Pages

Sunday, April 24, 2011

உன் வழிகள் யாவும் தடைகள்

தடைகள் உன் தன்னம்பிக்கையை உயர்த்துகிறது
தடைகள் உன்னுள் இருக்கும் சக்தியை உனக்கு காட்டுகிறது
தடைகள் உன் முயற்சி பாதையில் 
                                                                   விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது
தடைகள் உன்னுள் அனுபவ அறிவை வளர்க்கிறது
தடைகள் உனக்கு பொறுமையை கற்றுக் கொடுக்கிறது
தடைகள் இல்லா உயிரினம் ஏது 
தடைகள் கண்டு கலங்காத மனமே
உன் மனமாய் இருக்கட்டும்
உன் வெற்றி பயணங்கள் தொடரட்டும்.............

Wednesday, April 20, 2011

காமெடி பீஸ்

என்னோட ஸ்டைலுக்கு  ஹாலிவுட்ல ஹீரோவா நடிக்க கூப்பிடராங்கோ?
குளீரு தாங்க முடியலடசாமி...........
அடிக்கிற வெயிலுக்கு பீர் அடிச்ச ரொம்ப நல்லாயிருக்கு மாமு...........
போட்டோவுக்கு போஸ்  கொடுக்கிறேம்ல.........
காதல் வளர்த்தேன்!     காதல் வளர்த்தேன்
வெளிய தலகாட்ட முடியல நாம்ல ஊரே தேடிகி்ட்டு இருக்காங்கே
இப்படி ஏதாவது பண்ணியாவது உங்ககிட்ட ஓட்டு வாங்கலாமுன்னு பார்க்கிறேன்.
உங்கள் கருத்துகளை செல்லுங்க பாஸ்?

