்காவை எடுத்துக் கொண்டால் அங்கு சாராசரி மாத வருமானம் 3400 அமெரிக்க டாலர். அங்கு டிக்கெட் விலை 9 டாலர் முதல் 10 டாலர் வரை தான் அதிகபட்சமாக 25 டாலர் செலவழிக்கிறார்கள் ஒரு அமெரிக்கர் சினிமா பார்க்க தனது வருமானத்தில் 0.30 சதவீதம் மட்டுமே செலவழிக்கிறார்கள். சினிமா தியேட்டருக்கு சென்று வர தனது சம்பளத்தில் ஒரு சதவீதம் மட்டுமே செலவழிக்கிறார்கள். இங்கிலந்திலும் அமெரிக்கவின் நிலையே உள்ளது.
 
சரி சினிமா தியேட்டர் போக வேண்டாம் கேபிள் டி.வியில் படம் பார்க்கலாம் என்றால் இந்தியாவின் நிலைமை அதிலும் மெச்சிக் கொள்ளும்  அளவில் இல்லை டி.டி.எச் இணைப்பு மாதம் 150 லிருந்து 350 வரை செலவாகிறது. இது இந்தியரின் வருமானத்தில் 10 சதவீதம் அமெரிக்கர்கள் தனது சம்பளத்தில் 3 சதவீதம் மட்டுமே செலவாகிறது. இங்கிலாந்திலும் 5 சதவீதம் குறைவாகவே செலவாகிறது.
ஆக மொத்தம் உலகிலேயே இந்தியர்கள் தான் சினிமா டிக்கெட் மற்றும் பொழுது போக்கிற்காக அதிகம் செலவு செய்கின்றனர் வளர்ந்த நாடுகள் கூட பொழுது போக்கிற்காக குறைவாகவே செலவு செய்கின்றார்கள்
இப்படியே போன இந்தியா எப்பதான் வல்லரசு ஆவது? ஆம் சினிமாக்காரர்கள் தான் வல்லரசு ஆவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

(5வது படிக்கும் போது எங்க ஊர்  சினிமா தியேட்டரில் (டேண்ட்) ரூ.2. 50  பைசாவுக்கு தரையிலும் ரூ.3.50 காசுக்கு சேரில் படம் பார்த்தேன் ஞாபகம் வருது நேற்று சென்னையில் ரூ.120 கொடுத்து படம் பார்த்தேன்)


Sunday, July 24, 2011

வியாபாரத்தினால் விபரிதமான கல்வி

வெளிநாட்டுப் பொருள்களை வாங்காதீர், உள்நாட்டுப் பொருள்களை வாங்குவீர்' "வெள்ளையனே வெளியேறு' போன்ற வாசகங்களைக் கூறி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி, நம் நாட்டின் விடுதலைக்காகப் பல போராட்டங்களை நடத்தி, உயிர்த் தியாகம் செய்து அதில் வெற்றியும் கண்டனர் நம் நாட்டின் தியாகிகள்.

இத்தகைய நாட்டில், முக்கியமாகத் தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் சேர்க்கும் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்கக் கோரி ஆசிரியர்கள் வீதிகள்தோறும் தட்டிகளை ஏந்தியும், துண்டுப்பிரசுரங்களை விநியோகித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையைப் பார்த்தால் பரிதாபமாகத்தான் இருக்கிறது.

ஏன் இந்த நிலை? இதற்கு யார் காரணம்? அரசுப் பள்ளி ஆசிரியர்களும், கல்வித் துறை அதிகாரிகளும் அவர்களது குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்த்தால் தரமான கல்வி கிடைக்காது என்று எண்ணி மெட்ரிக் பள்ளியிலும், சிபிஎஸ்இ பள்ளியிலும் படிக்க வைக்கின்றனர். தங்கள் மீதே இவர்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் கல்வித் துறையையும், அரசு ஆசிரியர்களையும் மக்கள் எப்படி நம்புவார்கள்?

தமிழகத்தில் எத்தனை ஆசிரியர்களின் குழந்தைகள் அரசுப் பள்ளியில் படிக்கின்றனர்? எத்தனை ஆசிரியர்கள் தனது மனைவி பெயரிலோ அல்லது உறவினர் பெயரிலோ பள்ளி, கல்லூரிகளை நடத்தி வருகின்றனர்? கிராமங்களில் உள்ள பள்ளிகளில், சில ஆசிரியர்களை தவிர, காலையில் வந்து பதிவேட்டில் கையெழுத்துப் போட்டுவிட்டு தங்களது சொந்தத் தொழிலைக் கவனிக்க எத்தனை ஆசிரியர்கள் செல்கின்றனர்? இதை எல்லாம் விசாரணை செய்து பார்த்தால் அதிர்ச்சித் தகவல்தான் மிஞ்சும்.

அரசிடம் கைநீட்டி ஊதியம் பெறும் இவர்களே தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளியில் படிக்கவைக்கத் தயாராக இல்லை என்றால், எந்த தைரியத்தில் மற்றவர்களின் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்கின்றனர்?

ஒரு சாதாரண கூலித்தொழிலாளிகூட தனது குழந்தையைத் தனியார் பள்ளியில்தான் சேர்க்க வேண்டும் என்று எண்ணும் நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார்.

ஓராசிரியர் தனது குழந்தையை அரசுப் பள்ளியில் சேர்க்காமல் தனியார் பள்ளியில் சேர்க்கிறார் என்றால், அரசுப் பள்ளியில் தரமான கல்வி இல்லை என்ற எண்ணத்திலா அல்லது அரசுப் பள்ளியில் போதிய அடிப்படை வசதி இல்லாமலா?

சரி, தரமான கல்வி இல்லை என்று கூறினால், அதற்கு ஆசிரியர்கள்தானே காரணம். மேலும், இன்றைய தொழில்நுட்ப உலகில் அடிப்படைத் தேவையான கணினி அறிவு மிக முக்கியமான ஒன்றாகும். இதைக் கருத்தில்கொண்டு அனைத்து அரசுப் பள்ளிகளிலும் தனியார் பள்ளிகளுக்கு இணையானதாக இல்லாவிட்டாலும் அதில் பாதியாவது அடிப்படைத் தேவைகளை பூர்த்திசெய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இருப்பினும், இப்படிப்பட்ட சூழலில் அரசுப் பள்ளியில் தனது குழந்தையைச் சேர்த்தது மட்டும் இல்லாமல், தனது குழந்தைக்கு மதிய சத்துணவும், அரசு கொடுக்கும் பள்ளிச் சீருடையும் வழங்குமாறு சம்பந்தப்பட்ட துவக்கப் பள்ளித் தலைமை ஆசிரியரைக் கேட்டுக் கொண்டுள்ளார், ஈரோடு மாவட்ட ஆட்சியர் ஆனந்தகுமார். இது மனதுக்கு மகிழ்ச்சி தரும் செய்திதான். ஆனால், இந்தக் குழந்தையை பன்னிரண்டாம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படிக்க வைக்க முடியுமா?

