Pages

Saturday, December 1, 2012

காக்கையின் கிராமம்


சென்னையிலிருந்து 150 கி.மி எங்கள் கிராமம் சென்னை வந்து 10 ஆண்டுகள் நெருங்கிவிட்டது.  படிப்படியாக என் கிராமத்து பயணமும் குறைந்து விட்டது. கடைசியாக உள்ளாட்சித்தேர்தல் ஓட்டு போட்டு  வந்த பிறகு இப்போது தான் போகும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. பெரும்பாலும் பொங்கலுக்கு போவோம் ஆனால் இந்த தடவை போக முடியுமா என்பது சந்தேகம் ஏற்பட ஒரு நிகழ்ச்சிகாக வந்தாவசி வரை சென்றோம் அங்கிருந்து 40 கி.மி தான் போக முடிவு செய்து 2வீலரில் பயணம் காலை 7.00 மணிக்கு கிளம்பி பைபாஸ் சாலையில வண்டி பறந்து கொண்டு காஞ்சிபுரம் அடைந்தது. அதற்கு பிறகு ஒற்றை வழிப்பாதை கிராமத்தின் சாரலில் பயணம் 5 கி.மி ஒரு கிராமம் என எங்களுடைய கிராமத்து நினைவுகளை  ஞாபகப்படுத்தியே வந்தது காலியான சாலைகள் சத்தம் இல்லாமல் டூவிலரில் ஒரு சுகமான பயணம் தான் கிராமத்தை நோக்கி நகரும் போது பரபரப்புகள் குறைந்து இயல்பான கிராமத்து தன்மைக்குள் புகுந்துவிடுகிறோம்.  



சில நாட்களுக்கு முன் பொய்த மழையால் எங்கும் பசுமையாக தான் இருக்கிறது நிலங்கள்.  அங்கங்கே இந்த சென்னை பண முதலைகள் சில இடங்களை ஆக்கிரமித்து பிளாட் போட்டு விற்பனை செய்து கொண்டு இருக்கிறார்கள். 12 லிருந்து 15 மணி நேரம் மின்சாரம் இல்லை என்ன பண்ண முடியும் இந்த சிறு விவசாயி விளை நிலங்களை ரியல் அதிபர்களின் கைக்கு மாறுகிறது. நேரபரபரப்புக்குள் சிக்கி தவிக்காத கிராமத்து மக்களை பார்க்கும் பொழுது நிச்சயம் மனம் ஏங்கும்.  10 மணிக்கு வந்தவாசி அடைந்து நிகழ்ச்சி முடித்து விட்டு 1 மணிக்கு எங்கள் கிராமத்தை நோக்கி பயணம் ஆரம்பித்தது.
மூடு விழாவை ஏதிர்நோக்கியுள்ள நான் படித்த ஆரம்பபள்ளி


என் வண்டியின் வேகத்தை விட என மன எண்ணங்கள் பள்ளி பருவ காலத்தை வேகமாக நினைவுபடுத்திக்கொண்டு வந்தது. ஒரு சென்னை படிக்கும் பள்ளி மாணவன் 10 ஆம் வகுப்பு படிக்கும் வரை என்னஅனுபவங்கள் கிடைக்கும் என்று நிச்சயம் எனக்கு தெரியாது. ஆனால் கிராமத்து மாணவனுக்கு கிடைக்கும் அனுபவங்கள் நிச்சயம் வாழ்நாள் முழுவதும் ஒரு பசுமையான நினைவும் சிறந்த அனுபவமாகவும் இருக்கும் என எந்தவொரு சந்தேகமும் கிடையாது. கிணற்றில் குதிப்பதும். சைக்கிள் சவாரி செய்து விழுந்து வாருவதும். பசு மாட்டில் பால் கறப்பது. மாடு முட்டி நொண்டி நொண்டி நடப்பதும்.ஏர் உழுவது, மரம் ஏறுவது, திருட்டு மாங்காய் சுவைப்பதும், மாடு மேய்ப்பது விவாசய வேலைகள் அதிகமாக இருக்கும் நாட்களில் பள்ளிக்கு லீவு போட்டு மும்முரமாக வேலைசெய்வது.   
திண்னை வைத்த லைன் வீடுகள்

