கடந்த 4 நாட்களாக சென்னையில் நடைபெறும் பதிவர்கள் மாநட்டை பற்றிய செய்தி பல வலைதளங்களில் காண முடிகிறது.
பதிவர்கள் மாநாடு என்றால் மிகவும் பிரபலமானவர்களும் பலருக்கு பயனளித்த வலைத்தளத்தின் உரிமையாளர்கள் மட்டுமே கலந்து
கொள்ள வேண்டும் என்றும் அல்லது வலைதளத்தில் ஏதாவது பதிவு செய்தவர்கள் மட்டும் தான் என்ற நினைத்து கொண்டு இருந்தேன். கலந்து
சிலர் பதிவர்கள் கலந்து கொள்பவர்களின் பெயர்களையும். தளங்களையும் பட்டியலை வேறு பார்த்தேன். அவர்களது வலைத்தளங்களுக்கும் சென்று 2 நாட்களாக பார்த்துகொண்டு இருந்தேன். என்னைபோல் அதிகமாக ஏழுதாத பதிவர்களின் பெயர்களையும் கண்டேன். முடிவாக எந்த பதிவர்க்காவது போன் போட்டு கேட்டுலாம் என்று முடிவு பண்ணினேன்.
ஒரளவு தெரிந்த கவிதை வீதி சௌந்தர் அண்ணே நம்ம பகுதி ஆளு அவர்கிட்ட கேட்கலாம்
அண்ணே வணக்கம் நான் கிராமத்து காக்கை வலைதளம் இருக்கு அதிகம எழுதியது கிடையாது
பதிவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள தகுதி என்ன? நான் கலந்து கொள்ளலாமா என்று கேட்டேன்.
தரளமாக கலந்து கொள்ளலாம் நண்பரே எந்த தகுதியும் தேவையில்லை. யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்
வலைதளத்தை படிக்கிறவங்களா இருந்தா கூட பரவயில்லை அவர்களையும் வர சொல்லலாம் என்று கூறினார்
கடைசியாக எனது comments Box உங்களது Link அனுப்புமாறு கூறி விடைபெற்றார்.
எனது சந்தேகம் சரியானது பதிவர்கள் மாநாட்டில் இந்த காக்கையும் பறக்கும்
என்னை போல் யாராவது சந்தேகமாக இருந்தா இந்த பதிவு பயனாக இருக்கும்.
மேலும் கவிதைவீதி அவர்களின் இன்றை பதிவு சிறந்த கருத்துகளை கொண்டது மிகவும் அருமை
4 comments:
நல்லது நண்பரே...
தங்களை காணவும் நான் ஆவலாக இருக்கிறேன்...
welcome
varuga..varuga.
அச்சச்சோ இப்படி எல்லாம் யோசிக்க சொல்லி கொடுத்தது யாருப்பா? :) பதிவர்கள் மாநாடு பதிவர்கள் சந்திப்பு பதிவர்கள் விழா இப்படி எத்தனை பெயர்கள் வெச்சுக்கிட்டாலும் எழுத்துகளால் மட்டுமே உறவுகள் அன்புடன் இணைந்திருந்தது முடிந்து இனி நேரிலும் சந்தித்து பேசலாம்... நம்ம வீட்டில் நடக்கும் ஒரு சந்தோஷ நிகழ்வு போல அத்தனை தத்ரூபம்... அத்தனை மகிழ்வு போட்டோக்களில் இருப்போர் முகத்தில் அத்தனை பிரகாசம்... மனம் நிறைந்திருந்தது கிராமத்து காக்கை தானா? பெயர் தெரியலையே தம்பி... தம்பின்னே சொல்லிடறேன்...
விழாவுக்கு போகவே இத்தனை ஹோம்வர்க் பண்ணி இருக்கீங்களே தம்பி.. உங்களோட சிரத்தை எனக்கு மகிழ்வை தந்தது. அட இத்தனை யோசிக்கிறார்களா இந்த பிள்ளைகள் அப்படின்னு..
Post a Comment