Pages

Tuesday, July 19, 2011

ரூபாய் 112 கோடியில் பறக்கும் கார்

கார் விண்ணில் பறக்க முடியுமா? என்ற கேள்வி பலரது மனதில் எழும். ஏன் முடியாது. இன்னும் 5 ஆண்டுகளில் அது சாத்தியமாகும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். புதுவிதமான பறக்கும் காரை அமெரிக்காவை சேர்ந்த கார்ல் டயட்ரிச் என்பவர் தயாரித்துள்ளார்.

இது 2 இருக்கைகள் மட்டுமே கொண்டது. மிகவும் எடை குறைந்த விமானம் போன்றது. மணிக்கு 185 கி.மீட்டர் வேகத்தில் செல்லும். 800 கி.மீட்டர் தூரம் செல்ல செலவாகும் எரிபொருள் நிரப்பும் டேங்கு அமைக்கப்பட்டுள்ளது. விண்ணில் பறக்கும்போது அவற்றின் இறக்கைகள் விரியும். அதே நேரத்தில் ரோட்டில் இறங்கி கார் ஆக மாறும்போது அவை மடங்கி சக்கரங்களாக வடிவம் பெறும்.

இந்த நிகழ்வு 15 வினாடிகளில் நடைபெறும். இந்த கார் சுமார் ரூ.112 கோடி செலவில் தயாரிக்கப்படுகிறது. இதை ஓட்ட 20 மணி நேரம் மட்டும் பயிற்சி பெற்றால் போதும். புதுவகையான இக்கார்கள் இன்னும் 5 ஆண்டுகளில் அமெரிக்க ரோடுகளில் ஓடுவதை காணமுடியும்.

அதற்கான அனுமதியை அமெரிக்க தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகம் அளித்துள்ளது.

4 comments:

கூடல் பாலா said...

ரேட் கொஞ்சம் கம்மி பண்ணி கொடுத்தாங்கன்னா வாங்கலாம் .....

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ஏதோ பார்த்து செய்யுங்க....

M.R said...

அப்போ இனி ட்ராபிக் கீழ இல்ல ,மேலே .

ஹும் ,அப்பாட நாம நிம்மதியா நடந்து போகலாம் .

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

புதிய தகவல் பகிர்வுக்கு நன்றி

Post a Comment