Pages

Tuesday, July 26, 2011

உலகிலேயே இந்தியாவில் தான் சினிமா டிக்கெட் விலை அதிகம்

த்து வருடத்துக்கு முன்பு  வரை உலகிலேயே மிகக்குறைவான சினிமா கட்டணம் இந்தியாவில் தான் இருந்தது.

சினிமா டிக்கெட் விலையை எப்படி கணக்கிட்டு குறைவு என்று சொல்கிறார்கள் என்றால் அதற்கு ஒரு அளவீடு வைத்திருக்கிறார்கள் அதன்படி சினிமா டிக்கெட்டின் விலை அந்நாட்டின் மனித உழைப்புக்கு கொடுக்கப்படும் சம்பளம் இவற்றை அடிப்படையாக கொண்டு அளவீடுகள் நிர்ணயிக்கப்படுகின்றன. 

அந்த அளவீட்டுப்படி இந்தியாவில்  ஒருவர் சினிமா பார்ப்பதற்கு வெறும் 16 நிமிடம் மட்டும் உழைத்தால் போதும். வேறு எந்த நாட்டிலும் இவ்வளவு குறைந்த உழைப்பில் ஒரு சினிமா பார்த்து விட முடியாது அமெரிக்காவில் ஒரு சினிமா பார்க்க  24 நிமிடம் உழைக்க வேண்டும் அதாவது இந்த கணக்கு பத்து வருட முந்தையது இந்தியாவில் அப்போதைய டிக்கெட் விலை ரூ.8 ஆக இருந்தது  ஆனால் இன்று நிலைமையோ தலைகீழ் இன்றைக்கு டிக்கெட் விலை ரூ.100ல் தொடங்கி 350 வரை என்று இமாலய அளவை தொட்டு நிற்கிறது. ஒரு முறை குடும்பத்துடன் சினிமா தியேட்டருக்கு போய் வர சாராசரி இந்தியர் தனது மாத வருமானத்தில் 27 சதவீதம் வரை செலவழிக்கிறார்கள். இந்தியர்களின் இன்றைய சாராசரி மாத வருமானம் ரூ.3700 மட்டுமே இலட்சங்கள் இல்லை ஒருவர் மட்டும் தியேட்டருக்கு சென்று வருவதாக இருந்தாலும் தனது வருமானத்தில் 4 சதவீதம் வரை செலவழிக்க வேண்டும்.

 இதே அமெரிக்காவை எடுத்துக் கொண்டால் அங்கு சாராசரி மாத வருமானம் 3400 அமெரிக்க டாலர். அங்கு டிக்கெட் விலை 9 டாலர் முதல் 10 டாலர் வரை தான் அதிகபட்சமாக 25 டாலர் செலவழிக்கிறார்கள் ஒரு அமெரிக்கர் சினிமா பார்க்க தனது வருமானத்தில் 0.30 சதவீதம் மட்டுமே செலவழிக்கிறார்கள். சினிமா தியேட்டருக்கு சென்று வர தனது சம்பளத்தில் ஒரு சதவீதம் மட்டுமே செலவழிக்கிறார்கள். இங்கிலந்திலும் அமெரிக்கவின் நிலையே உள்ளது.
 
சரி சினிமா தியேட்டர் போக வேண்டாம் கேபிள் டி.வியில் படம் பார்க்கலாம் என்றால் இந்தியாவின் நிலைமை அதிலும் மெச்சிக் கொள்ளும்  அளவில் இல்லை டி.டி.எச் இணைப்பு மாதம் 150 லிருந்து 350 வரை செலவாகிறது. இது இந்தியரின் வருமானத்தில் 10 சதவீதம் அமெரிக்கர்கள் தனது சம்பளத்தில் 3 சதவீதம் மட்டுமே செலவாகிறது. இங்கிலாந்திலும் 5 சதவீதம் குறைவாகவே செலவாகிறது.
ஆக மொத்தம் உலகிலேயே இந்தியர்கள் தான் சினிமா டிக்கெட் மற்றும் பொழுது போக்கிற்காக அதிகம் செலவு செய்கின்றனர் வளர்ந்த நாடுகள் கூட பொழுது போக்கிற்காக குறைவாகவே செலவு செய்கின்றார்கள்
இப்படியே போன இந்தியா எப்பதான் வல்லரசு ஆவது? ஆம் சினிமாக்காரர்கள் தான் வல்லரசு ஆவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

(5வது படிக்கும் போது எங்க ஊர்  சினிமா தியேட்டரில் (டேண்ட்) ரூ.2. 50  பைசாவுக்கு தரையிலும் ரூ.3.50 காசுக்கு சேரில் படம் பார்த்தேன் ஞாபகம் வருது நேற்று சென்னையில் ரூ.120 கொடுத்து படம் பார்த்தேன்)


8 comments:

கூடல் பாலா said...

இலவசமாக காண்பித்தால் கூட இப்போதுள்ள படங்களை பார்க்க முடியாது .இதற்கா 100 ....200 .....

rajamelaiyur said...

//
இப்படியே போன இந்தியா எப்பதான் வல்லரசு ஆவது? ஆம் சினிமாக்காரர்கள் தான் வல்லரசு ஆவார்கள் என்பதில் சந்தேகமில்லை
//

உண்மைதான்

rajamelaiyur said...

என்று என் வலையில்

டி.வியாடா நடத்துறிங்க

சக்தி கல்வி மையம் said...

உண்மைதான் நண்பரே..
இனி தொடர்ந்து வருவேன்..

அன்புடன் நான் said...

அப்படியா சேதி... விளங்கிடும்

M.R said...

வித்தியாசமான தகவல் நன்றி நண்பரே தகவல் பகிர்வுக்கு

M.R said...

இன்று எனது பதிவில் ப்ளாக் பதிவு திருட்டு சம்பந்தமான நகைச்சுவை .

வாருங்கள், படியுங்கள் தங்கள் கருத்தை கூறுங்கள் .
நன்றி

Anonymous said...

The problem lies not with the cinema theaters, it is with public. People like you are willing to pay that much to watch a movie. When every one stops watching movie in a theater change will happen.

Post a Comment