 அது இல்லாம கிரிக்கெட் மட்டையை நாங்க தூக்கி காலத்தில் ஊரில இருக்கிற பெரிசுங்க கிட்ட நாங்க வாங்கின சபங்கள் இருக்கே  போய் ஆடு. மாடு மேய்க்காம மட்டை அடிக்குதுங்க இதுவாட சோறு போட போகுது என தினம் தினம் பல கரிசனங்கள் போ பெரிசு நீ உன் வேலைய பாரு. எங்கள் கிராமத்தின் தெரு தான் எங்கள் பயிற்சி கிரவுண்ட் அனைத்து வீட்டு ஓடுகளையும் எங்களுடைய கார்க் பால் உடைத்துயிருக்கும். கை பாம்பு (போர்) தண்ணி எடுக்க வரும் பல பெண்கள் எங்கள் பவர்ஷாட்டில் பல அடி வாங்கியிருக்கார்கள். கிரிக்கெட் கார்க் பாலல் அடித்து  ஒரு பெண்ணின் காலை உடைத்து எங்களது சாதனையாக இருந்தது. ஊரே எதிர்ப்பு ஒரு மாதம் லீவு விட்டோம் விளையாட பிறகுதான் ஆரம்பித்தோம். என பல உணர்வுகளுடன் கூடிய ஒரு நொடியும் வாழ்வின் நெகிழ்ச்சியினை காலம் உணர்த்தும் ஒரு அருமையான நிகழ்வு.

எங்கள் கிராமத்தின் எழில்மிகு வயல்கள்

 வாழ்வியல் தொடர்புடன் நாங்கள் கற்றுக்கொண்ட பல விஷயங்கள் சென்னையில் மாத பணம் கட்டி  வகுப்புகள் எடுக்கும் நிலை நிறைய உள்ளது. உதாரணம் நீச்சல். மரம் வளர்ப்பது. செடி நடுவது குறிப்பிட்ட காலத்தில் பூக்கும் மலர்கள் என பசுமையான உயிர்களுடன் வளரும் வாழ்கை ஒரு பசுமையான அனுபவம் தான். ஒரு வழியாக எங்கள் சொந்த மண்ணை 2.30 மணியளவில் சேர்ந்தேம். எங்கள் ஊர் பெயர் புளிமான்தாங்கல்   நம்ம தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராமங்கள், ஊர்களின் பெயரையும் ஒரு புத்தகமாக வெளியிட்டால் நிச்சயம் ஒரு சுவரஸ்யமான நாவல் படிப்பதை போன்ற அனுபவம் இருக்கும்.
இடிந்த நிலையில் வாசல் வைத்த வீடுகள்

 எங்க ஊர்ல இதுவரை பேருந்து வந்ததே கிடையது. கூட்ரோடு 2கி.மி தொலைவில் உள்ளது அங்கிருந்து இறங்கி நடந்து தான் வர வேண்டும் ஒரு நாளைக்கு 3 முறை தான் பஸ் வரும் அப்படி இல்லன இந்த பக்கம் 5கி.மி. தொலைவில் இறங்கி வாடகை சைக்கிள் தான். இந்த அரசாங்கம் டி.வி கொடுத்த பின்பு  சன் டி.வி பாக்குற கேபிள் வசதி வந்தது. அப்படி ஒரு குக்கிராம்.  ஊரில ஒரு மனித தலைகளை பார்க்க முடியல அந்த அளவு அமைதி நிசப்பதம் பல மாற்றங்கள் ஆனால் இருக்கும் சில மனித முகங்களிலும் சேர்வு தான் மிஞ்சியிருக்கிறது  கிராமம் என்பது ஒரு கூட்டு சமுகம் தான் பார்க்கும் யாரும் பேசமா பேகவில்லை எப்ப வந்தீங்க நல்லாயிருங்களா இங்கியிருந்தா என்ன பண்ண முடியும். தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் மனிதர்கள் நகரத்தில் மிக குறைவு தான்.
90 வயதை தாண்டி ஆரோக்கியமான எங்கள் ஊர் கிழவிகள்

