Pages

Tuesday, August 2, 2011

நோக்கியா நிறுவனத்தின் சில உண்மை தகவல்

உலகின் நம்பர் ஒன் செல்போன் தயாரிப்பாளர் நோக்கியா பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள் இங்கே.இன்றைக்கும் செல்போன் தயாரிப்பில் உலகின் நம்பர் ஒன் நோக்கியாவே.உலகின் 36 சதவீத செல்போன்கள் அவர்களுடையது. இவர்களின் முதல் செல்போன் மாடல் Mobira Senator.1982-ல் வெளியானது.

நோக்கியாவின் 1 பில்லியனான செல்போன் மாடல் Nokia 1100. இது நைஜீரியாவில் விற்க்கப்பட்டதாம். இதுவரை ஏறக்குறைய 400 மாடல்கள் வெளியிட்டுள்ளனர். முதல் ஹிட் 1994-ல் வெளியான 2100 மாடல்.20 மில்லியன்கள் விற்றன. உலக அளவில் சூப்பர் ஹிட் ஆன Nokia 3310 / 3330 மாடல் 126 மில்லியன்கள் விற்று சாதனை படைத்தன.இந்த 126 மில்லியன் போன்களையும் வரிசைப்படுத்தி அடுக்கினால் 13,500 கிலோமீட்டர் நீளம் போகுமாம்.2004-ல் நோக்கியாவால் 207.7 மில்லியன் போன்கள் தயாரிக்கப்பட்டது. அதாவது 6.5 நொடிகளுக்கு ஒரு போன். நோக்கியா போனில் SMS வந்தால் ஒலிக்கும் விஷேச ஒலி உண்மையில் SMS என்ற வார்த்தையின் மோர்ஸ்கோடாம்.(Morse code) .
கேமரா கொண்ட போன்களின் ஆதிக்கம் இப்போது அதிகமாதலால் உலகளவில் இப்போதைக்கு அதிக டிஜிட்டல் கேமரா தயாரிப்பாளரும் இவர்களே. அதிக அளவில் திருடு போகும் செல்போன்களும் நோக்கியா செல்போன்களே."நோக்கியா ரிங்டோன்" என அறியப்படும் அந்த புகழ் பெற்ற ரிங்டோன் 19ம் நூற்றாண்டை சேர்ந்த ஒரு ஸ்பானிய கிடார் இசைகலைஞரின் (Francisco Tárrega.) இசையை அடிப்படையாக கொண்டது.உலகின் முதல் GSM காலை பண்ணியவர் முன்னாள் பின்லாந்து பிரதமர் Harri Holkeri. இந்த அழைப்பு 1991-ல் ஹெல்சிங்கியில் ஒரு நோக்கியா போனை பயன்படுத்தி உண்டாக்கப்பட்டது.நோக்கியா கம்பனி போன்கள் தவிர பிற Digital Televisions, ADSL Modems, Wireless LAN interfaces, Telephone switches, GPS devices, Terrestrial trunked radios, இன்னும் Security Solutions தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளது. தலைமையகம் Nokianvirta ஆற்றின் கரையோரம் Keilaniemi, Espoo, Finland-ல் உள்ளது

9 comments:

மாய உலகம் said...

nokia வை முதலில் நோக்கியவன்

கூடல் பாலா said...

சுவையான தகவல்கள் ...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

தகவலுக்கு நன்றி...

Unknown said...

நோக்கியா பற்றி ஆய்ந்து
நோக்கியே சொன்னீர் நன்றி!

புலவர் சா இராமாநுசம்

Anonymous said...

Apple has already taken over the market share for the smart phones from Nokia. Nokia is seriously in trouble to retain its share and its presence in the market. Its a matter of time.

Unknown said...

நோக்கியவன் நோக்கியே சொன்னீர் நன்றி!

சக்தி கல்வி மையம் said...

அருமையான தகவல்..
நன்றி சகோ.

rajamelaiyur said...

All are new information . . ThanksAll are new information . . Thanks

ஆயிரத்தில் ஒருவன் said...

இதுவும் நோக்கியா நிறுவன தகவல் தான் http://aayiraththilloruvan.blogspot.in/2010/11/blog-post_04.html

Post a Comment