Pages

Sunday, September 28, 2014

தோழி அனுசுயா


ஒவ்வொருவருடைய வாழ்வியல் பயணத்திலும் அடுத்த கட்ட முன்னோற்றத்திற்கு யரோ ஒருவரின் சிறிய வழிகாட்டுதலோ அல்லது உதவி கட்டயம் தேவைப்படுகிறது.

ஒரு சிலர் மட்டுமே சுயம்புவாக அனைத்து தடைகளையும் வெற்றி கொண்டு தனது லட்சியத்தை அடைகிறார்கள்......  

கிராமத்து மனிதர்களுக்கான வெற்றி என்பது அதிகமாக போராட வேண்டியுள்ளது.. அப்படியான கிராமத்து பெண்ணான அனுசுயா தன் முதல் நாவலான படைப்பை வெளியிட முட்டி மோதி பாதி கிணறு தாண்டியுள்ளார்.  
எதுக்கு இந்த வேலை பிழைக்கிற வேலையை பாரு எழுதி என்ன பெருச கிழி்க்க போகிறாய் என்ற வசைபாடும் சமூகத்தில் தன் படைப்பை வெளியிட உறுதியாக போராடி வெளியிட பொருளாதாரம் பின் தங்கியுள்ளது. 
ஒரு படைப்பாளியின் படைப்பு முளைத்து வெளியே வர உங்களது சிறு உதவி அவர்களின் எழுத்துலக பாதையின் ஓட்டத்தை வேகப்படுத்த உதவலாம்.  
மணிமேகலை பதிப்பகத்தின் வாயிலாக பாதி உயிர் பெற்று

மனம் படும் பாடு - நாவல்


கல்வியின் வலிமை உணர்ந்த நல் உள்ளங்களே!
பண்பின் சிகரங்களே
அறத்தின் செல்வங்களே!
கரம் கொடுக்கும் நெஞ்சங்களே
கருணை உள்ளங்களே 
தங்கள் உதவியை நாடி தேடி வந்திருப்பதோ
புது பதிப்பிற்கான நாவல்
மனம் படும் பாடு
தங்களின் மேலான உதவியை நாடும்
                                      
                               கிராமத்து பெண்  அனுசுயா  
                                                           
                                    கைப்பேசி   9843879821


அனுசுயாவின் சில கவிதைகள் 
ராஜாவின் வசியம் ராஜா.....
ராஜாதி ராஜா  ......
எங்கள் இளையராஜா
நீ என்ன மீண்டும் மயக்க வந்த
கார்முகில் வண்ணனோ! - அல்லது
புல்லாங்குழல் கண்ணனோ! 
உமது இசையில் மயங்காத
உயிரும் உண்டோ........?
செவி இருந்தால்  
கல்லும் கூத்தாடும் 
தன் மனத்தினால். 
உன்னை 
கண்டு களித்ததில்..............தேவை

தேவையை நோக்கி பூர்த்தித்தால்
தன் தேவைக்கான பூர்த்தி தானாக
வந்து அமையும்
தன் எதிரிலே....................

இது கடவுளுக்கும்! பொருந்தும்
கயனி மண்ணுக்கும் பொருந்தும்
இந்த மனிதனுக்கு பொருந்தாதா?

Sunday, November 17, 2013

சச்சின் ஒரு சகாப்தம்

சச்சின் இந்த பெயரை இந்த பெயரை எல்லா இந்திய மக்களுக்கும் பிடித்த பெயர் இந்தியர்கள் அனைவரும் இந்த பெயரை ஒரு தடவையாவது தங்கள் வாழ்நாளில சொல்லமா இருந்திக்க மாட்டாங்க!  கிராமத்துல ஆடு மாடு மெய்த்த எங்களை போன்ற பலரை மட்டையை தூக்கி கிரிக்கெட் ஆட வைத்தது சச்சின் தான் மொத்த இந்தியர்களையும் கிரிக்கெட் பற்றி பேச வைத்தது........ டோனி உட்பட பல இளைஞர்களின் கனவு நாயகனா சச்சின் இருந்தது அவரது தொடர்ந்து சிறப்பாக ஆடிய திறமையும் அவரி்ன் பண்பும் தான் கிரி்க்கெட் கடவுள் என  அனைத்து மக்களாலும் கொண்டாடப்படுகிறார்.