ஏனென்றால், ஆட்சியரின் குழந்தையை அரசுப் பள்ளியில் சேர்த்த மறுநாள் முதலே பள்ளி வளாகம், வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டன. மதிய உணவுக்குப் பயன்படுத்தப்படும் அரிசி, பருப்பை நன்கு கழுவிப் பயன்படுத்த வேண்டும். சத்துணவில் காய்கறிகளை அதிகப்படுத்துதல், சத்துணவு சமைக்கும் சமையல் ஆள்களை கைகளைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும், ஆசிரியர்கள் முறையாக வகுப்புக்குச் செல்ல வேண்டும் என்று பல கோணங்களில் அரசு கல்வித் துறை, சுகாதாரத் துறை அலுவலர்கள் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

ஒரு மாவட்ட ஆட்சியரின் மகள் அரசுப் பள்ளியில் சேர்க்கப்பட்டதால், மேலே குறிப்பிட்ட அனைத்தும் அப்பள்ளியின் மற்ற மாணவர்களுக்கும் கிடைக்கிறது. ஆகையால் ஓர் ஆட்சியர் நடவடிக்கையால் ஒர் அரசுப் பள்ளி புதுப்பொலிவு பெறுவதுடன் அப்பள்ளி மாணவர்களுக்குத் தரமான கல்வி கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

இவரைப்போன்று அனைத்து அரசுத் துறை அதிகாரிகள், அலுவலர்களும், ஆசிரியர்களும் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளியில் படிக்க வைத்தால் தமிழகத்தில் உள்ள அனைத்துத் தரப்பு மாணவர்களுக்கும் தரமான கல்வி கிடைக்கும். அரசுப் பள்ளியில் தரமான கல்வி கிடைக்கும் என்ற நம்பிக்கை மக்களுக்கு ஏற்படும். விழிப்புணர்வு பேரணியோ அல்லது துண்டுப்பிரசுரங்களை விநியோகிக்கும் நிலையோ ஏற்படாது.

இதற்கு அரசு ஆசிரியர்களின் குழந்தைகளை அரசுப் பள்ளி, கல்லூரிகளில்தான் படிக்க வைக்க வேண்டும் என்ற சட்டத்தை மாநில அரசு கொண்டுவர வேண்டும். இச்சட்டத்தைக் கொண்டுவந்தால் கல்வித் துறையில் ஏற்படும் பல பிரச்னைக்குத் தீர்வு ஏற்படும்.

சமச்சீர் கல்வி புத்தகம் உடனடியாக அளிக்க வேண்டும் என்று உயர்நீதி மன்றம் உச்ச நீதி மன்ற கூறிய பிறகும் அரசு அதை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தி வருவதற்கு பின்னால் எத்தனை முதலைகள் எவ்வளவு பணம் கொடுத்தாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்று முயற்சி செய்கிறார்கள்.  என்பதை அனைவரும் அறிந்ததே. அத்தனையும் இந்த பாவப்பட்ட பள்ளி மாணவர்களிடம் வசூல் செய்து விடாலம் என்று அவர்களுக்குதான தெரியாது.

அரசாங்கமே அரசு பள்ளிகளை இழுத்து மூடிவருவதும் தனியார் பள்ளிகளை ஊக்குவிப்பதும் பல வருடங்களாக நடந்து வருகிறது.
 
அமைச்சர், எம்எல்ஏ, அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள், கூலித் தொழிலாளிகள், பொதுமக்கள் என அனைவரது குழந்தைகளும் ஒன்றிணைந்து கைகோத்து அரசுப் பள்ளிக்குச் சென்றால்தான் சமத்துவம் பிறக்கும், தரமான கல்வி கிடைக்கும், நாடு செழிக்கும், புதுமை பிறக்கும்.

Friday, July 22, 2011

தண்ணீர் சுத்திகரிப்பு ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்

          ந்தியாவில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு சாதனங்கள்,சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் தன்மையுடையவை என்றும் அபாயகரமானவையாம். இந்திய நுகர்வோர் இயக்கத்தைச் சேர்ந்தவரும், தன்னார்வலருமான பிஜோன் மிஸ்ரா எழுதிய குடிநீர் சுத்திகரிப்பான்களில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறித்த புத்தகம் சென்னையில் சென்ற வாரம் வெளியிடப்பட்டது. இந்தியாவில் 80 சதவீத நோய்களுக்கு முக்கிய காரணம் சுகாதாரமற்ற குடிநீரே ஆகும். பெரும்பகுதி மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை. குடிநீர் சுத்திகரிப்பு சாதனங்களை தயாரிக்கும் நிறுவனங்கள், நுகர்வோரை தவறாக திசை திருப்புகின்றன. இதற்கு பொதுமக்களிடையே சுகாதாரமான குடிநீர் குறித்த விழிப்புணர்வு இல்லாததே காரணமாகும். இந்தியாவில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு சாதன தயாரிப்பு நிறுவனங்கள், சர்வதேச அளவில் பின்பற்றப்படும் விதிமுறைகளை பின்பற்றுவதில்லை. மேலும், அந்த நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளில் ரசாயனம் மூலம் குடிநீரை சுத்திகரிக்கச் செய்யும் தொழில்நுட்பத்தைப் பின்பற்றுகின்றன. 

இது பொதுமக்களுக்கு மிகுந்த சுகாதார சீர்கேட்டையும் ஆபத்தையும் ஏற்படுத்தக்கூடியது. இந்த நிறுவனங்கள் அனைத்துமே குறைந்த தரத்திலான சுத்தகரிக்கப்பட்ட தண்ணீரை அளிக்கின்றன. இத்துடன் தங்களது தயாரிப்புகளில் எந்தெந்த ரசாயனம், எந்த விகிதத்தில் பயன்படுத்தப்படுகிறது என்பது பற்றி தெளிவாக குறிப்பிடுவதில்லை. இவற்றையெல்லாம் கண்காணிப்பதற்கான கடுமையான பாதுகாப்புச் சட்டங்கள் இல்லாத காரணத்தால்தான், தனியார் குடிநீர் சுத்திகரிப்பு சாதன தயாரிப்பு நிறுவனங்கள் தரமற்ற சுத்திகரிப்பானை நுகர்வோருக்கு விற்பனை செய்து லாபம் பார்க்கின்றன.சுத்திகரிப்பான்களில் பயன்படுத்தப்படும் குளோரின் உள்ளிட்ட ரசாயனப் பொருள்களின் அளவை கண்காணிக்க வேண்டும்.

