Pages

Saturday, December 1, 2012

காக்கையின் கிராமம்


சென்னையிலிருந்து 150 கி.மி எங்கள் கிராமம் சென்னை வந்து 10 ஆண்டுகள் நெருங்கிவிட்டது.  படிப்படியாக என் கிராமத்து பயணமும் குறைந்து விட்டது. கடைசியாக உள்ளாட்சித்தேர்தல் ஓட்டு போட்டு  வந்த பிறகு இப்போது தான் போகும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. பெரும்பாலும் பொங்கலுக்கு போவோம் ஆனால் இந்த தடவை போக முடியுமா என்பது சந்தேகம் ஏற்பட ஒரு நிகழ்ச்சிகாக வந்தாவசி வரை சென்றோம் அங்கிருந்து 40 கி.மி தான் போக முடிவு செய்து 2வீலரில் பயணம் காலை 7.00 மணிக்கு கிளம்பி பைபாஸ் சாலையில வண்டி பறந்து கொண்டு காஞ்சிபுரம் அடைந்தது. அதற்கு பிறகு ஒற்றை வழிப்பாதை கிராமத்தின் சாரலில் பயணம் 5 கி.மி ஒரு கிராமம் என எங்களுடைய கிராமத்து நினைவுகளை  ஞாபகப்படுத்தியே வந்தது காலியான சாலைகள் சத்தம் இல்லாமல் டூவிலரில் ஒரு சுகமான பயணம் தான் கிராமத்தை நோக்கி நகரும் போது பரபரப்புகள் குறைந்து இயல்பான கிராமத்து தன்மைக்குள் புகுந்துவிடுகிறோம்.  



சில நாட்களுக்கு முன் பொய்த மழையால் எங்கும் பசுமையாக தான் இருக்கிறது நிலங்கள்.  அங்கங்கே இந்த சென்னை பண முதலைகள் சில இடங்களை ஆக்கிரமித்து பிளாட் போட்டு விற்பனை செய்து கொண்டு இருக்கிறார்கள். 12 லிருந்து 15 மணி நேரம் மின்சாரம் இல்லை என்ன பண்ண முடியும் இந்த சிறு விவசாயி விளை நிலங்களை ரியல் அதிபர்களின் கைக்கு மாறுகிறது. நேரபரபரப்புக்குள் சிக்கி தவிக்காத கிராமத்து மக்களை பார்க்கும் பொழுது நிச்சயம் மனம் ஏங்கும்.  10 மணிக்கு வந்தவாசி அடைந்து நிகழ்ச்சி முடித்து விட்டு 1 மணிக்கு எங்கள் கிராமத்தை நோக்கி பயணம் ஆரம்பித்தது.
மூடு விழாவை ஏதிர்நோக்கியுள்ள நான் படித்த ஆரம்பபள்ளி

Sunday, November 11, 2012

கனவைத் தேடி



தன்னுடைய வாழ்நாள் கனவே ஒரு சிறந்த ஓவியன் ஆகனும் கனவு அதற்காகவே சிறு வயது முதலே  கனவுகளுடன் தன்னுடன் வாழ்க்கை பயணத்தை தொடங்கினான் அந்த நண்பன். அதற்காகவே சிறந்த குருவை தேர்தெடுத்து அவரின் சீடனாக 10 ஆண்டுகள் தனது ஓவிய பயிற்சியையும் கனவையும் கற்றான். தன்னுடைய திறமையை நீருபிக்க வேண்டிய தருணம் வந்தது தனது 3 நாட்களாக வரைந்து அவனால் சிறந்து வெளிப்படாக நினைத்து வரைந்தான் அதை பரிசோதிக்க அவனுடைய பகுதியில் உள்ள தெருவில்  ஒரு பகுதியில் அனைவரும் பார்க்கும்படி   வைத்து அருகே ஒரு பலகையில் நான் வரைந்த இந்த ஓவியத்தில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அருகிலுள்ள மையினால் கோடு போட்டு தவறை கூறுங்கள் என எழுதி வைத்து மிகவும் பாராட்டுகளை எதிர்பார்த்து இருந்தான்.

