Pages

Wednesday, June 29, 2011

கவிஞனுக்காக ஒரு கவிதை

காதலுக்கா ஒரு கவிதை
கண்ணீருக்கா இன்னொரு கவிதை
உறவுக்காக ஒரு கவிதை
உரிமைக்காக இன்னொரு கவிதை
மௌனத்துக்கும் ஒரு கவிதை
நிலவுக்காக ஒரு கவிதை
கற்பனைக்கு இன்னொரு கவிதை
விடுதலைக்காக ஒரு கவிதை
விடியலுக்கு இன்னொரு கவிதை
இப்படி கவிதைகள் பல
கவிஞர்கள் சிலர்
ஒரு கவிஞன் அவனின் பார்வையில்
கண்பதெல்லாம் கவிதையாம்
தன் உயிரையும் மறந்திட்டான்
லக அழகை வர்ணிக்க!
ஒரு நாள் பார்த்ததை
மறுநாள் கவிதையாய் வடித்திடுவேன் என்கிறான்
கல்லையும் மண்ணையும் கூட
காதல் என்கிறன் இந்த கவிஞன்.....

Monday, June 27, 2011

ஈழத்தமிழர்களுக்காக மெரினாவில் நடைபெற்ற அஞ்சலி

சென்னை மெரினா கடற்கரையில் நேற்று நடைபெற்ற இலங்கையில் போரினால் உயிர் இழந்த ஈழத்தமிழர்களுக்கு மலர் அஞ்சலி மற்றும் மெழுகு ஏந்தி மௌன அஞ்சலி நடைபெற்றது ஏராளமான தோழர், தோழிகளும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள். அமைதியாகவும் ஒரு புரிதல் உடனும் மிக சிறப்பாக நடைபெற்றது.

அனைத்து தமிழர்களின் விருப்பமான கொலைகார அரக்கன் ராஜபக்சே ஐ.நா சபை நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட வேண்டும் என்ற முழக்கமாகவே இருந்தது. எங்களை போன்ற இளைய தமிழர்கள் நிறைய நண்பர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியதும் முழக்கங்களை எழுப்பியதும் அனைவரும் குரல் கொடுத்ததும் தமிழர்களின் உண்மையான கோபமும், உணர்ச்சிகளும் வெளிப்பட்டது. மழை வரும் என்ற பயம் அங்கிருந்த அனைத்து தோழர்களுக்கும் ஏற்படவே செய்தது. ஆனால் வருணபகவான் தமிழர்களின் முழக்கங்களை கண்டு அஞ்சி விலகிப்போனது என்று கூறலாம். 
சுமார் 6.30 மணியளவில் சீமான் மற்றும் நெடுமறான் அய்யா  போன்றவர்களும் கலந்து கொண்டு முழகங்களும் அஞ்சலியும் செலுத்தினர்
 
பெரும்பாலான தோழர்கள் நிகழ்ச்சி முடிந்த பின்னரும் அங்காங்கே கூடி முழக்கங்கள் மழை வரும் வரை நீடித்தது.

ஒவ்வொருவரின் கையிலும் ஏந்திய அந்த மெழுகு ஒளி நிச்சயம் விரைவில் ஈழத்தமிழர்களின் வாழ்வில் ஒளி வீசும் என்ற நம்பிக்யையுடன்.

அழிவான் அந்த அரக்கான்  ராஜபக்சே அன்று கொண்டாடுவோம் தீபாவளி இதே மெரினா கடற்கரையில்.

இந்திய அரசும் தமிழக அரசும் தலையிட்டு ஈழத்தமிழர்களின் அமைதியான வாழ்க்கை வாழ உதவிட வேண்டும் நம் உயிர்களை காத்திட வேண்டும் இதுவே அனைத்து தமிழர்களின் விருப்பம்.

உலகத்தமிழர்கள் ஒன்றுபடுவோம் அனைத்து தமிழர்களையும் 
ஓர் உயிராய் மதிப்போம்.........

