Pages

Monday, August 27, 2012

சென்னை பதிவர்கள் மாநாட்டு ஆச்சரியங்கள்


      சென்னையில் வலைப்பதிவுகளின் மாநாடு மிக பிரமாண்டமாக அமைதியான முறையில் சீரும் சிறப்புமாக நடைபெற்றது. கிட்டதட்ட 200 வலைப்பதிவர்கள் ஒரு சங்கமித்த ஒரு அற்புதமான சங்கமம் என்று தான் சொல்ல வேண்டும் எந்த ஒரு பகுபாடுகள் இன்றி அனைவரும் அன்பால் ஒருமித்த ஒரு அற்புத பெருவிழாவாக அமைந்தது. இந்த பதிவர்கள் மாநாடு.
மூத்த (முதியவர்களை) வலைப்பதிவளர்களை இளைய பதிவர்கள் வாழ்த்தி அவர்களை கௌரவிக்கும் ஒரு  அற்புத நிகழ்வாக தள்ளாடும் வயதில் தடுமாறாமல் எழுதும் அவர்களி்ன் எழுத்துகளுக்கு பாராட்டுகளும், நன்றிகளும் அளிக்கப்பட்டு அவர்களை ஊக்களிக்கப்பட்டது.  இதை விழா தலைமைக்கு அற்புதமாக செய்தது. முகம் தெரியாமல் பழகிய நட்புகள் ஒருவருக்கெருவர் நேரில் சந்தித்து அறிமுகப்படுத்தியும், அன்பை பரிமாறிக் கொண்டதும் நிச்சயம் வலையுலகில் ஒரு புதுமையான நிகழ்வு. வருங்காலத்திலும் இது போன்ற நிகழ்வுகள் அதிகரிக்க பட வேண்டும் என்பது அனைவரின் ஆசையாகும்.










பாராட்டுக்குரியவர்கள்

பல சிரமங்களை தாண்டி வெளிநாடு மற்றும் வெளியூர்களில் இருந்து வந்த நமது சக பதிவர்களை பாராட்டியே ஆக வேண்டும்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் குழு அருமையாக செய்த ஏற்பாடுகள்

நிகழ்ச்சியில் உணவு ஏற்பாடு அருமையாக செய்த ஏற்பாட்டாளர்கள்

நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய மதுமதி மற்றும் சுரேகா அவர்களின் தொகுப்பு அருமை

கவிதை வாசித்த அனைத்து கவிகளும் பாராட்டுக்குரியவர்கள்

ஐயா. பட்டுக்கோட்டை பிரபாகர். புலவர் ராமாநுசம் ஐயா மற்றும் கணக்காயன் ஐயா அவர்களின் உரைகள் அருமை







ஐயா புலவர் ராமாநுசம் அவர்களுடன் நான்





மொத்தத்தில் எந்த ஒரு பாகுபாடும் பிரச்சனைகளும் இல்லாமல் தமிழால் அன்பால் மட்டுமே ஒருங்கிணைந்து இந்த பதிவர்களின் வரலாற்றில்
ஒரு அருமையான நிகழ்வாகும்.

நன்றிகளுடன் கிராமத்து காக்கை


21 comments:

சி.பி.செந்தில்குமார் said...

ஆஹா!மொத வெட்டு

திண்டுக்கல் தனபாலன் said...

இதுவரை யார் என்று அறியாமல் இருந்தோம்... இப்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது...
தொடரட்டும் இந்த இனிய உறவுகளும், பதிவர் திருவிழாக்களும்...

மிக்க நன்றி சார்... வாழ்த்துக்கள்...

கதம்ப உணர்வுகள் said...

அருமையான படங்கள் கூடிய விவரங்கள் சகோ...

மனம் நிறைகிறது.. தொடர்ந்து நட்பு நடைபோட்டு அன்பு நிலைத்து இருக்க இறைவனை வேண்டுகிறேன்...

அன்பு நன்றிகள் சகோ பகிர்வுக்கு.

சக்தி கல்வி மையம் said...

super

கூடல் பாலா said...

விழா சிறப்பாக நடந்து முடிந்தது குறித்து மகிழ்ச்சியடைகிறேன்...சென்னை வரை வந்தும் பதிவர் சந்திப்பில் கலந்துகொள்ள முடியாமல் போனது எனக்கு ஏமாற்றம்தான்...

tech news in tamil said...

nice...

வவ்வால் said...

//சென்னையில் வலைப்பதிவுகளின் மாநாடு மிக பிரமாண்டமாக அமைதியான முறையில் சீரும் சிறப்புமாக நடைபெற்றது. கிட்டதட்ட 200 வலைப்பதிவர்கள் ஒரு சங்கமித்த ஒரு அற்புதமான சங்கமம் என்று தான் சொல்ல வேண்டும் எந்த ஒரு பகுபாடுகள் இன்றி அனைவரும் அன்பால் ஒருமித்த ஒரு அற்புத பெருவிழாவாக அமைந்தது. இந்த பதிவர்கள் மாநாடு.//

வாழ்த்துக்கள்&பாராட்டுக்கள் அனைவருக்கும்.

தமிழ்வாசி பிரகாஷ் said...

வாழ்த்துக்கள்

தி.தமிழ் இளங்கோ said...

பதிவர் சந்திப்பை படங்களுடன் ஆர்வத்துடன் வெளியிட்ட உங்களுக்கு நன்றி!

SIVAYOGI said...

நல்லனே நடக்க நாடும் கூட்டும் தொடரட்டும் ...

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அருமை,அருமை...இப்படியே எப்போதும் சிறப்புற இருங்கள்.
நம்ம ஜக்கியும் வந்துள்ளார். மகிழ்ச்சி, அவர் பாணியில் அவர் பார்வையை எதிர்பார்க்கிறேன்.

suvanappiriyan said...

விழா சிறப்பாக நடந்து முடிந்தது குறித்து மகிழ்ச்சியடைகிறேன்..

Jaleela Kamal said...

பகிர்வு அருமை

பட்டிகாட்டான் Jey said...

நைஸ்..

அருணா செல்வம் said...

ஓ... நீங்கள் தான் காக்காவா...?
பதிவிற்கு வாழ்த்துக்கள்.

துளசி கோபால் said...

// தள்ளாடும் வயதில் //

ஹா................!!!!!!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அற்புதம்... வாழ்த்துக்க்ள..

ஆறகளூர் பொன்.வெங்கடேசன் said...

நல்ல ஒருங்கிணைப்பு...நல்ல அறிமுகம்..வாழ்த்துக்கள்

Admin said...

பகிர்வுக்கு நன்றி தோழரே..

CS. Mohan Kumar said...

Thanks Nice to meet you there

கதம்ப உணர்வுகள் said...

அன்பின் தம்பி,

திரு வை.கோபாலகிருஷ்ணன் சார் எனக்கு தந்த விருதினை தங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி எனக்கு.

அன்பு வாழ்த்துகள்பா..

http://manjusampath.blogspot.com/2012/09/2.html

Post a Comment