ஆனால் அவன் மாலையி்ல் வந்து பார்க்கும் போது படம் முழுவதும் தவறு தவறு என பெருக்கல் கோடு போட்டு  இருந்தனர். அந்த பகுதியில் சென்றவர்கள் எல்லாரும்  உன்னலாம் எவன்டா ஓவியன் சொன்னது என பல வாசகங்கள் வேறு மனம் உடைந்தான் நான் தோற்றுவிட்டேன் என அழுதான் என்னால் சிறந்த படைப்பை தரமுடியவி்ல்லை என வருந்தினான். தன் குருவிடம் நடந்தவற்றை கூறினான். அவர் வா அந்த படத்தை காட்டு அட போங்க குரு அதைவேற நீங்க பார்த்து  நீங்களும் ஏதாவது சொன்ன  என்னால தாங்கமுடியாது விடுங்க எனக்கு அவ்வளவு தான் போல என  வருந்தி கொண்டான். குருவிடாமல் போய் அந்த படத்தை பார்த்தார்  நல்ல  தாப்ப இருக்கு அருமையா பெயிண்ட் பண்ணீயிருக்க என கூறினார் அட போங்க குரு இந்த தெருவுல போனவங்க எல்லாம் குருடா என்ன என்று கூறினான். அதற்கு அந்த குரு சரி இதே ஓவியத்தை சிறிதும் மாறாமல் என்கிட்ட வரைந்து கொடு என்றார். எதற்கு குரு என்றான் நான் சொன்னதை செய் என்றார். 

Wednesday, September 12, 2012

மதம் மனிதனின் அறியாமையா????



னிதன் சக்கரம் கண்டுபிடித்தான்!
அது அவனை அறிவியலிலும் பொருளாதாரத்திலும்
வளர்ச்சி அடைய செய்தது.

Monday, August 27, 2012

சென்னை பதிவர்கள் மாநாட்டு ஆச்சரியங்கள்


      சென்னையில் வலைப்பதிவுகளின் மாநாடு மிக பிரமாண்டமாக அமைதியான முறையில் சீரும் சிறப்புமாக நடைபெற்றது. கிட்டதட்ட 200 வலைப்பதிவர்கள் ஒரு சங்கமித்த ஒரு அற்புதமான சங்கமம் என்று தான் சொல்ல வேண்டும் எந்த ஒரு பகுபாடுகள் இன்றி அனைவரும் அன்பால் ஒருமித்த ஒரு அற்புத பெருவிழாவாக அமைந்தது. இந்த பதிவர்கள் மாநாடு.
மூத்த (முதியவர்களை) வலைப்பதிவளர்களை இளைய பதிவர்கள் வாழ்த்தி அவர்களை கௌரவிக்கும் ஒரு  அற்புத நிகழ்வாக தள்ளாடும் வயதில் தடுமாறாமல் எழுதும் அவர்களி்ன் எழுத்துகளுக்கு பாராட்டுகளும், நன்றிகளும் அளிக்கப்பட்டு அவர்களை ஊக்களிக்கப்பட்டது.  இதை விழா தலைமைக்கு அற்புதமாக செய்தது. முகம் தெரியாமல் பழகிய நட்புகள் ஒருவருக்கெருவர் நேரில் சந்தித்து அறிமுகப்படுத்தியும், அன்பை பரிமாறிக் கொண்டதும் நிச்சயம் வலையுலகில் ஒரு புதுமையான நிகழ்வு. வருங்காலத்திலும் இது போன்ற நிகழ்வுகள் அதிகரிக்க பட வேண்டும் என்பது அனைவரின் ஆசையாகும்.

Friday, August 24, 2012

பதிவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள என்ன தகுதி????


         கடந்த 4 நாட்களாக சென்னையில் நடைபெறும் பதிவர்கள் மாநட்டை பற்றிய செய்தி பல வலைதளங்களில் காண முடிகிறது.

பதிவர்கள் மாநாடு என்றால் மிகவும் பிரபலமானவர்களும் பலருக்கு பயனளித்த வலைத்தளத்தின் உரிமையாளர்கள் மட்டுமே கலந்து  
கொள்ள வேண்டும் என்றும் அல்லது வலைதளத்தில் ஏதாவது பதிவு செய்தவர்கள் மட்டும் தான் என்ற நினைத்து கொண்டு இருந்தேன். கலந்து
கொள்ள தகுதி என்ன என்று எந்த பதிவர்களும் கூறவில்லையே என்று  நினைத்துகொண்டு இருந்தேன்.