Monday, April 18, 2011

இயற்கை

Sunday, April 17, 2011

இளம் சாதனையாளர்

தன்னார்வத்தாலும், தனித்திறமையாலும் ஐடி துறையில் இளம் சி.இ.ஓ (C.E.O) ஆகி 14 வயதில் சாதனை படைத்திருக்கிறார் சுகஸ் இந்தியா இளைஞர்களுக்கு இவர் ஒரு சிறந்த ரோல் மாடல்
        சுகாஸ் கோபிநாத்துக்கு எட்டாம் வகுப்பு படிக்கும் போதே கணினி என்றால் பிரியம். வீட்டிலோ கணினி கிடையாது மாதந்தோறும் அப்பா  தருகிற 15 ரூபாய்க்கு இன்டர்நெட் சென்டரில் ஒரு மணி நேரம் உட்கார்ந்தாலே காசெல்லாம் தீர்ந்து விடும்.  என்ன செய்வது என யோசித்தான், சுகாஸ் படித்த பெங்களுரு ஏர்போர்ஸ் பள்ளிக்கு மிக அருகில் இருந்தது அந்த இன்டர்நெட் சென்டர். மதியம் 1 மணிக்கு மூடினால் 4 மணிக்கு தான் மீண்டும் திறப்பார் அதன் உரிமையாளர். மதிய உணவு இடைவேளை அவனுடைய பள்ளி 1மணிக்கு முடிந்து விடும் சுகாஸ் நேரடியாக உரிமையாளரைச் சந்தித்தான். 1 மணிக்கு மேல் 4 மணிவரை நான் கடையை பார்த்துக் கொள்கிறேன் சம்பளமே தேவையில்லை ஆனால் எனக்கு ஒரு மணி நேரம் இன்டர்நெட் இலவசமாக கொடுங்கள் என்று கேட்டுக் கொண்டான் உரிமையாளருக்கு அந்த டீலி்ங் ஓகே.
    இலவசமாக கிடைத்த இன்டர்நெட்ல் கண்டதையும் பார்த்து மனதை வீணடிக்காமல் இணையதளங்கள் எப்படி வடிவமைப்பது என தன்னார்வத்தோடு தேட தொடங்கினான். அதற்கான புத்தகங்களை தேடி படித்தான் அவனே இணையதளங்களையும் வடிவமைக்க தொடங்கினான்.
         இணையத்தின் மூலம் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு சிறிய நிறுவனத்திற்கு இணையதளம் ஒன்றை வடிவமைத்து கொடுக்கிறான் அதற்காக அவனுக்கு 100 டாலர் (5000) தருவதாக கூறினார்கள். அப்போது அவனுக்கு வங்கியல் அக்கவுண்ட் கிடையாது. அப்பாவிடம் கூறினான் ஆச்சர்யமாக இருந்தாலும் என்ன வேணா பண்ணிக்கோ படிப்புல கவனம் இருக்கட்டும் என கண்டித்தார். அப்போது சுகாஸ் ஓன்பதாம் வகுப்புதான் படித்துக் கொண்டிருந்தான்.
     அதைத் தொடர்ந்து தன்னை பிரபலபடுத்திக் கொள்ள www.coolhindustan.com என்ற தளத்தை வடிவமைத்துக் கொண்டான்.தன்னைப் பற்றியும் விவரங்களை வெளியிட்டான். அதைப் பார்த்து எனக்கும் ஒண்ணு பண்ணிக் குடுங்க என்று நிறைய வாய்ப்புகள் வரத் தொடங்கியது. சுகாஸ் இப்போது ஒரு பிஸினஸ்மேனாக உணரத் தொடங்கினான்.
    தன் சம்பாத்தியத்தில் 13 வயதில் ஒரு கணினியை வாங்கினான் வீட்டில்பாதி  இன்டர்நெட் சென்டரில் பாதியென கழி்ந்தது பிஸினஸ் வாழ்க்கை. அது நிச்சயமாக அவனுடைய படிப்பை பாதித்தது 10 வகுப்பில் கணிதப்பாடத்தில் தோல்வியடைந்தான் குடும்பத்திலும் பள்ளியிலும் அனைவருக்கும் அதி்ர்ச்சி சுயதொழில் செய்வதை பாவச் செயலாக கருதும் பெங்களுரைச் சேர்ந்த சாதாரண மத்திய தர வர்கக் குடும்பத்தை சேர்ந்தவர் சுகாஸ்.
அம்மா ரெம்ப பயந்துட்டாங்க எங்க ஸ்கூல் பிரின்ஸ்பால் என்னை திட்டினாங்க அம்மா என்கிட்ட சத்தியம் வாங்கிட்டாங்க இனிமே இன்டர்நெட் சென்டருக்கு செல்ல மாட்டேன் என்று.
பிறகு நான்கு மாதம் கம்பெனிக்கு லீவு விட்டுவிட்டு படிப்பு படிப்பு மட்டும் தான் நல்ல மதிப்பெண் எடுத்து பாஸ் பண்ணினேன் என்று கூறுகிறார் சுகாஸ்
மேலும்

Sunday, April 10, 2011

பயணம்

பயணங்கள் மனிதனை பண்பட வைக்கின்றன. பயணங்கள் பல வித மனிதர்களுடன் பழகும் வாய்ப்பு ஏற்படுத்துகின்றன. தன் வாழ்நாளில் அதிக பயணங்களை மேற்கொண்ட மனிதன் சிறந்த பண்பாளன் ஆகிறான்.  என்ற வரிகள் இறையண்பு அவர்களின் பயணங்கள் புத்தகங்களில் படித்த வரிகள்.
இதற்கு முன்பு பல பயணங்கள் செய்திருந்தாலும் இந்த வரிகளின் படித்த பின்பு நான் சென்ற  பயணம்
கடந்த வாரம் நண்பரின்  திருமணத்திற்காக திருவரூர் வரை செல்ல கோயம்பேடு பேருந்து நிலையத்தில்  இரவு 9.30 மணியளவில் மயிலாடுதுறை செல்லும் பேருந்தில் எனது பயணம் தொடங்கியது. நகரத்தை விட்டு எப்போது தொலைவோம் என்று தோன்றியது. என் அருகில் உட்கார்ந்த என் நண்பர் என் வயதுகாரர் வேலை நிமிர்த்தமாக சென்னை வந்து சொல்கிறார். சீர்காழி வரை என்னுடன் பயணம் செய்வதாக கூறினார். கிழக்கு கடற்கரை சாலையில் இனிமையான பயணம் தொடங்கியது. நான் அதிகமாக இரவு நேர பயணங்கள் சென்றதில்லை. இரவு முழு நேர பயணம் இதுவாக தான் இருக்கும்.
கிழக்கு கடற்கரை சாலை