நீரை சுத்திகரிக்கப் பயன்படுத்தப்படும் இதர ரசாயனப் பொருள்கள் சுத்திகரிப்பானையே கெடுத்துவிடும். இதனால் சுத்திகரிப்பானில் கரையும் இதர பொருள்களும், குடிநீரில் கலந்து விடும் அபாயம் உள்ளது.கடுமையான விதிகள் வேண்டும்: குடிநீர் சுத்திகரிப்பான்களின் தரத்தை வரையறை செய்வதற்கு இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம். எனவே நுகர்வோர் நலன் கருதி, பிற நாடுகளில் உள்ளதைப் போன்ற கடுமையான விதிகளை அமல்படுத்திட வேண்டும். குடிநீர் சுத்திகரிப்பு சாதனங்களில் உள்ள குறைபாடுகள் குறித்து அறிவியல் ரீதியில் தான் கண்டறிந்த ஆய்வு தொடர்பான தகவல்களை ஆதாரத்துடன் தனது நூலில் பிஜோன் மிஸ்ரா குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு சாதனங்கள்,சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் தன்மையுடையவை என்றும் அபாயகரமானவையாம்.இந்திய நுகர்வோர் இயக்கத்தைச் சேர்ந்தவரும், தன்னார்வலருமான பிஜோன் மிஸ்ரா எழுதிய குடிநீர் சுத்திகரிப்பான்களில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறித்த புத்தகம் சென்னையில் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. இந்தியாவில் 80 சதவீத நோய்களுக்கு முக்கிய காரணம் சுகாதாரமற்ற குடிநீரே ஆகும். பெரும்பகுதி மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை. குடிநீர் சுத்திகரிப்பு சாதனங்களை தயாரிக்கும் நிறுவனங்கள், நுகர்வோரை தவறாக திசை திருப்புகின்றன. இதற்கு பொதுமக்களிடையே சுகாதாரமான குடிநீர் குறித்த விழிப்புணர்வு இல்லாததே காரணமாகும். இந்தியாவில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு சாதன தயாரிப்பு நிறுவனங்கள், சர்வதேச அளவில் பின்பற்றப்படும் விதிமுறைகளை பின்பற்றுவதில்லை. மேலும், அந்த நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளில் ரசாயனம் மூலம் குடிநீரை சுத்திகரிக்கச் செய்யும் தொழில்நுட்பத்தைப் பின்பற்றுகின்றன. இது பொதுமக்களுக்கு மிகுந்த சுகாதார சீர்கேட்டையும் ஆபத்தையும் ஏற்படுத்தக்கூடியது. இந்த நிறுவனங்கள் அனைத்துமே குறைந்த தரத்திலான சுத்தகரிக்கப்பட்ட தண்ணீரை அளிக்கின்றன. இத்துடன் தங்களது தயாரிப்புகளில் எந்தெந்த ரசாயனம், எந்த விகிதத்தில் பயன்படுத்தப்படுகிறது என்பது பற்றி தெளிவாக குறிப்பிடுவதில்லை.

இவற்றையெல்லாம் கண்காணிப்பதற்கான கடுமையான பாதுகாப்புச் சட்டங்கள் இல்லாத காரணத்தால்தான், தனியார் குடிநீர் சுத்திகரிப்பு சாதன தயாரிப்பு நிறுவனங்கள் தரமற்ற சுத்திகரிப்பானை நுகர்வோருக்கு விற்பனை செய்து லாபம் பார்க்கின்றன.சுத்திகரிப்பான்களில் பயன்படுத்தப்படும் குளோரின் உள்ளிட்ட ரசாயனப் பொருள்களின் அளவை கண்காணிக்க வேண்டும்.நீரை சுத்திகரிக்கப் பயன்படுத்தப்படும் இதர ரசாயனப் பொருள்கள் சுத்திகரிப்பானையே கெடுத்துவிடும். இதனால் சுத்திகரிப்பானில் கரையும் இதர பொருள்களும், குடிநீரில் கலந்து விடும் அபாயம் உள்ளது.கடுமையான விதிகள் வேண்டும்: குடிநீர் சுத்திகரிப்பான்களின் தரத்தை வரையறை செய்வதற்கு இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம். எனவே நுகர்வோர் நலன் கருதி, பிற நாடுகளில் உள்ளதைப் போன்ற கடுமையான விதிகளை அமல்படுத்திட வேண்டும்.குடிநீர் சுத்திகரிப்பு சாதனங்களில் உள்ள குறைபாடுகள் குறித்து அறிவியல் ரீதியில் தான் கண்டறிந்த ஆய்வு தொடர்பான தகவல்களை ஆதாரத்துடன் தனது நூலில் பிஜோன் மிஸ்ரா குறிப்பிட்டுள்ளார்.


உலக சுகாதார நிறுவனத்தின் சர்வதேச அறிக்கையில், உலகிலேயே இந்தியாவில் தான் அதிகளவில் சாலை விபத்துகள் நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் சாலை விபத்தில் இறக்கின்றனர். ஒவ்வொரு மணி நேரமும் 25 வயதிற்கு உட்பட்ட 40 பேர் இறக்கின்றனர். இந்தியாவில் மட்டும் ஒரு மணி நேரத்திற்கு 14 பேர் இறக்கின்றனர். எனவே, இது குறித்து பாதசாரிகள், ஓட்டுனர்கள் என அனைத்து வகையான சாலைகளை பயன்படுத்துவர்களுக்கும் சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அனைவருக்கும் முதல் உதவி செய்வது குறித்த, அறிவை வழங்க வேண்டும். குறிப்பாக இளைஞர்களுக்கு இது அவசியம். குடும்பத்தில் ஒருவரேனும், முதல் உதவி செய்வது பற்றி அறிந்திருக்க வேண்டும்

Tuesday, July 19, 2011

ரூபாய் 112 கோடியில் பறக்கும் கார்

கார் விண்ணில் பறக்க முடியுமா? என்ற கேள்வி பலரது மனதில் எழும். ஏன் முடியாது. இன்னும் 5 ஆண்டுகளில் அது சாத்தியமாகும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். புதுவிதமான பறக்கும் காரை அமெரிக்காவை சேர்ந்த கார்ல் டயட்ரிச் என்பவர் தயாரித்துள்ளார்.

இது 2 இருக்கைகள் மட்டுமே கொண்டது. மிகவும் எடை குறைந்த விமானம் போன்றது. மணிக்கு 185 கி.மீட்டர் வேகத்தில் செல்லும். 800 கி.மீட்டர் தூரம் செல்ல செலவாகும் எரிபொருள் நிரப்பும் டேங்கு அமைக்கப்பட்டுள்ளது. விண்ணில் பறக்கும்போது அவற்றின் இறக்கைகள் விரியும். அதே நேரத்தில் ரோட்டில் இறங்கி கார் ஆக மாறும்போது அவை மடங்கி சக்கரங்களாக வடிவம் பெறும்.