 அடுத்த தலைமுறை இளைஞர்கள் யாரும் இப்போது ஊரில் கிடையாது எங்களைப்போல் பல வீடுகள்  பூட்டிய நிலையில் சென்னை நோக்கிய பல குடும்பங்கள். பெரும்பாலும் வயதானவர்கள் மட்டுமே பக்கத்து வீட்டு பாட்டியும் தாத்தாவும் நலம் விசாரிச்சு விட்டு ஊரே கலகலப்ப இருக்கும் இப்ப யாருமே இல்லப்ப இந்த தெருவுல எப்போதும் நீங்க பந்தடிப்பீங்க.  இப்ப எந்த பசங்களும் இல்ல ஊரே சுடுகாடு போல இருக்குன்னு அவங்க குறைபட்டு  கொண்டுடிருந்தார்கள். காலமாற்றம் மனிதர்களை பசுமையான நினைவுகளில் ஏங்க வைத்துவிடுகிறது. அருமையான வாசல் வைத்த பெரிய பெரிய வீடுகள் இன்று பராமரிப்பு இல்லாமல் இடிந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பூட்டிய வீடுகள் பாம்புகளின் வாழ்வீடமாக மாறி வருகிறது. பல தலைமுறைகளை தாண்டிய எங்கள் கிராமம் அடுத்த தலைமுறைக்கு காணமால் போய்விடுமோ தெரியலை???

 தேங்காயக இருந்த கிராமங்கள் இன்று கொட்டாங்குச்சியாக மாறிவிட்டது என்று நம்மாழ்வாரின் வார்த்தைகள் ஒங்கி ஒலித்துக்கொண்டிருந்த மனதுடன் வண்டி சென்னையை நோக்கிய பயணத்தை தொடங்கியது....

3 comments:

Robert said...

பல தலைமுறைகளை தாண்டிய எங்கள் கிராமம் அடுத்த தலைமுறைக்கு காணமால் போய்விடுமோ தெரியலை???// வருத்தமளிக்க கூடிய பதிலாக இருப்பினும் உண்மை அதுதான்."போய்விடும்". உங்களின் கிராமம் என்று இல்லாமல் அனைத்து கிராமங்களின் நிலையும் கிட்டத்தட்ட இதேதான். நாம் வாழ்ந்த, பல தலைமுறைகள் கண்ட பல கிராமங்கள் நிர்க்கதியாகி விட்டன. கிராமங்களில் கிடைத்த சுகமான நல்ல வாழ்க்கை முறையும், குழு விளையாட்டுகளும், இப்போது கிடைப்பதில்லை, அப்படி கிடைத்தாலும் அவை நகைப்புக்குறியவை ஆகிவிட்டன. பழைய வாழ்க்கை முறையுடன் ஒப்பீடு செய்யக்கூட நேரமின்றி நகரத்து வாழ்க்கை நம்மை விழுங்கி விட்டது என்பதே நிதர்சன உண்மை.... கிராமத்து வாழ்வில் மாறா பிடிப்பு கொண்ட மற்றோர் கிராமத்து காக்கை :-)

semmalai akash said...

அப்படியே என்னையும் கிராமத்துக்கு கொண்டு சென்றுவிட்டீர்கள், அருமையான எழுத்துநடை, எழுத்துகளில் கொஞ்சம் இடைவெளி இருந்தால் படிக்க ரொம்ப ஈஸியா இருக்கும். எங்கள் கிராமத்திலும் இன்னும் திண்ணை இல்லாமல் வீடு காட்டமாட்டார்கள். முக்கியமாக திண்ணை இருக்கவேண்டும் என்பார்கள்.

மனோ சாமிநாதன் said...

தங்களின் வலைப்பூவை இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
http://blogintamil.blogspot.com

Post a Comment