இரவு நேர பயணங்களில் இசை நமக்கு மிகவும் நெருங்கிய நண்பர். 
பேருந்து ஓட்டுநர்களுக்கும் இசை தான் மிக நெருங்கிய நண்பன் என்பதை அந்த பயணத்தில் நான் கவனித்த ஒன்று இளையராஜவி்ன் சுகமான ராகங்கள் மெல்லிய ஒலியில் ஒலித்துகொண்டு இருந்தது.
அரை  தூக்கத்தில் இசையுடன் பயணம். சுமார் இரவு 11. 45 மணியளவில் என் அருகில் இருந்த நண்பர் திடிரென விழித்து ஏதே சத்தம் வருகிறது பேருந்து டயர்  பஞ்சர் ஆகியுள்ளது என்று என்னிடம் கூறினார் பின்பக்கம் ஜன்னல் அருகில் உட்கர்ந்ததால் அவருடைய கணி்ப்பு மிகவும் சரியாகவே இருந்தது. சுமார் 15 நிமிடம் சென்ற பின் தான் ஓட்டுநர் அதை கவனித்தார் போலும்
சுமார் 12.00 மணியளவில் புதுச்சேரி, தமிழ்நாடு எல்லையில் உள்ள ஒரு சிறிய இரவு நேர உணவு விடுதியில் பேருந்து நிறுத்தினார். இந்த உணவு விடுதி வரை வருவதாற்காகவே 15 நிமிடம் பஞ்சர் ஆன பேருந்தை செலுத்தி வந்தார் என்பதை பின்பு நானும் எனது அருகில் இருந்த நண்பருக்கும் புரிந்தது.
சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக அங்கே  மீண்டும் சுமார் 12.45 மணியளவில் பயணம் தொடர்ந்தது. பெரும்பாலன பயணிகள் ஆழ்ந்த உறக்கம் ஓட்டுநரின் கண்களும் அந்த இசைப்பானும் மட்டுமே விழிந்திருந்தது.
இரவு 2.30 மணிளவில் சீர்காழி  எனது அருகில் இருந்த நண்பர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார் அவரை எழுப்பினேன். என்னிடம் நன்றி கூறிவிட்டு என்னுடைய மின்முகவரி வாங்கி கொண்டு விடைபெற்றார். இப்பொழுதும் இறையண்பு அவர்களின் வரிகள் சில என் ஞாபகத்தில் சில மணிநேர பயணங்களில் பல வருட நட்பு கிடைக்கும் என்று.
விடியற்காலை 4.45 மணியளவில் மயிலாடுதுறை பேருந்து நிலையத்தை அடைந்தேன்.
அங்கே திருவாரூர் செல்லும் பேருந்துக்காக 30 நிமிடம் காக்க வேண்டியதாக இருந்தது.
பிறகு தனியார் பேருந்து ஒன்றில் ஏறி உட்கார்ந்தேன்.
பெரும்பாலும் தென்மாவட்ட தனியார் பேருந்துகளில்  இருபுறமும் தொலைக்காட்சி  வைத்து சினிமா குத்து பாடல்களை ஒலியும். ஒலியும் செய்து சினிமா சேவை செய்து வருகிறார்கள்.
பயணங்களை இனிமையாக்க இயற்கையை ரசித்தவாறு செல்வதற்கு பதிலாக ஊடகங்களில் அடைபட்டு கிடக்கும் மனித மனங்களை  மேலும் சிறைப்படுத்துகிறார்கள் இந்த சேவகர்கள்.
30 நிமிட பயணத்திற்கு பிறகு நான் செல்ல வேண்டிய இடம் பேரளம் நிறுத்தத்தில் சுமார் 6.00 மணி
நண்பரை நேரில் சந்தித்து 2 வருடம் ஆகியுள்ளது. அவர் இப்போது இருப்பது சிங்கப்புரில் சென்னை நாங்கள் இருவரும் ஒரே இடத்தில் 1 வருட காலம் இருந்தோம் இருவருமே கிராமத்தான்கள் தான்
சி்ங்கப்புரில் உள்ள கிருஸ்ணர் கோவிலில் கணக்காளராக உள்ளார். பெரும்பாலும் தொலைபேசி. மின்னஞ்சலில் அவரே மாதம் ஒரு முறை தொடர்பு  கொள்வார்.
நேரில் சந்தித்தவுடன் நலம் விசரித்து சற்று உடல் கூடியுள்ளது என்று கூறினார். திருமணம் 9.00  மணிக்கு மேல் என்பதால் எங்களுக்கு ஒரு அறை ஏற்படுத்தி கொடுத்து  சிறிது நேரம் ஓய்வு எடுத்து வருமாறு கூறினார். மேலும் இரண்டு நண்பர்கள் ஒருவர் சென்னையில் இருந்து வந்ததாகவும். ஒருவர் துபாயில் இருந்து வந்தாகவும் கூறினார். 3பேரும் குளித்து விட்டு  மண்டபத்தில் சென்றோம் மணக்கோலத்தில் எமது நண்பர் எங்களுடனோ உணவருந்தினார். பின்னர் நாங்கள் ழூவரும் புகைப்படத்தில். திருமண முடிந்தது நண்பரிடம் விடைபெற்று என் பயணம் துவங்கியது. இனிமையான தருணங்கள் வாழ்வில்  சில சமயங்கள் தான் அதனை முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்ற ஆட்டோகிராப் வசனம் மனதில் தோன்றியது. 
      





