இந்த நிகழ்வு 15 வினாடிகளில் நடைபெறும். இந்த கார் சுமார் ரூ.112 கோடி செலவில் தயாரிக்கப்படுகிறது. இதை ஓட்ட 20 மணி நேரம் மட்டும் பயிற்சி பெற்றால் போதும். புதுவகையான இக்கார்கள் இன்னும் 5 ஆண்டுகளில் அமெரிக்க ரோடுகளில் ஓடுவதை காணமுடியும்.

அதற்கான அனுமதியை அமெரிக்க தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகம் அளித்துள்ளது.

Sunday, July 17, 2011

மொபைல் போன் இருந்தால் ஷாப்பிங் செய்யலாம்

சில்லரை வர்த்தகத்தில் கூகுள் பெரிய புரட்சி ஒன்றை மேற்கொள்ளத் தொடங்கி யுள்ளது. கூகுள் வாலட் (Google Wallet) என்ற பெயரில், உங்கள் மொபைல் போனை மணி பர்ஸாக மாற்றுகிறது. 
இதன் மூலம்,கடைகளில் பொருள் வாங்கிய பின், அங்குள்ள சாதனம் ஒன்றின் முன், உங்கள் மொபைல் போனை அசைத்தால் போதும்; உங்கள் கணக்கில் உள்ள பணத்திலிருந்து பில்லுக்குத் தேவையான பணம், கடைக்காரர் அக்கவுண்டிற்குச் செல்லும். உங்கள் மொபைல் போனுக்கு அதற்கான ரசீது கிடைக்கும். கடைக்காரர் இந்த விற்பனைக்கென ஏதேனும் டிஸ்கவுண்ட், பரிசு கூப்பன் தருவதாக இருந்தால், அதுவும் மொபைல் போனில் பதியப்படும். இதனை அடுத்ததாக அந்தக் கடையில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இது எப்படி செயல்படுகிறது என்று பார்ப்போம். இந்த சிஸ்டத்தின் அடிப்படையில் இயங்கும் தொழில் நுட்பத்தின் பெயர் NFC (Nearfield communication). இதன் அடிப்படையில் இயங்கும் இரு சிப்களை, இரண்டு சாதனத்தில் அமைத்து அருகே வைத்து இயக்குகையில், அவை இரண்டும் தாங்களாகவே,தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும். கிரெடிட் கார்ட் தகவல்கள், ட்ரெயின் டிக்கட், கூப்பன்களில் உள்ள பார் கோட் தகவல்கள் போன்ற தகவல்களை எளிதாக இவை கையாளும். இந்த சிப்களை இனி வெளியாகும் அனைத்து ஆண்ட்ராய்ட் மொபைல் போன்களிலும் வைத்திட கூகுள் முடிவு செய்துள்ளது.

முதலில் ஆண்ட்ராய்ட் இயக்கத்தில் செயல் படும் நெக்சஸ் எஸ் மொபைலில் இது செயல்படும். முதல் முறையாக அமெரிக்காவில் சான்பிரான்ஸிஸ்கோ மற்றும் நியூ யார்க் நகரங்களில் இது சோதனை செய்யப்படுகிறது. பின்னர் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் மற்ற நகரங்களுக்கு விரிவாக்கப்படும். பின்னர், அனைத்து நாடுகளின் முக்கிய நகரங்களில் அமல்படுத்தப்படும். அமெரிக்காவில் பல வர்த்தக நிறுவனங்களும், கிரெடிட் கார்டுகளை வழங்கும் நிதி நிறுவனங்களும் வங்கிகளும் இதற்கென கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தங் களை மேற்கொள்கின்றன. பன்னாட்டளவில் மூன்று லட்சம் வர்த்தக நிறுவனங்கள் இதற்கு போட்டி போட்டுக் கொண்டு முன்வந்துள்ளதாகவும் கூகுள் அறிவித்துள்ளது. சாம்சங், மோட்டாரோலா, எச்.டி.சி. நிறுவனங்கள் தங்கள் மொபைல் போன்களில் இதனை அறிமுகப்படுத்த ஒத்துக் கொண்டுள்ளன. ஏற்கனவே இந்த தொழில் நுட்பத்தினை Microsoft, Visa, Sony, Nokia and AT&T ஆகிய நிறுவனங்கள் சப்போர்ட் செய்து வருகின்றன. என்.எப்.சி. தொழில் நுட்பம் இனி ஸ்மார்ட் போன்களில் ஒருங்கிணைந்த ஒரு வசதியாக கருதப்படும்.

இனி ட்ரெயின், பஸ் அல்லது விமானப் பயணங்களுக்கு, இன்டர்நெட் மூலம் டிக்கட் எடுத்து, அதனை அச்செடுத்து, மறந்துவிடாமல் எடுத்துச் செல்லும் வேலை எல்லாம் இருக்காது. மொபைல் மூலமாகவே இன்டர்நெட்டில் டிக்கட் எடுத்து அதனைப் பதிவு செய்து வைத்துக் கொள்ளலாம். பின்னர், ஏறிச் செல்லும் வாகனங்களில் கதவுகளில் பதிந்து வைக்கப் பட்டுள்ள சாதனத்தின் முன், மொபைல் போனை ஆட்டிவிட்டு உள்ளே செல்லலாம்.
கடைகளில் பொருட்களை வாங்கிய பின்னர், மொபைல் போனை காசு வாங்கும் இயந்திரத்தின் முன் அசைத்துவிட்டு, ரசீது பெற்று பொருளை எடுத்துச் சென்றுவிடலாம்.
பணம் மட்டுமின்றி, வாகன ஓட்டுநர் உரிமம், அடையாள அட்டை போன்றவற்றையும் இதில் கொண்டு வர கூகுள் திட்டமிடுகிறது.

இதில் மோசடி நடக்காமல் இருக்க அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் கூகுள் கொண்டு வந்துள்ளது. மொபைல் போனில் இது இருந்தாலும், போன் இயக்கத்துடன் கலக்காமல் தனி சிஸ்டம் மற்றும் மெமரியில் என்.எப்.சி. சிப் இயங்கும். போன் இயக்கத்திற்கென ஒரு PIN எண்ணும், மொபைல் மணி பர்ஸுக்கென இன்னொரு PIN எண்ணும் பயன்படுத்த வேண்டும்.
கூகுளின் இந்த புதிய நிதி வர்த்தக நடவடிக்கை அதனுடைய ஆண்ட்ராய்ட் சிஸ்டம் மற்றும் அவை இயங்கும் மொபைல் போன்களைப் பயன்படுத்து பவர்களை அதன் வளையத்திற்குள் கொண்டு வரும். வர்த்தகத்தில் ஈடுபடாமலேயே, பன்னாட்டளவில் பெரிய வர்த்தக நிறுவனமாக கூகுள் மாறும். இந்த துறையில் தங்களின் பங்கினையும் மேற்கொள்ள நிச்சயம் மைக்ரோசாப்ட் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் தங்கள் தொழில் நுட்பத்தினைக் கொண்டு வரும் என எதிர்பார்க்கலாம். அதிக எண்ணிக்கை யில் நிறுவனங்கள் வந்தால், நமக்கு லாபம் தானே.