நேற்று டிவி அவர் கடைசி உரையை பார்த்து கொண்டு இருக்கும் பொழுது என் அம்மா இவரு இதுக்கு மேல விளையாட மாட்டார ரொம்ப நாளா விளையாட்டிகிட்டு இருந்தாரே....  என் போயிருராரு என்று சச்சினின் எந்த சாதானையும் அறியாத சமான்ய மக்களுக்கு கூட சச்சினை பிடிக்கிறது........ பல இளைஞர்களின் ரோல் மாடல் சச்சின் அவருக்கு தெரிந்தது எல்லாம் கிரிக்கெட் கிரிக்கெட் தான். எவ்வளவு  ஏற்றம் இறக்கம் வந்தாலும் மீண்டும் மீண்டும் அவரை நீருபிப்பார் அவரின் திறமை அத்தகைய திறமை பலரை வியக்க செய்தது பலருக்கு பாடமாகவும் இருந்தது....


      மைதானத்தில் தலை சிறந்த பவுலர்களையொல்லாம் தலைதெரிக்க ஓட வைத்தவர் மைதானத்தில் எந்தவொரு நேரத்திலும் அதிகப்பாடியான கோபமோ.  தரக்குறைவான வார்த்தைகளோ. சண்டையோ அவர் போட்டதாக எந்த 

ஒரு செய்திதளிலும் வந்ததே கிடையாது....  பல நாட்டு விளையாட்டு வீரர்களுக்கு இவர் ஒரு ரோல் மாடல். முன்னோடி என  வெஸ்ட் இண்டீஸ் வீரா் லாரா  அதிகப்பாடியாக இவரை புழ்ந்துள்ளார்.... முறைப்பாக விளையாடி வரும் விளையாட்டு வீரரையும் தன் நண்பர்களாக்கிய குணம் சச்சின் உயர்ந்த பண்பு..

      பல பத்திரிக்கையாளர்கள். விமர்சர்கள் என பல வித கேள்வி எழுப்பினாலும் அவர்களுக்கு தன் திறமையான ஆட்டத்தின் மூலமாகவே பதில் கூறினார் எந்த கட்டத்திலும் யாரையும் புண் படுத்து மாதிரி கருத்துக்கள் கூட கூறியது கிடையாது.....

8வது படிக்கும் போது சென்னையில ஆஸ்திரேலியா கூட டெஸ்ட் போட்டி ரேடியவுல தமிழ் வர்ணனை மதியம் சப்பாடு டைம்ல பள்ளி பக்கதுல இருக்கிற நண்பர் வீட்டுக்கு 6 நண்பர்கள் சேர்ந்து வர்ணனை கேட்க போனாம் கடைசி  நாள் இந்திய ஜெயிக்கும் தருவாய் சச்சின் 120 ரன்களுக்கு மேல் அந்த மேச்சில் பள்ளி கூட மணி அடிச்சாச்சு இருந்தாலும் ஜெயிக்கிறத  கேட்டுவிட்டு தான் போனோம் என முடிவாக இருந்தோம் 17 ரன்கள் மட்டும் தான் எடுக்குனோம் சச்சின் வார்னே பந்தில் அவுட் 6 விக்கெட் தான் போயிருந்தது அத்தனைபேரும் அடுத்தது அவுட் 5 ரன்னில் இந்தியா தோற்றது.... பள்ளிக்கு போனால் எங்க சுத்திடு வரிங்க போய் முட்டி பொடுங்கன்னு ஒரு மணி நேரம் முட்டி அது கூட பெரிச தோனல .ஜெயிக்க வேண்டிய மேட்ச் தோற்றுவிட்டதே என சச்சினுக்காக தான் கவலைபட வேண்டி  இருந்தது..... இது போல பல தருணங்கள் பலபேர் சச்சினுக்காக கவலைபட்டிருக்கிறார்கள் அவருடைய ஊழைப்பு சிறப்பாக அணியின் ஸ்கோரை தனி ஆளாக பல ஆட்டங்களில் உயர்தி வருவர் சச்சின் அவுட் என்றால் அவ்வுளவுதான்  இந்திய ஆட்டம் பார்கக வேண்டியதே யில்லை என பல நேரத்தில் இருந்து இருக்கிறது.