      திருமண மண்டபம்   


                                                               பயணங்கள் தொடரும்














Sunday, April 3, 2011

சிறந்த மனிதருக்காக இந்தியாவி்ன் வெற்றி

அனைத்து இந்தியனி்ன் உள்ளத்திலும் நம்பிக்கை 
நாட்டிற்காகவும் மட்டுமல்ல
இந்த மிக சிறந்த சதனை மனிதனி்ன் 
இந்த சந்தோசம் இந்திய நாடு கொண்டாடுகிறது
நமது நாட்டிற்காக 28 ஆண்டுகளுக்கு மேலாக  விளையாடி வரும் 
நமது சச்சின் பல சாதனைகள் படைத்தலும் உலகப்கோப்பை எட்டாக் கனியாக இருந்தது. நாட்டிற்காக என்றால் 4 ஆண்டுக்கு ஒரு முறை இந்து கோப்பை இல்லையெனில் அடுத்த கோப்பை  ஒரு தனிமனிதனுக்காக 
 இந்த தேசம் மற்றும் சக வீரர்கள் அனைவரும் ஒருவருக்காக  போராடிவெற்றியை அர்பணித்தார்கள்
உலக கிரி்க்கெட் வரலாற்றில் மிகப்பெரிய ஜம்பவனாக சச்சின்
பல காலம் அவரது சாதனைகள் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை
உண்மையான மனிதர்கள் உயர்ந்த சிகரங்களை அடைவர்கள் என்பதற்கு
சச்சின் மிகச்சிறந்த உதாரணம்