உலகின் உயரமான ரோலர் கோஸ்டர்

ஜப்பானில் உள்ளது உலகிலேயே உயரமான ரோலர் கோஸ்டர்.


ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள பியூஜி க்யூ மன மகிழ் பூங்காவில் உலகின் உயரமான ரோலர் கோஸ்டர் அமைக்கப்பட்டுள்ளது.
141 அடி உயரம், 2 மைல் தூரம், வயிறு பிசைய வைக்கும் 7 வளைவுகள், மணிக்கு 100 கிலோமீற்றர் வேகம். இதில் ஏறவே தனி தைரியம் வேண்டும்.

2 நிமிட நேர பயணம் என்றாலும் சப்த நாடிகளையும் ஒடுங்க வைக்கும் இந்த ரோலர் கோஸ்டர் கின்னஸில் இடம் பிடித்து விட்டது.
 சுற்றுலா பயணிகளை பயங்காட்ட தயாராகி விட்டது இந்த ராட்சத ரோலர் கோஸ்டர்.

Saturday, July 16, 2011

அமைதியின் வெளிச்சங்கள்

அமைதியை  ரசிக்க

Friday, July 15, 2011

தெய்வத் திருமகள்

தெய்வத்திருமகள் சினிமா விமர்சனம் இல்லை ஒரு  தெய்வமகளின் கோபம்

யிரற்ற சிலைக்கு பாலாபிஷேகமும்
அறுசுவை உணவு படையலும்
தேனாமீர்தமும் .......
ஒரு வேளை சோற்றுக்கா வீதியில்
வெயிலில் பல மணி நேரம்
தவம் கிடக்கும் இந்த தெய்வமகளுக்கு
ஒரு வேளை உணவு கிடைக்கவில்லையாம்!
குழந்தையும் தெய்வமும் ஒன்று என்று
வாயளவில் கூறிக்கொள்ளும் இந்த மானி்டம்
கடவுளுக்கு அள்ளி கொடுக்கும் கைகள்
ஏனே இந்ந வீதிகளில் அலையும் கடவுள்களை (குழந்தைகளை)
கண்டுகொள்வதில்லை இந்த மானிடப் பதறுகள்........

மாறட்டும் மனித மனம் ஊண்டியல் நிரப்புவதை நிறுத்து
சில காலி வயிறுகளை நிரம்பட்டும்.
காணிக்கை என்று கற்களால் ஆன சிலைகளுக்கு
கொடுக்கும் மானிடமே...
உன்னல் முடிந்த அளவுக்கு கல்விக்கு உதவு
இந்த தெய்வக்குழந்தைகள் கையேந்துவதை தடுக்கும்.......

Thursday, July 14, 2011

சிகரெட்- சினிமா அதிர்ச்சி ரிப்போர்ட்

ளைஞர்களுக்கு சிகரெட் பழக்கம் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் சினிமாதானாம்
சமீபத்திய சர்வேயில் தெரியவந்துள்ளது. சினிமாக்கள் மூலம் சிகரெட், புகையிலை கம்பெனிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.30 ஆயிரம் கோடி வருமானம் கிடைக்கிறது என்றும் தெரியவந்துள்ளது.தீவிரமாக நடக்கும் விழிப்புணர்வு பிரசாரங்களையும் மீறி, புகைப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. புகை பிடிக்கும் பழக்கம் ஏன் உண்டாகிறது என்பது குறித்து அரசு சாரா அமைப்புகள், இந்திய தேசிய புகையிலை ஒழிப்பு நிறுவனம் (நோட்), மற்றும் கோவா தன்னார்வ சுகாதார சங்கம் இணைந்து ஆய்வு மற்றும் கருத்துக் கணிப்பு நடத்தின. 
 
இந்த ஆய்வில் தெரியவந்த தகவல்கள்: உலகம் முழுவதும் புகைப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இளைஞர்கள் அதிகம் பேர் இப்பழக்கத்தில் விழுகின்றனர்.இவர்களுக்கு புகை பிடிக்கும் பழக்கம் திடீரென எப்படி வந்தது என்று சர்வேயில் கேட்கப்பட்டது. 
 
இதில் பலர் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. 54 சதவீத இளைஞர்களும் 30 சதவீத பொதுமக்களும் ‘சினிமா பார்த்து புகை பிடிக்க ஆரம்பித்தோம்’ என்று கூறியிருக்கின்றனர். சிகரெட், புகையிலை கம்பெனிகளுக்கு சினிமாக்களால் ஒவ்வொரு ஆண்டும் 30 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது. உலக அளவில் இந்தியா, சீனாவில் மட்டுமே புகையிலை பழக்கத்தால் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகம்.
 
இப்பழக்கத்தால் உலகம் முழுவதும் சராசரியாக தினமும் ஒரு மணி நேரத்தில் 114 பேர் இறக்கின்றனர்.மக்களுக்கு நல்வழி காட்ட வேண்டிய உலக சினிமா, வியாபார நோக்கில் செய்து வரும் தவறுகளால் மக்கள் பல்வேறு தீய பழக்கங்களுக்கு ஆட்பட்டு உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. புகை பழக்கத்துக்கு அடிமையாகி நுரையீரல் மற்றும் உறுப்புகள் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் உயிருக்கு போராடுபவர்களை பார்த்தால், சினிமாவில் எந்த நடிகரும் சிகரெட் பிடிக்க மாட்டார்.தொடர் விழிப்புணர்ச்சிகள் மூலம் கோவா, பஞ்சாப் மாநிலங்களில் புகை பிடிப்போர் எண்ணிக்கை குறைந்து தற்போது முறையே 9, 15 என்ற சதவீதமாக உள்ளது. 30 வயதுக்கு குறைந்தவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகம். புகை பழக்கத்தில் இருந்து இளைஞர்கள் விடுபடவும் புகைப் பழக்கம் இல்லாத சமுதாயம் உருவாகவும் நடிகர்கள், மீடியாக்களின் ஒத்துழைப்பு அவசியம். இவ்வாறு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, July 13, 2011

சென்னை - ஆவடியில் உலக சாதனை நிகழ்வுகள்

டிக்கெட் மற்றும் விவரங்களுக்கு
98419 52783
sriprint01@gmail.com

Sunday, July 10, 2011

அன்புடன் அம்மாவுக்கு ஒரு கடிதம்


அன்புள்ள அம்மாவுக்கு ஒரு கடுதாசி.....!!!!