Sunday, June 26, 2011

ஜப்பானியர்களுக்கு உதவும் சூரியகாந்தி

ப்பான் நாட்டில் சுனாமி மற்றும் நிலநடுக்கம் தாக்கிய புகுஷிமா நகரில் அணு உலையில் ஏற்பட்ட விபத்தினால் அந்நகரில் அதிக அளவில் அணுக்கதிர் வீச்சால் பாதிக்கப்பட்டுள்ளது. அதை குறைக்க பல்வேறு ஆய்வுகளும் நடவடிக்கைகளும் ஜப்பான் அரசு மேற்கொண்டுவருகிறது.
 
சூரியகாந்தி பூ உதவும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர் அணு கதிரியக்கம் படிந்த மண்ணை சுத்தபடுத்துவதற்கு இந்த பூச்செடிகள் உதவுகின்றன.

இதனால் அந்நாட்டில் மிக அதிகமாக  சூரியகாந்தி செடிகளை வளர்க்க பிரசாரம் செய்துவருகின்றனர். அந்நாட்டுஇளைஞர்கள் அனைவரும் சூரிய காந்தி செடிகளை பயிரிடுவதற்கு ஆர்வமாக இறங்கியுள்ளனர். 

சூரியகாந்தி செடிகளை நம்பிக்கையின் சின்னமாகவும் மறுகட்டமைப்பின் அடையாளமாகவும் ஜப்பானியர்கள் நம்புகின்றனர்.
எவ்வளவு பேரழிப்பை கண்டபோதும் தங்களின் தன்னம்பிக்கையுடனும் முயற்சியுடனும் தங்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு மாற்றும் ஜப்பானிர்களின் மனோபக்குவம் மிக வியப்புக்குரியதே........

Saturday, June 25, 2011

சீனாவின் வித்தியாசமான பாரம்பரியம்

 
ரவு 10 மணிக்கு எதிர்படும் அனைவரையும் கேட்கும் கேள்வி “குளிச்சாச்சா” என்பது தான் அக்கறையான இந்த விசாரிப்பு புதிதாக அங்கு செல்பவர்களுக்கு ஆச்சரியத்தை தரும். இதெல்லாம் நமது அண்டைய நாடான சீன நாட்டின் பாரம்பரிய பழக்கம் தான்.

ஒரு வேளை யாரவாது குளிக்கவி்ல்லை என்று கூறினால் அவர்கள் ஒரு அசுத்த ஜீவி என்றும் கேவலமாக திட்டவும் படுகேவலாமாகவும் பார்ப்பார்களாம் சீனர்கள் இவர்கள் இரவில்குளித்து  முடித்து விட்டு சுத்தபத்தமாக தூங்க போவார்கள் குளிக்காமல் ஒரு நாளும் தூங்கியதில்லை
குளித்து முடித்து இரவு உடையான நைட்டியை அணிந்து விட்டால் எந்த வேலையாக இருந்தாலும் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரமாட்டார்கள் ஆண்களும் இரவு உடை உடுத்திய பின்  விட்டை விட்டு வெளியே வரமாட்டார்கள். 

தூய்மையோடு தூங்க வேண்டும் என்பது சீனர்களின் ரத்தத்தோடு கலந்து விட்ட பழக்கம் இரவில் குளித்து விடுவதால் காலையில் வெறும் பல்லை தேய்ந்து, முகம் கழுவிவிட்டு ஆபீசுக்கு அடித்து பிடித்து ஓடி விடுவார்கள் உழைப்புக்கு ஒய்வுகொடுபபதில்லை ஒருநாளும் அவர்கள்.

காலையில் என்றால் அவசரமாக அரையும் குறையுமாக குளிக்க வேண்டும் பகல் முழுவதும் வேலை செய்துவிட்டு இரவில் பொறுமையாக அழுக்கு தேய்த்து குளிக்காலம் என்பது அவர்களின் விருப்பம்.

நமது ஆத்திச்சூடியில் கூழானாலும் குளித்துக்குடி என்பது போல சீனாவில் நள்ளிரவானாலும் குளித்து தூங்கு என்பது சீன தத்துவமாகும் 
நானும் சீனா தான் நான் இதுவரை குளிச்சதே கிடையாது
என்னைபற்றி எதாவது எழுத கூடாத நீங்கள் இந்த மனிஷங்களே
சுயநாலவாதிகள் தான்.......