         எப்பவும் ஜெயிக்கிற அணியில் உள்ள வீரருக்கு தான் மேன் ஆப் மேட்ச் கொடுக்கப்பாங்க ஆன அதை மாற்றி எழுதியர் சச்சின் தான் இந்தியா தோற்ற பல ஆட்டங்களிலும் மேன் ஆப்மேட்ச பட்டம் வென்றார் ஆனால் அதை  வேண்ட வெறுப்பாக போய் வாங்கி வரும் சச்சின் சச்சின் தான் என்று தோன்ற வைக்கும் 2 ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலியா கூட  மேட்ச் 359 ரன் 140க்கு ரன் மேல் எடுத்து ஆடிவந்த சச்சின் 330 ரன்னில் அவுட் மற்ற வீரர்களும்  அடுத்த அவுட் இந்திய அணி தோல்வி  மேன் ஆப் மேட்ச் சச்சின் கண்ணிருடனும் கவலையுடனும் தோற்றுவிட்டோம் என கூறிய சச்சின் நாட்டுக்காக அவரின் அற்பணிப்பிற்காகவே அவருக்காக பல  இதயங்கள் வருத்தப்பட்டது... 

அனைவரையும் பல குழந்தைகள் சச்சின் போல் வருவேன் என கூறிக்கொள்ளும்  சச்சின் உண்மையாகவே குழந்தை குணம் கொண்டவர்தான்.........  சச்சின் என்ற வார்த்தை பலருக்கு வழிகாட்டி பலருக்ககு தன்னம்பிக்கை. ஏதே ஒரு விதத்தில் சச்சினால் ஈர்க்கப்பட்ட ஒவ்வொரு ரசிகனும்  சச்சினை கண்ணீரால் விடை அனுப்பினார்கள்...........   சச்சின் ஒரு சகாப்தம்  

Monday, September 2, 2013

பதிவர்கள் சந்திப்பு - ஒரு சிறப்பு பார்வைஇந்த ஆண்டு வலைப்பதிவர்கள் சந்திப்பு சீரும் சிறப்புமாக நடத்தேறியது.  வலையில் எழுதுவது மட்டுமே தம் பணி என்று இல்லாமல் புத்தக வெளியீடு குறும் படம் என் இந்த வருடம் அசத்தலாக நிகழ்ந்துள்ளது  அனைத்து ஏற்பாடுகளையும் நமது ஏற்பாட்டாளர்கள் குழு அருமையாக நிகழ்ந்தியுள்ளது.  கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும்  நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய சுரேக்கா. மதுமதி அவர்களின் பணியும் பாராட்ட தாக்கவையே.

நமது வலை எழுத்தாளர்களான சேட்டைக்காரன். சங்கவி. வீடு திரும்பல் மோகன்குமார். சுரேக்கா. யாமிதாஷா இவர்களது  5 புத்தகங்கள் வெளியீடு  ஒரு அருமையான நிகழ்வு அனைவரின் பாராட்டையும் கவனத்தையும்  பெற்ற மதுமதியின் 90டிகிரி குறும்படம் அருமை சமூகத்திற்கு  தேவையான ஒரு அற்புத படைப்புவெளியூர்களில் இருந்து பல சிரமங்களிடையே வந்த நம் பதிவர்கள் பாராட்டுக்குரியவர்களே.....

சிறந்த முறையில் உணவுகள்  ஏற்பாடு செய்யபட்டு இருந்தது
அண்ணன் ஜாக்கியுடன் நான்

தமிழ்வாசி பிரகாஷ் உடன் நான்


கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வலைத்எழுத்தாளர்களின் வளர்ச்சி  முன்னோக்கி சொல்கிறது அனைவரும் கவனிக்க பட வேண்டியவர்களாக மாறி வருவது ஒரு சிறப்பான முன்னேற்றமே அது மேலும் தொடரும் என்றும் நாம் அனைவரும் நம்புபோம்...........