Sunday, July 1, 2012

பிரமிக்க வைக்கும் மணல் சிற்பங்கள்

பிரமிக்க வைக்கும் மணல் சிற்பங்கள்


Monday, May 14, 2012

வழக்கு எண் 18/9 கடைசி விமர்சனம்


            இணையத்தில் முதலி்ல் வலைப்பதிவு  பற்றி முதலில் அறிமுக ஆனபோது மிகவும் பிரமிப்பாக இருந்து. யார்வேண்டுமானலும் தங்களது அனுபவத்தை படைப்பை கனவுகளை வெளியிட சிறந்த பொக்கிஸ ஊடகமாக இருந்ததை கண்டு வியந்துள்ளேன்.
வலைப்பதிவு எழுத வருவதற்கு முன்பே சினிமா விமர்சனம்,சினிமா செய்திகள் என எதைப்பற்றியும்எழுத கூடாது என முடிவுடன் பிளாக் தொடங்கினேன் ஏற்கனவே பல ஊடகங்கள் சினிமாவை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறது ஆதலால் அதை விட நிறைய விஷயங்கள் உள்ளது முடிந்தால் அவற்தை எழுதலாம் இல்லை என்றால் சும்மா இருக்கலாம் என்ற  முடிவுடனே வலைப்பதிவை தொடர்கிறோன்.

Saturday, May 12, 2012

உலகின் அழகிய நீர் வீழ்ச்சிகள்

கோடையை சமாளிக்க உ லகத்தின் அழகான நீர் வீழ்ச்சிகள்



Wednesday, March 7, 2012

அறிவியல் அதிசயம் Oresund பாலம்


Oresund பாலம் டென்மார்க் மற்றும் ஸ்வீடன் இரு நாடுகளையும் இணைக்கும் ஒரு அறிவியலின் அற்புதமான கடல் பாலம் மற்றும் டனல் அமைந்துள்ளது கடலின் பாதி சுமார் 8 கிலோ மீட்டர் பாலமாகவும் அதற்கு அடுத்த 8 கிலோ மீட்டர் நீருக்கு அடியில் செல்லும் சுரங்கபாதையாகவும் (டனல்)அமைந்துள்ளது


டென்மார்க்கின்  கோபன்ஹேகன் நகரின் தலைநகரான டானிஷ் மற்றும் சுவீடனின் malmo நகரத்தையும் இணைக்கும் பாலமாக இது அமைந்துள்ளது.
நான்கு வழி பாதையாகவும் மற்றும் பாதையின் அடியில் ரயிலுக்கான இருப்புபாதையும் அமைந்துள்ளது மிக பிரமாண்ட பாலமாக உள்ளது 

Oresund பாலம் ஐரோப்பாவி்ன் மிக நீண்ட இரயில் இருப்புபாதை கொண்ட பாலமாகவும் உள்ளது ஐரோப்பவின் சர்வேதேச நெடுஞ்சாலை E20 இணைக்கிறது இந்த பாலம்




டானிஷ் கட்டடக்கலை நடைமுறையில் வடிவமைக்கப்பட்டது.   இரு நாட்டின் சுங்க வரி பாஸ்போர்ட் ஆய்வுகள் என பொதுவாக உள்ளன 








Saturday, February 25, 2012

சிலிர்க்க வைக்கும் மலைப்பாதைகள்

 உலகில் அதிக விபத்துகளை தரும் அழகிய மலைப்பாதைகள்









Saturday, January 28, 2012

தொலைக்காட்சி லாட்டரியில் சிக்கி தவிக்கும் தமிழக மக்கள்

“விழுந்தால் வீட்டுக்கு விழாவிட்டால் நாட்டுக்கு” என்ற கோஷத்துடன் லாட்டரிச் சீட்டு திட்டத்தை அண்ணாதுரை அவர்கள் முதல்வராக இருந்த காலத்தில்  தமிழக அரசு அறிமுகம் செய்தது. ஆனால் தனியாரும் லாட்டரி தொழிலில் வந்த பிறகு மக்களி்ன வருமானம் அதில் கரைந்து போய், குடும்பங்கள் சீரழிந்தன இதனால் முந்தைய ஆட்சிகாலத்தில் ஜெயலிலதா அவர்களால் தடைசெய்யப்பட்டு இன்றளவும் அமலில் உள்ளது.