Sunday, June 19, 2011

பிளாஸ்டிக் அதிர்ச்சியான தகவல்

ரு பிளாஸ்டிக் பையின் சராசரி பயன்படும் நேரம் வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே. ஆனால் அது மக்குவதற்கு ஆகும் காலமோ நூற்றுக்கணக்கான ஆண்டுகள். வகையைப் பொருத்து இந்தக் காலம் மாறுபடும்.
 
 கடலில் மிதந்து கொண்டிருக்கும் கழிவுகளில் 90 சதவீதம் பிளாஸ்டிக்கே
 
தற்போது உற்பத்தி செய்யப்படும் பிளாஸ்டிக்கில் வெறும் 7 சதவீதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது. அதாவது மறுபடி பயன்படுத்தப்படுகிறது. அப்படியானால், சென்னையில் ஒரு நாளில் மட்டும் கொட்டப்படும் கழிவு பிளாஸ்டிக்கின் அளவு 1,86,000 கிலோ.

சென்னை, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய நகரங்கள் தனித்தனியாக ஒரு நாளைக்கு 2,00,000 கிலோ (200 முதல் 250 டன். டன் என்றால் ஆயிரம் கிலோ) பிளாஸ்டிக் கழிவை உருவாக்குகின்றன. இதில் பாதி பிளாஸ்டிக் கழிவுகள் மட்டும் 4 சதுர கிலோ மீட்டர் பரப்பை அடைத்துக் கொள்ளும் தன்மை கொண்டவை. அடிக்கடி வீட்டுச் சாக்கடை, தெருச் சாக்கடை, மழைக்காலங்களில் மழை நீர் வடிகால் குழாய் போன்றவை அடைத்துக் கொண்டு நாறுவதற்கும், வெள்ளக் காடாவதற்கும் இந்த பிளாஸ்டிக்கே காரணம். இப்படி அடைத்துக் கொள்வதால் கழிவுநீர் தேங்குகிறது. ஆட்கொல்லி நோய்களைப் பரப்பும் கொசுக்கள், கிருமிகள் பல்கிப் பெருகி நோய் தாக்குவதற்கு நாமே வாய்ப்பு உருவாக்கித் தருகிறோம்.

நாம் அனைவரும் கவனக்குறைவாக வெளியேற்றும் கீழ்க்காணும் கழிவுகள்தான் நகராட்சி பிளாஸ்டிக் கழிவுகளில் 50 சதவீதத்தை உருவாக்குகின்றன.

- கேரி பேக்குகள்
- காய்கறி கேரி பேக்குகள்
- மளிகைப் பொருள் அடைக்கப்பட்ட பிளாஸ்டிக் பைகள்
- பேக்கேஜிங் பைகள், சுருள்கள்
- வீட்டு குப்பை பைகள்
- வணிக குப்பை பைகள்
- தொழிற்சாலை லைனர்கள்
- மருத்துவ, ஹோட்டல் குப்பை பைகள்

மக்கிப் போவதற்கு ஆகும் காலம்


பிளாஸ்டிக் பைகள் 100-1000 ஆண்டுகள்

வாழைப்பழத் தோல் - 2-10 நாட்கள்
பஞ்சுக் கழிவுகள் - 1-5 மாதங்கள்
காகிதம் - 2-5 மாதங்கள்
கயிறு - 3-14 மாதங்கள்
ஆரஞ்சு தோல் - 6 மாதங்கள்
உல்லன் சாக்ஸ் - 1-5 ஆண்டுகள்
டெட்ரா பேக்குகள் - 5 ஆண்டுகள்
தோல் காலணி - 25-40 ஆண்டுகள்
நைலான் துணி - 30-40 ஆண்டுகள்
தகர கேன் - 50-100 ஆண்டுகள்
அலுமினிய கேன் - 80-1000 ஆண்டுகள்
பிளாஸ்டிக் ரிங்க்ஸ் - 450 ஆண்டுகள்
டயபர், நாப்கின் - 500-800 ஆண்டுகள்

பிளாஸ்டிக் பாட்டில்கள் - எக்காலத்திலும் அழியாது

எனவே, பிளாஸ்டிக் கேரி பேக், பிளாஸ்டிக் பாட்டில்கள் போன்றவற்றை வாங்காதீர்கள். அந்தக் குப்பையை எந்த வகையிலும் உருமாற்றவோ, அழிக்கவோ முடியாது. இன்னும் 10, 20 ஆண்டுகளில் உலகம் கழிவு பிளாஸ்டிக்கால் நிரம்பி வழியும் என்று நம்பப்படுகிறது. நமது முதுமைக் காலத்தை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.

