Pages

Monday, May 14, 2012

வழக்கு எண் 18/9 கடைசி விமர்சனம்


            இணையத்தில் முதலி்ல் வலைப்பதிவு  பற்றி முதலில் அறிமுக ஆனபோது மிகவும் பிரமிப்பாக இருந்து. யார்வேண்டுமானலும் தங்களது அனுபவத்தை படைப்பை கனவுகளை வெளியிட சிறந்த பொக்கிஸ ஊடகமாக இருந்ததை கண்டு வியந்துள்ளேன்.
வலைப்பதிவு எழுத வருவதற்கு முன்பே சினிமா விமர்சனம்,சினிமா செய்திகள் என எதைப்பற்றியும்எழுத கூடாது என முடிவுடன் பிளாக் தொடங்கினேன் ஏற்கனவே பல ஊடகங்கள் சினிமாவை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறது ஆதலால் அதை விட நிறைய விஷயங்கள் உள்ளது முடிந்தால் அவற்தை எழுதலாம் இல்லை என்றால் சும்மா இருக்கலாம் என்ற  முடிவுடனே வலைப்பதிவை தொடர்கிறோன்.



 எப்போதும் படம் வெளியாகி 10 நாட்கள் ஆன பிறகு தான் எந்த படமும் பார்ப்பேன். நிறைய  சினிமா வலைப்பதிவாளர்களை பார்த்து ஏன் இவ்வளவு சினிமா பைத்தியமாக உள்ளார்கள் என்று கூட நினைப்பதும் உண்டு. 


நேற்று தான் வழக்கு எண் 18/9 படம் பார்த்தேன் அனைவராலும் ஏற்றுக் கொள்ளபட்டு பாராட்டும் படம்  என  பல விமர்சனங்களை கண்டு விட்டுதான் போனேன்இது படம் அல்ல இந்த யாதர்த்த சமூகத்திற்கான ஒரு அருமையான பாடம் என பிரமிக்க வைத்து விட்டது. இந்த படத்தை பற்றி நிச்சயம் ஏதாவது என் கருத்துகளை எழுத வேண்டும் இல்லை வலைப்பதிவு எழுதரது வேஸ்ட் என்று தியேட்டரை விட்டு வெளியே வரும்போது 
எண்ணிக்கொண்டு வந்தேன். 

படத்தில் நடிக்கும் கேரக்டர்களை தேர்வு செய்ததிலேயே டைரக்டர் பாலாஜி சக்திவேல் வெற்றி பெற்றுவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும் 
படத்தில் மொத்தமாக பார்த்தால் 6 அல்லது 7 கேரக்டர்களை வைத்து அனைத்து ரசிகனையும் இரண்டரை மணிநேரம் எந்த முனகலும் இல்லாமல் படம் பார்க்க வைத்தது மிகப் பெரிய வெற்றி. கீழ்தட்டு மக்களின் உண்மையான வாழ்வை தன் கண் முன்னே நிறுத்துகிறது சென்னை போன்ற பெரு நகரங்களில் உள்ள மேல்தட்டு மக்களுக்கு கிராமத்தில் மண் அள்ளும் செங்கல் செய்யும் தொழிலாளர்கள் பலர் தங்கள் வாழ்வை கந்துவட்டிக்கு

தங்களது முழு வாழ்வையே அடகு வைக்கிறார்கள என்பது சினிமாவில் பார்த்தாவது தெரிந்து கொள்பார்கள். சமூகத்தின் பணம் உள்ளவர்களுக்கு உள்ள  சட்டமும் இல்லாதவனுக்கு உள்ள சட்டமும் மாறுபட்டவை தான்  என ஒட்டு மொத்த மக்களின் வேதனையையும் பிரதிபலிக்கிறது இந்த படம்.


கூத்து கலைஞனாக வரும் அந்த சிறு பையனின் நடிப்பு பிரமிப்பாக உள்ளது. இந்த சிறு பையனுக்கு வாழ்வு அளித்த  பாலாஜி சக்திவேல் அவர்களுக்கு மிக்க நன்றி!


பணம் இல்லாதவன் இந்த சமூகத்தல் ஊமையாகி போகின்றான் என்ற யாதர்த்தை வேலைக்காரியாக (கதாநாயகி) இந்த பெண் கேரக்டர் உணர்த்துகிறது. வட நாட்டிற்கு சிறுவர்களை விற்கும் கும்பல் கொத்தடிமைகள் என தினசரி நாளிதழ்களில் நாம் படிக்கும் ஒருவரி செய்தியாக இருக்கும் ஒவ்வொருத்தரின்  பின்னாலும் வேலு வின் போல் பல துன்பங்களை கடந்து வருகிறார்கள் என்பது யாரும் கண்டுகொள்ளாத செய்திதான். மயங்கி கிடக்கும் பையனை வேடிக்கையாலும் விமர்சனங்களாலும்மட்டுமே நடுத்தர மேல்தர மக்களால் பார்க்க முடியும் கீழ்தட்டு மக்கள் தான் இவர்களுக்கான ஆதரவு என்பதை படம் பிடித்து காட்டுவது யதார்த்தம்.


பிளாட்பார மக்களும் மனிதர்களே என அவர்களிம் ஒரு பரிதாபத்தையாவது கொண்டு வந்துள்ளது இந்த படம். வேலு கேரக்டர் உண்மையாக அவன் வாழ்வில் நடத்தற்போல் ஒரு நடிப்பு பள்ளிகூடம் செல்லும் மாணவனுக்கு  பணம், செல்போன் போன்றவைகள் எங்கே கொண்டு செல்லும் என்று  கூறியிருப்பது சரியான சவுக்கடி இதை எந்த மேல்தட்டு மக்களும் கவனிக்க போவதில்லை.


போலீஸ்கரரின் நடிப்பு அருமை விசாரிப்பதிலும், கண்டுபிடிப்பதிலும் தமிழ்நாட்டு போலீஸ்கரர்கள் சரியாக தான் இருப்பார்கள் அதற்கு அப்புறம் தான் பேரம் நடைபெறுகிறது. என்று யாதர்த்தை தைரியாக சொல்லி இருப்பது பாரட்டுக்குரியவை. கிளைமாக்ஸ் சினிமாவுக்கு ஆனது தான்.


 வேலுவை போல எத்தனையே குற்றம் செய்யாத அப்பாவிகள் பல வழக்குளில் மேல்தட்டு மக்களை காப்பாற்றுகிறார்கள் என்பது அனைவரும் அறிந்தது. இல்லாதவனை எவன் கேட்கப்போகிறான். படம் முடிந்து அனைவரும் எழுந்து மனதிற்ககுள் கைதட்டியதை  உணர முடிந்தது. கடைசியாக அந்த முகத்தை காட்டும் கதாநாயகி சமூகத்தை குறிக்கிறது. ஒருமுகம் அழகாகவும் மற்றொரு முகம் கொடுமையாகவும் உள்ள சமூகம்
அனைவரும் பார்க்க வேண்டிய நம் சமூகத்தின் காவியம் 

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல அலசல் !

திண்டுக்கல் தனபாலன் said...

என்னங்க... மறுபடியும் உங்க தளத்திற்கு வந்திருக்கிறேன் என்று நினைக்கிறீர்களா...?

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...

வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/08/blog-post_16.html) சென்று பார்க்கவும்...

Post a Comment