ஆனால் மக்களின் ஆசை என்ற பலவீனத்தை மூலதனமாகக் கொண்டு டி.விக்கள் வெவ்வேறு பெயர்களில் லாட்டரிக்கு இணையான கொள்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். ஏதாவது ஒரு பரிசு திட்டத்தை அறிவித்து விட்டு குறிப்பிட்ட எண்ணுக்கு SMS அனுப்புங்கள் என்று  சொல்வதை நம்பி பல லட்சம்  மக்கள் SMS அனுப்புகிறார்கள் அதில் நிறுவனத்திற்கு கிடைக்கும் வருமானம். அவர்கள் தரும் பரிசுத்தொகைவிட பல நூறு மடங்கு அதிகம் சம்பாதிக்கிறார்கள் என்பது பாமரர்களுக்கு மட்டுமல்ல, படித்தவர்களுக்கும் தெரியாது,

கடந்த சில வாரங்களாக திரையில் ஒரு பாடலில் சில காட்சிகளை ஒடவிட்டு அது தொடர்பான ஒரு கேள்வியை கேட்டு அதற்கான விடை சொல்ல அழைக்கும் நிகழ்ச்சி ஒரு தனியார் டி.வியில் ஒளிபரப்பானது. அவர்களின் கேள்விக்கு உங்கள் வீட்டு குழந்தைகளுக்கு கூட தெரியும் எனவே ரூ.5000 பரித்தொகை பெற்றுவிடும் ஆசையில் உடனே ஆர்வலர்கள் தொடர்பு கொள்ள முயல்வார்கள் ஆனால் ஒருவருக்கும் சிறிது நேரம் லைன் கிடைக்குது அவர்களின் ரேட்டிங் உயரும்.

ஆனால் நிமிடத்திற்கு ரூ.10 என மக்களின் பணம் கரைந்து கொண்டிருக்கும் 2 நிமிடம் இணைப்பில் இருந்தாலும் ரூ. 20 போய்விடும் இந்த ரூ. 20 யில் 14 ரூபாய் தயாரிப்பு நிறுவனத்திற்கும் மீதி கூட கொள்கையடிக்கும் செல்போன் நிறுவனத்திற்கும் சேரும். சுமார் ஒரு லட்சம் போர் தொடர்பு கொள்கிறார்கள் என வைத்து கொண்டாலும் மொத்த வருமானம் ரூ. 20 லட்சம் பரிசுத்தொகை உள்ளிட்ட எல்லா செலவும் ரூ.2 லட்சம் மட்டுமே மீதியெல்லாம் கொள்ளை லாபம்.

 இதற்கும் ஒரு படி மேலே போய் மக்களை கோடிஸ்வரன் ஆக்கிடுவோம் என்று  மக்களை ஏமாற்ற பெரிய நிறுவனம் கவர்ச்சி நடிகர் என மக்களின் பணத்தை சுரண்ட ஒரு பெரிய பட்டாளம் இறங்விட்டார்கள. இந்நிகழ்ச்சிக்கு குறைந்தது 2sms அனுப்ப வேண்டும். 



தமிழகத்தின் ஏழு கோடி மக்களில்  தினமும் 10 லட்சம் மக்களையாவது பலிகட ஆக்க வேண்டும் என்பது இவர்கள் திட்டம். டி.வி. நியுஸ் பேப்பர். பேஸ்புக். Fm அனைத்திலும் மிகப்பெரிய விளம்பரம் செய்து  ஒருநாளுக்கு SMS மூலம் செல்போன் நிறுவனங்களின் தினமும் வருமானம் 1கோடி. நிகழ்ச்சி தயாரிப்பாளருக்கு ரூ. 50 லட்சம் இப்படி 7 நாட்களின் வருமானம் 7 கோடி இது 10லட்சம் பேரின் கணக்குதான் இதுவே தினம் 1கோடி மக்கள் கூட SMS அனுப்புகிறார்களாம் அப்படி என்றால் வருமானம் ????

பரிசு பெரும் அந்த நபர் 10 லட்சமோ 15 லட்சமோ தான் இருக்கும்  இது தவிர விளம்பரம்  போன்றவை மொத்தமாக பார்த்தால் ஒரு நிகழ்ச்சிக்கு ரூ. 20 கோடி வருமானம் கிடைக்குமாம்.