ம்மா...
எழுத வார்த்தைகள் இல்லாமல்
தொடங்குகிறேன்...!!

பருவம் வரை பக்குவமாய்
வளர்த்து விட்டாயே

ஊர் சண்டை இழுத்து வந்தாலும்
உத்தமன் என் பிள்ளை என்று
விட்டு கொடுக்காமல் பேசுவாயே
அம்மா..!!

நீ சொன்ன வேலைகளை விளையாட்டாய்
தட்டி சென்ற நாட்கள்..!!

செல்லம், தங்கம், "மள்ளிகை கடைக்கு "
போய்வாட என நீ சொல்ல
இந்த வயதில் கடைக்கு போவதா?..
என நான் சொன்னேன்..!!

இன்றோ..
இங்கே கண்ணுக்கு தெரியாத
யாரோ ஒருவருக்காக ஓயாமல்
வேலை செய்கிறேன் அம்மா..!!

நெற்றி வியர்வை சிந்த பரிமாறும்
உந்தன் கை பக்குவ உணவு
நான் அறிந்த அமுதத்தின் அசல்தான்.
இருந்தும் தவறவிட்ட பல நாட்கள்..!!

கண்ணு "பத்து நிமிஷம்" பொறுத்துக்கோடா
சூடா சாப்பிட்டுட்டு போய்டுவ என நீ சொல்ல
பத்து நிமிஷமா..!, நான் வெளியல
சாப்பிட்டு கொள்கிறேன் என நான் சொல்லி
கிளம்பிய தருணங்கள்..!!

இன்றோ..
இங்கே உப்பு.,சப்பில்லா சாப்பாடு
சாப்பிடும் போதே கண்கள் களங்க
இன்று காரம் கொஞ்சம் அதிகம்
போய்விட்டது என கடைக்காரர்
சொல்ல..!!

என்னக்கு மட்டும் தெரிந்த
உண்மை..!!
பாசமுடன் நீ அளித்த உந்தன்
ஒற்றை பிடி சோற்றுக்காக இப்போது
ஏங்குகிறேன் அம்மா..!!

அன்றைய பொழுதில் சுற்றி திரிந்த நாட்கள்
வரண்ட தலை முடியில் வலுக்கட்டாயமாய்
தடவி விடும் எண்ணெய் துளிகள்
வேண்டா வெறுப்பாய் நிற்கும்
நான்..!!

இன்றும்
என் தலை முடி சகாராதான் அம்மா
உந்தன் கை ஒற்றை எண்ணெய்
துளிக்காக ஏங்கி நிற்கிறது..!!

ஆசையால்..
மழையில் நனைந்து வர
முனுமுனுத்தபடி துடைப்பாய்
உந்தன் முந்தானையில்
(அன்னையை பிரிந்து வேலைக்காக ஊர் விட்டு ஊர் வந்த ஒருவனின் மனதின் வலிகள் )

Saturday, July 9, 2011

ஒசாமா பின்லேடனை தேடி அலையும் ஒரு அமெரிக்கர்

ஒசாமா பின்லேடனை தேடி ஒருவர் அலைந்து கொண்டிருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆக வேண்டும்.

மெரிக்கா படைகளால் சுட்டுகொள்ளப்பட்ட ஒசாமாவின் உடலை அரபிக் கடலில் ரகசிய இடத்தில் சமாதி ஆக்கப்பட்டது. அந்த உடலை கடலில் தேடுதல் வேட்டையில் இறங்கி இருக்கிறார் ஒரு அமெரிக்கர் அவரது பெயர் பில் வாரன். ஆழ்கடல் நீச்சல் வீரரான இவர் கடலில் மூழ்கி கிடக்கும் கப்பல்களில் உள்ள பொருட்களை மற்றும் கடலில் இருக்கும் பொக்கிஷங்களை  தேடிக்கொடுக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார்.
 
பில்வாரன் ஒசாமாவின் உடல் கடலில் வீசப்பட்டது என்பதை நான் நம்ப தயாராக இல்லை என்று கூறுகிறார். அமெரிக்கா ராணுவம் இதற்கான ஆதார புகைப்படங்களை  வெளியிட்டு இருக்க வேண்டும் என்கிறார். அந்த உடலை தேடி தனது கடல் பயணத்தை துவக்கி தேடி வருகிறார் பில் வாரன்.
 
இந்த தேடுதல் வேட்டைக்காக சுமார் 4 லட்சம் அமெரிக்க டாலர் செலவு செய்யப்போகிறார். இதற்காக இந்தியாவில் இருந்து ஒரு கப்பலை வாடகைக்கு பிடிக்க இருக்கிறார். ரிமோட் மூலம் இயங்கும் குட்டி நீர் மூழ்கி எந்திரம் மற்றும் நவீன சென்சார் கருவிகள் மூலம் தேடுதல் வேட்டை நடத்தப்போகிறார் இந்த வாரன்.

இதுவரை 200க்ககும் மேற்பட்ட மூழ்கிய கப்பலை கண்டு பிடித்துள்ளார். ஒசாமா உடல் கடலில் எந்த இடத்தில் வீசப்பட்டது என்பது குறித்த ரகசிய தகவல் அவருக்கு கிடைதுள்ளதாம் அதன் அடிப்படையில் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளார். 

யானை இருந்தாலும் ஆயிரம் பொன்  இறந்தாலும் ஆயிரம் பொன் என்பார்கள் அதுபோல தான் பின்லேடன்  தலைக்கு உயிருடன் இருக்கும் போது  கோடிக்கணக்கில் விலை வைத்திருந்தார்கள் இப்போது இறந்தபிறகும் அவருக்காக கோடிக்கணக்கில் பணம் செலவழிக்கிறார்கள்.

Friday, July 8, 2011

அமெரிக்காவில் கலக்கும் மின்சார தமிழர்

அமெரிக்க மக்கள் அனைவரும் ஒரு தமிழரைப் பற்றி வியப்பாக பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்றால் நமக்கு பெருமை சேர்க்கும் விஷயம்தானே!
அந்தத் தமிழர் பெயர் கே.ஆர். ஸ்ரீதர். இவர், சாதாரண தமிழர் அல்ல.. மின்சாரத் தமிழர். சற்று பீடிகையாக இருந்தாலும் மேலே படியுங்கள்... நீங்களும் பாராட்டத் தொடங்கி விடுவீர்கள்...