பிளாஸ்டிக் பைகளைத் தவிர்ப்பதற்கு இதற்கு மேல் வலுவான காரணம் வேண்டுமா?

சுத்தமான, மாசுபாடற்ற சுற்றுச்சுழலைப் பெறுவது ஒவ்வொருவரது அடிப்படை உரிமை
மற்றத்தை நம்மிடம் இருந்து தொடங்குவோம் வருங்கால சந்ததியினர் உயிர்வாழ சுற்றுச்சூழலை பாதுகாப்போம்............


(நன்றி- பயோடெக் பேக்ஸ் வெளியிட்ட அறிக்கை)

அதிசய விலங்குகள்

எல்லாம் கிராபிக்ஸ் கலாட்டா படங்கள் தான்  சும்மா அப்படி ஒரு வித்தியாசமாக
தலைப்பு கொடுத்து உங்களை வருகை எதிர்பார்த்து தான்
என்னா ஆட்டம்.............

Saturday, June 18, 2011

மின்னல்


மின்னல் தாக்கியதில் 
உயிர் பிழைத்தேன்.
ன் கண்கள் தாக்கியதில் 
ஏனோ?
ன்னையே மறந்து 
அலைகிறேன்
பைத்தியமாய்...............

Wednesday, June 15, 2011

பெண்

புன்னகையில் பூக்கின்ற புதுப் பூவாய்
எண்ணிலும் எழுத்திலும்
கன்னிமைக்கும் கவிதைகள்...........
மல்லிகைப் பூவாய் பூத்தவள் பெண்
வள் இன்பத்தையும் துன்பத்தையும்
சுமக்கின்ற தாயாகிறாள்
அவள் பிறப்புக்குப் பின்னாலே
எத்தனை இன்னல்கள்
பிறந்தாள் ஆம்!
அன்னைக்கும் தந்தைக்கும்
பணிவிடை செய்தாய்
ளர்ந்தாள் திருமணம் செய்து கொண்டாள்
மாலை சூடிய கணவனுக்கும்
பணிவிடை செய்தால்
கணவனை நெஞ்சில் சுமந்தால்
தாயானால்
குழந்தையை வயிற்றில் சுமந்தால்
குழந்தைக்கு பாலூட்டினால்
தாலாட்டினால் சோறுட்டினால்
ன்புடன் அறிவையும் ஊட்டினால்
அவனை வளர்த்து ஆளாக்கினால்
அவனுக்கு திருமணம் செய்து வைத்தாள்
தனது பேரக்குழந்தைகளுக்கும்
பணிவிடை செய்கிறாள்
வள் மண்ணுக்குள் மறையும்
வரை எத்தனை சிவன்களை
சுமக்கிறாள் பெண்...........

Sunday, June 5, 2011

சுமைகள் சுகமாய்

தன் துணையை இழந்து
இல்லாமையால் உறவுகள் பிரிந்து
ஒற்றை கைக்குழந்தை சுமந்துகொண்டு
பல பேச்சுகளையும் இச்சைகளையும் எதி்ர்கொண்டு
கால் வயிற்று கஞ்சியிலும் ஒரு சந்தோஷம் இவளுக்கு
கூலி வேலை மட்டுமே செய்ய தெரிந்த கிராமச்சி
ஓய்வு என்பதை மறந்த ஒரு ஜடம்
உழைத்து கொண்டே இருக்கும் இவள்
தன் மகனை ஒரு நாளும் பட்டினியிட்டதில்லை
இவள் ஒரு நாளும் புதிய ஆடைகள் உடுத்தியதில்லை
கிராமத்தை தாண்டி வேறஎங்கேயும் சென்றதில்லை
தினக்கூலியை ஒரு நாளும் தவறிவிட்டதில்லை
போரட்டங்களும் வலிகளும் பழகிய ஒன்று இவளுக்கு
தனக்காக எதையுமே நினைக்காத இவள்
மகள் சம்பாதித்து கொண்டு வந்தான்
அன்று இவள் நிறைவாய் ஓய்வொடுத்து கொண்டாள்
இந்த உலகத்தை விட்டு...........