இப்படி தழிழர்களின் பணத்தை சுரண்டப்படுவதை பற்றி யாரும் கவலை பட்டதாக தெரியவில்லை அரசாங்கமும் இதை வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கிறது.

உதாரணமாக எனது சகோதரர் முதல் வாரத்தில் அனைத்து கேள்விகளுக்கும் sms அனுப்பி ரூ. 120 இழந்துள்ளார்.  இப்படி பல கோடி மோசடி செய்து இன்னும் அந்தகோடீஸ்வர நிழ்ச்சி இன்னும் ஆரம்பித்ததாக தெரியவில்லை.

கோடிகளுக்காக அலைந்து தெருக்கோடியில் நிற்கும் ஏமாளி தழிழர்களா நாம்???????????

Thursday, January 26, 2012

குடியரசு தினமும் மத்திய அரசின் கஞ்சத்தனமும்

பிரபல தமிழ் நாளிதழில் 11 பக்கத்தில் இன்று குடியரசு தினத்திற்கான மத்திய அரசின் விளம்பரம்

இந்த விளம்பரத்திலுள்ள வாசகம்
ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை மூவர்ணகொடி நமது சுயமரியதை
இந்த விளம்பரத்தில் நமது தேசிய கொடியின் ஒருவர்ணமும் இல்லை
எவ்வளவு சிக்கனம் இது தான் மக்களுக்காக  அரசு கட்டும் சுயமரியாதை தலைவர்களின் படங்களுடன்  13 பக்கத்தில் அழகிய மல்டி கலருடன் விளம்பரம் செய்ய லட்சங்களில் செலவு செய்யும் மத்திய அரசு மக்களுக்கு இது போதும் என்ற நினைப்பும் மூவர்ணகொடி வாசகம் வேற

அடுத்தாக இந்த பிரபல பத்திரிக்கை கள்ளகாதலை கட்டம் போட்டு கலரில்
கொடுக்கும் இந்த நாளேடு ஏனே மத்திய அரசு கொடுத்த பணத்திற்கு சரியாக வேலை செய்கிறது.  அதில் கொடுக்கப்பட்ட வாசகத்திற்காகவாவது
கலரில் அச்சிட்டு இருக்கலாம்? 

 இது தான் பத்திரிக்கை சுதந்திரமோ..........

Sunday, January 15, 2012

அம்மாவும் பொங்கலும்

இந்த ஆண்டுக்கான முதல் பதிவை பொங்கல் அன்றாவது எழுத வேண்டும் என்று ஒரு வரமாக சிந்தனை எதைப்பற்றி எழுதலாம் என்று.
கடுமையான பணிச்சுமையால் பிளாக் பக்கம் வருவதே குறைந்து விட்டது எதாவது ஒரு பதிவை எழுதி ஆக வேண்டும் என்று நேற்று நீண்ட நேரம் நினைத்துகொண்டே படுத்தேன்.


ஒவ்வொரு பொங்களுக்கும் எங்கள் கிராமத்துக்கு செல்வோம் இந்த வருடம் அண்ணின் திருமணம் காரணமாக சில வேலைகள் இருப்பதால் சென்னையில் தான்.

காலை 6.30 மணிக்கு அம்மா வந்து எழுப்பினார்கள் என்னைக்குமே அவர்கள் இவ்வளவு சீக்கிரமாக எழுப்பமாட்டார்கள். தெருவில் கோலம் போட்டுள்ளேன் அதை வந்து படம் எடு என்று கூப்பிட்டார்கள் கூட மாட தான் யாரும் உதவி செய்ய மாட்டிங்க இதை ஒரு படமாவது எடுத்து வை என்று கூறிகொண்டு இருந்தார். விடியற்காலை 4.30 மணிக்கு எழுந்து கோலம் போட்டுள்ளார்கள் போல. அடுத்த பொங்கலுக்கு எல்லாம் கூட ஒரு பெண்ணு இருப்பாள் என்று தனது மருமகளை எதிர்நோக்கி கூறி கொண்டு இருந்தார். இந்த ஆண்டின் முதல் பதிவை அம்மாவைப் பற்றி உடனடியாக எழுதலாம் என்று உட்கார்ந்து விட்டேன்.