உலகம் முழுவதும் மின்சாரப் பற்றாக்குறை என்பது தவிர்க்க முடியாத நிலையாகிவிட்டதால், மின் உற்பத்தியை எவ்வாறு அதிகரிக்கலாம் என அனைத்து நாட்டு வல்லுநர்

களும் தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஒருவர் தனது வீட்டுக்குத் தேவையான மின்சாரத்தை வீட்டில் வைத்தே உற்பத்தி செய்து கொள்ளலாம் என்ற அறிவித்ததோடு,செயலிலும் காட்டி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார் கே.ஆர். ஸ்ரீதர். ஆச்சரியம்தானே?

1960-ம் ஆண்டு பிறந்த கே.ஆர். ஸ்ரீதர், திருச்சி துவாக்குடியில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் கடந்த 1982-ம் ஆண்டு இயந்திரவியல் பொறியியல் பயின்றார். தொடர்ந்து, அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் அணு பொறியியல் பட்டம் படித்தார். அதே பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டமும் பெற்ற கே.ஆர். ஸ்ரீதருக்கு, உடனடியாக வேலையைக் கொடுத்தது நாசா நிறுவனம். செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் வாழ முடியுமா? அதற்குத் தேவையான சாத்தியக் கூறுகளைக் கண்டுபிடிப்பது எப்படி? என்ற ஆராய்ச்சிப் பணியில் தனது சகாக்களுடன் ஈடுபட்டு வந்தார் கே.ஆர். ஸ்ரீதர்.

ஆனால், இந்த ஆராய்ச்சியை அமெரிக்க அரசு திடீரென நிறுத்தியதால் சற்று அதிர்ச்சியடைந்த கே.ஆர். ஸ்ரீதர், தற்செயலாக ஒரு பணியில் ஈடுபட்டார். அதுவே அவரை உச்சத்துக்கு கொண்டு சென்றுவிட்டது.

ஏதோ ஒரு சக்தியில் இருந்து ஆக்ஸிஜனை உருவாக்கி வெளியே எடுப்பதற்குப் பதிலாக, ஆக்ஸிஜனை வைத்து அதனோடு இயற்கையாகக் கிடைக்கும் எரிசக்தியைச் சேர்த்தால் என்ன நடக்கிறது என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டார் ஸ்ரீதர்.


என்ன ஆச்சரியம்! ஆக்ஸிஜனும், இயற்கை எரிவாயுவும் சேரும்போது மின்சாரம் உருவாவதை உணர்ந்த ஸ்ரீதர், மேற்கொண்டு சில மாற்றங்களைச் செய்து உருவாக்கியதுதான் "ப்ளூம் பாக்ஸ்' என்ற மின்சார உற்பத்திப் பெட்டி.

தனது தொழில்நுட்பத்துக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று நினைத்த ஸ்ரீதர், அமெரிக்காவில் உள்ள சிலிக்கான் பள்ளத்தாக்கில் பிரபலமாக இருக்கும் மிகப்பெரிய நிறுவனமான கிளீனர் பெர்க்கின்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஜான் டூயரை நாடினார்.

இந்த ஜான் டூயர் சாதாரண ஆள் கிடையாது. நெட்ஸ் கேப், அமேசான், கூகுள் போன்ற நிறுவனங்களுக்குத் தொடக்கத்தில் முதலீடு செய்தவர் என்ற பெருமைக்கு உரியவர்.

ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை வர்த்தக ரீதியில் செயல்படுத்த ஒப்புக்கொண்ட ஜான் டூயர் செய்த முதலீடு 100 மில்லியன் டாலர். இந்திய மதிப்புப்படி, ஏறத்தாழ |490 கோடி. ஸ்ரீதர் கண்டுபிடித்த தொழில்நுட்பம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுத் தரும் என்பதால் இந்த முதலீடை ஜான் டூயர் செய்தார்.
                                                                   நம்ம தமிழன் டா

Saturday, July 2, 2011

STORNG TEA அதிர்ச்சி ரிப்போர்ட்

ஸ்ட்ராங் டீ ஸ்லோ பாய்ஸன் - கதற வைக்கும் கலப்படம்! தேநீர்ப் பிரியர்களே உஷார்
சோர்வைப் போக்குவதற்கு நாம் நம்பிக் குடிக்கிற டீயே நம் ஆரோக்கியத்திற்கு ஆப்பு வைக்கிற அநியாயம், அவ்வளவு சீக்கிரம் முடிவுக்கு வராது போலிருக்கிறது.

தமிழகம் முழுவதும் அடுத்தடுத்து ஆயிரக்கணக்கான கிலோ அளவில் சிக்கும் கலப்பட டீத்தூள் ரகங்கள் விடுக்கிற எச்சரிக்கை இதுதான்.

மரத்தூள், புளியங்கொட்டை, குதிரைச்சாணம், இலவம்பஞ்சு விதை என காலத்துக்கும் தொழில் நுட்ப வசதிக்கும் தகுந்தபடி கை வைக்கிற கலப்படக்காரர்களின் தற்போதைய முதலீடு முந்திரக்கொட்டையின் மேற்புறத்தோல்.

"பழுப்புநிறத்தில் உள்ள அந்தத் தோலை வறுத்து, பொடியாக்கி, டீயில் கலந்துட்டா குறைந்த அளவு விற்பனையில் அதிக லாபம் பார்க்கலாம்.

குடிக்கிறப்போ டீ அடர்த்தியாகவும் இருக்கும். பச்சையாக இருக்கும்போது சாப்பிட்டால், நம் வாயை புண்ணாக்கிடுற முந்திரிக்கொட்டைத் தோல் நல்லா காய்ஞ்ச பிறகும் உடலுக்கு பாதிப்பைத்தானே ஏற்படுத்தும்?'' என்று கேட்கிறார், "கன்ஸ்யூமர் அசோசியேஷன் ஆஃப் இந்தியா'வின் நிறுவனர் தேசிகன்.

தேயிலையில் உள்ள இரண்டு இலை, ஒரு மொட்டு மட்டும்தான் டீத்தூளாக பயன்படுத்தப்பட முடியும். ஆனால் இதுவரை கழிவாக ஒதுக்கப்பட்ட காம்பு, தழை போன்ற ஃபைபர் சமாச்சாரங்களையும் டீயில் தற்போது கலக்கிறார்களாம். டீத்தூளின் எடையைக் கூட்டத்தான் இந்த டெக்னிக்.

இன்னொரு பக்கம் டார் டாராசைன், அட்ராசைன், கார்மோசைன், சன்செட் யெல்லோ என நீள்கிறது.

டீயின் கலருக்காக கலக்கப்படுகிற கெமிக்கல்களின் பட்டியல். ""இந்த மோசடிக்கு ஒரு வகையில் நுகர்வோர்தான் காரணம். டீன்னாலே செம்மண் கலர்ல, "ஸ்ட்ராங்' ஆக இருக்கும்கிற மக்களின் தவறான நம்பிக்கையத்தான் கலப்படக்காரர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கிறாங்க'' என்று எச்சரிக்கிறார், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் ராஜராமன்.

I.S.O தரச் சான்றிதழ் பெற்ற நிறுவனங்கள் முதல் லோக்கல் பார்ட்டிகள் வரை இந்த கலப்படத்தை, அவரவர் தங்கள் சக்திக்கு ஏற்ப செய்து வருகின்றனர். சரி, இந்தக் கலப்பட டீத்தூள் என்ன செய்யும்? இதற்கு உணவுப் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப வல்லுனர் சுந்தர் தருகிற பதில், ""டீயில் கலக்கப்படுகிற கலர்கள் முதலில் கிட்னியைப் பாதிக்கும்.

பிறகு வயிற்றுப் பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தும். கலப்பட டீயை அளவுக்கு மீறி குடிச்சா, கேன்சர் வர்றதுக்கும் வாய்ப்பு இருக்கு. துணிக்குப் போடற சாயம் கலந்த டீ என்றால் இன்னும் அபாயம்!'' டீக்கடைகளைப் பார்த்தாலே நுழைந்து விடுகிற தேநீர்ப் பிரியர்களே உஷார்..........

Friday, July 1, 2011

35 இலட்சத்துக்கு மேல் விலை போகும் M.B.B.S. மருத்துவ சீட்டு


மிழகத்தில் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடம் ஒன்றுக்கு ரூ.35 லட்சம் முதல் ரூ.45 லட்சம் வரை நன்கொடை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி நன்கொடை கட்டணம் வசூலிப்பது சட்ட விரோதம் என்றாலும் அனைத்து சுயநிதி மருத்துவக் கல்லூரிகளும் தங்களது நிர்வாக ஒதுக்கீட்டுக்கான இடங்களை நன்கொடை முறையில் இந்த ஆண்டும் முன்பதிவு செய்து விட்டன. இந்த ஆண்டு அதிக கட்-ஆஃப் மதிப்பெண் காரணமாக எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர கடும் போட்டி ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் கீழ் 10 சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் உள்ள மொத்த எம்.பி.பி.எஸ். இடங்கள் 1,310. இவற்றில் அரசு ஒதுக்கீட்டுக்கு 767 இடங்கள் போக, நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 543 இடங்கள் உள்ளன. 

சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடத்துக்கு ரூ.2.5 லட்சத்தை கல்விக் கட்டணமாக தமிழக அரசின் நீதிபதிக் குழு நிர்ணயம் செய்தாலும்கூட, இதர கட்டணங்களையும் சேர்த்து ஒரு அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடத்துக்கு ஆண்டுக்கு ரூ.3.5 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை சுயநிதி மருத்துவக் கல்லூரி நிர்வாகங்கள் நிர்ணயம் செய்கின்றன. நடப்புக் கல்வி ஆண்டுக்கு அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடத்துக்கு உரிய கல்விக் கட்டணத்தை நீதிபதி குழு விரைவில் அறிவிக்க உள்ளது. சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் தங்களது 543 நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு லட்சக்கணக்கில் நன்கொடை பெற்று மாணவர்களைச் சேர்க்கின்றன. 

தமிழகத்தில் இந்த ஆண்டு புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள இரண்டு சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடத்துக்கு ரூ.35 லட்சம் வரை கேட்பதாக பெற்றோர் தெரிவித்தனர். ஏற்கெனவே தொடங்கப்பட்டு நடத்தப்படும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு ரூ.45 லட்சம் கோருவதாகக் கூறப்படுகிறது.கோடிகளைச் செலவழித்து... நன்கொடை குறித்து சில சுயநிதி மருத்துவக் கல்லூரி நிர்வாகிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியது: இந்திய மருத்துவக் கவுன்சில் விதிகளைப் பூர்த்தி செய்ய பல கோடிகளைச் செலவழித்து சுய நிதியில் ஒரு மருத்துவக் கல்லூரியைத் தொடங்க வேண்டியுள்ளது. தமிழகத்தில் ஒரு எம்.பி.பி.எஸ். இடத்துக்கு ரூ.50 லட்சத்துக்கு மேல் நன்கொடை பெறும் மருத்துவ பல்கலைக்கழகங்கள் ஒரு எம்.பி.பி.எஸ். இடத்தைக்கூட அரசு ஒதுக்கீட்டுக்கு அளிப்பதில்லை. 

இவை மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்படுவதால், தாங்களே நுழைவுத் தேர்வு நடத்தி அனைத்து எம்.பி.பி.எஸ். இடங்களையும் நன்கொடை மூலம் நிரப்பிக் கொள்கின்றன. இவற்றை தமிழக அரசு கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது.மாறாக, ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசின் ஆணைப்படி தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் அனைத்தும் 65 சதவீதம் (சிறுபான்மை அந்தஸ்து அல்லாதவை.) அல்லது 50 சதவீத (சிறுபான்மை அந்தஸ்து கொண்டவை.) எம்.பி.பி.எஸ். இடங்களை அரசு ஒதுக்கீட்டுக்கு அளிக்கின்றன.மேலும் ரூ.2.5 லட்சம் கல்விக் கட்டணத்துக்கு அரசு ஒதுக்கீட்டுக்கு எம்.பி.பி.எஸ். இடங்களைத் தர வேண்டிய கட்டாயமும் உள்ளது.

இதனால் மருத்துவக் கல்லூரி கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் கஷ்டம் ஏற்படுகிறது. அரசு ஒதுக்கீடு-நிர்வாக ஒதுக்கீடு என அனைத்து எம்.பி.பி.எஸ். இடங்களுக்கும் கல்லூரிக்கு ஏற்ப தலா ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை கட்டணத்தை உயர்த்தி அரசு அறிவித்தால் ஏற்கலாம், என்று அவர்கள் தெரிவித்தனர். புகார் கொடுத்தால் நடவடிக்கை: ""சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் நன்கொடை வசூலிப்பது குறித்து உரிய ஆதாரங்களுடன் பெற்றோர் புகார் கொடுத்தால் அரசு நடவடிக்கை எடுக்கும்'' என்றார் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் வி.எஸ்.விஜய். சேவையா, வியாபாரமா? பிளஸ் 2 தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்து போதிய கட்-ஆஃப் மதிப்பெண் இல்லாவிட்டாலும் லட்சக்கணக்கில் நன்கொடை கொடுத்து எம்.பி.பி.எஸ். படிப்பில் சேரும் மாணவர்களிடமிருந்து எதிர்காலத்தில் மருத்துவ சேவையை எப்படி எதிர்பார்க்க முடியும்? மருத்துவக் கல்வி வியாபாரமாக மாறிவிட்டது, என்று மருத்துவ நிபுணர்கள் கவலை தெரிவித்தனர்