கிராமத்திலிருக்கும் பெண்கள் எல்லாரும் திருமணம் செய்து நகரத்தை நோக்கியே அவர்கள் வாழ்க்கை இருக்கும் ஆனால் எங்கம்மா மட்டும் இதற்கு விதிவிலக்கு சென்னையில் பிறந்து வளர்ந்த எங்கம்மா எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் சரியான பட்டிக்காட்டு கிராமத்தில் வாழ்கைப்பட்டார்கள் (கஷ்டபட்டார்கள்) என்று தான் செல்ல வேண்டும்.
எந்த வேலையும் தெரியாமல் கிராமத்திற்கு குடிபெயர்ந்த அவர்கள் கிராமத்து பெண்களையும் மி்ஞ்சி வயல் வேலைகள் அனைத்தும் அருமையாக செய்தார்கள். பல பேர் பட்டணத்திலிருந்து வந்து அருமை எல்லா விவசாய வேலைகளும் செய்யுறாங்க பாரு என்று கிராமத்து பெண்கள் பல பேர் கூறுவதை நாங்களே பல முறை கேட்டிருக்கிறோம்.


எங்களது பள்ளி நாட்களில் எங்களது பிடிவதாத்திற்கும். வறுமைக்கும். கொடுமைக்கார மாமியாரின் ஆட்டத்திற்கும். போதது என்று வயல் வெளிகளில் ஆட்கள் இல்லாம் தானே செய்யும் வயல் வேலை என்று பம்பரமாக சுழன்று சுழன்று பாரத்தை சுமையாக இல்லாமல் சுகமாகவே சுமந்தார்கள் பல நாட்கள் அவர்கள் இரண்டும் பையனா பெத்து தொலைச்சுட்டேன் ஒரு பெண் புள்ளை இருந்த எனக்கு எவ்வளவு ஒத்தாசக இருப்பாள் என கூறிக்கொண்டுதான் இருப்பார்கள். நாங்கள் ஒவ்வொரு நாளும் வேலையை அதிகரிக்க செய்வோமே ஒழிய உதவி என்று செய்தாக நினைவில்லை.
   சுமார் 25 வருடம் கிராமத்து வாழ்கையிலும் குடும்பத்தின் முன்னேற்றத்திற்காகவும் பாடுபாடும் கிராமத்து குடும்ப தலைவிகளில் ஒருவராய் வாழ்ந்து வந்தார். விவசாயத்தை மட்டுமே செய்பவன் பணக்காரனாக முடியாது கடன்காரனாக தான் ஆக முடியும் என்பது எங்கள் கிராமத்தின் சாபக்கேடு. கடன் சூழலில் இருந்து மீள்வதற்கு ஓரே வழி விவசாயத்தை கைவிட்டு விட்டு  நகரத்தை நோக்கி புலம்பெயர்வதே சிறந்ததாக உள்ளது எங்களது கிராமத்தின் தலையெழுத்து புலம்பெயர்ந்தவர்கள் எல்லாம் ஓரளவு வசதி வாய்ப்புடன் கடன் இல்லாமல் நிம்மதியாக தான் உள்ளார்கள் அந்த பட்டிலில் இப்போதும் நாங்களும். 

 இப்போது கடந்த 6 வருடமாக சென்னையில் சொந்தமாக தொழில் நிறைவான வாழ்க்கை சொந்தாக வீடு இப்போது சிறப்பாக நடைபெற இருக்கும் அண்ணன் திருமணம் என கடந்த 25 ஆண்டுகால கிராமத்து வாழ்க்கையில் எங்கள் அம்மா பட்ட கஷ்டங்கள் சிறதளவாவது குறைந்துள்ளது என்று தான் கூற வேண்டும்.  எத்தனை மகன்கள் அம்மாவை பாராட்டுகிறார்கள் பிடிவதாதம் செய்வதும் அதுசரியில்லை இது சரியில்லை  சண்டைபோட்டுவதும் எங்களை போன்ற மகன்களின் வேலையாக உள்ளது பண்டிகை நாட்களிலாவது  அவர்களை ஒரிரு வார்த்தைகளால் பாராட்டலாம் என்று இந்த கிராமத்து காக்கைக்கு தோன்றியது உங்களுக்கும் தோன்றினால் நலமே!