Pages

Saturday, January 28, 2012

தொலைக்காட்சி லாட்டரியில் சிக்கி தவிக்கும் தமிழக மக்கள்

“விழுந்தால் வீட்டுக்கு விழாவிட்டால் நாட்டுக்கு” என்ற கோஷத்துடன் லாட்டரிச் சீட்டு திட்டத்தை அண்ணாதுரை அவர்கள் முதல்வராக இருந்த காலத்தில்  தமிழக அரசு அறிமுகம் செய்தது. ஆனால் தனியாரும் லாட்டரி தொழிலில் வந்த பிறகு மக்களி்ன வருமானம் அதில் கரைந்து போய், குடும்பங்கள் சீரழிந்தன இதனால் முந்தைய ஆட்சிகாலத்தில் ஜெயலிலதா அவர்களால் தடைசெய்யப்பட்டு இன்றளவும் அமலில் உள்ளது.

ஆனால் மக்களின் ஆசை என்ற பலவீனத்தை மூலதனமாகக் கொண்டு டி.விக்கள் வெவ்வேறு பெயர்களில் லாட்டரிக்கு இணையான கொள்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். ஏதாவது ஒரு பரிசு திட்டத்தை அறிவித்து விட்டு குறிப்பிட்ட எண்ணுக்கு SMS அனுப்புங்கள் என்று  சொல்வதை நம்பி பல லட்சம்  மக்கள் SMS அனுப்புகிறார்கள் அதில் நிறுவனத்திற்கு கிடைக்கும் வருமானம். அவர்கள் தரும் பரிசுத்தொகைவிட பல நூறு மடங்கு அதிகம் சம்பாதிக்கிறார்கள் என்பது பாமரர்களுக்கு மட்டுமல்ல, படித்தவர்களுக்கும் தெரியாது,

கடந்த சில வாரங்களாக திரையில் ஒரு பாடலில் சில காட்சிகளை ஒடவிட்டு அது தொடர்பான ஒரு கேள்வியை கேட்டு அதற்கான விடை சொல்ல அழைக்கும் நிகழ்ச்சி ஒரு தனியார் டி.வியில் ஒளிபரப்பானது. அவர்களின் கேள்விக்கு உங்கள் வீட்டு குழந்தைகளுக்கு கூட தெரியும் எனவே ரூ.5000 பரித்தொகை பெற்றுவிடும் ஆசையில் உடனே ஆர்வலர்கள் தொடர்பு கொள்ள முயல்வார்கள் ஆனால் ஒருவருக்கும் சிறிது நேரம் லைன் கிடைக்குது அவர்களின் ரேட்டிங் உயரும்.

ஆனால் நிமிடத்திற்கு ரூ.10 என மக்களின் பணம் கரைந்து கொண்டிருக்கும் 2 நிமிடம் இணைப்பில் இருந்தாலும் ரூ. 20 போய்விடும் இந்த ரூ. 20 யில் 14 ரூபாய் தயாரிப்பு நிறுவனத்திற்கும் மீதி கூட கொள்கையடிக்கும் செல்போன் நிறுவனத்திற்கும் சேரும். சுமார் ஒரு லட்சம் போர் தொடர்பு கொள்கிறார்கள் என வைத்து கொண்டாலும் மொத்த வருமானம் ரூ. 20 லட்சம் பரிசுத்தொகை உள்ளிட்ட எல்லா செலவும் ரூ.2 லட்சம் மட்டுமே மீதியெல்லாம் கொள்ளை லாபம்.

 இதற்கும் ஒரு படி மேலே போய் மக்களை கோடிஸ்வரன் ஆக்கிடுவோம் என்று  மக்களை ஏமாற்ற பெரிய நிறுவனம் கவர்ச்சி நடிகர் என மக்களின் பணத்தை சுரண்ட ஒரு பெரிய பட்டாளம் இறங்விட்டார்கள. இந்நிகழ்ச்சிக்கு குறைந்தது 2sms அனுப்ப வேண்டும். 



தமிழகத்தின் ஏழு கோடி மக்களில்  தினமும் 10 லட்சம் மக்களையாவது பலிகட ஆக்க வேண்டும் என்பது இவர்கள் திட்டம். டி.வி. நியுஸ் பேப்பர். பேஸ்புக். Fm அனைத்திலும் மிகப்பெரிய விளம்பரம் செய்து  ஒருநாளுக்கு SMS மூலம் செல்போன் நிறுவனங்களின் தினமும் வருமானம் 1கோடி. நிகழ்ச்சி தயாரிப்பாளருக்கு ரூ. 50 லட்சம் இப்படி 7 நாட்களின் வருமானம் 7 கோடி இது 10லட்சம் பேரின் கணக்குதான் இதுவே தினம் 1கோடி மக்கள் கூட SMS அனுப்புகிறார்களாம் அப்படி என்றால் வருமானம் ????

பரிசு பெரும் அந்த நபர் 10 லட்சமோ 15 லட்சமோ தான் இருக்கும்  இது தவிர விளம்பரம்  போன்றவை மொத்தமாக பார்த்தால் ஒரு நிகழ்ச்சிக்கு ரூ. 20 கோடி வருமானம் கிடைக்குமாம்.

இப்படி தழிழர்களின் பணத்தை சுரண்டப்படுவதை பற்றி யாரும் கவலை பட்டதாக தெரியவில்லை அரசாங்கமும் இதை வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கிறது.

உதாரணமாக எனது சகோதரர் முதல் வாரத்தில் அனைத்து கேள்விகளுக்கும் sms அனுப்பி ரூ. 120 இழந்துள்ளார்.  இப்படி பல கோடி மோசடி செய்து இன்னும் அந்தகோடீஸ்வர நிழ்ச்சி இன்னும் ஆரம்பித்ததாக தெரியவில்லை.

கோடிகளுக்காக அலைந்து தெருக்கோடியில் நிற்கும் ஏமாளி தழிழர்களா நாம்???????????

10 comments:

இராஜராஜேஸ்வரி said...

கோடிகளுக்காக அலைந்து தெருக்கோடியில் நிற்கும் ஏமாளி தழிழர்களா நாம்???????????

சிந்தித்துப் பார்த்து சிற்ப்பான வழியைத்தேர்ந்தெடுக்க துணை செய்யும் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

RMY பாட்சா said...

"தமிழனுக்கு இந்த படம் பார்த்தால் திமிறு வரும்னு சொல்லி மிளகாய் அரைச்சாச்சு இப்ப இந்த குறுஞ்செய்தி, ஸ்பெஸல் நம்பர் டெலிபோன் கால் மூலம் தினமும் கொள்ளை, இதில் குளிர்காய்பவர்கள் அன்றாடம் காய்ச்சிகள் இல்லை அம்பானியும், முட்ராக்கும், சூர்யாவும்தான்"
http://www.rmy-batcha.com/2011/12/blog-post_30.html#comment-form

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல பதிவு ! பல பேர் ஏமாந்தும் மற்றவர்களையும் இதில் கலந்து கொள்ள வற்புறுத்துவது இன்னும் கொடுமை ! பதிவுக்கு பாராட்டுக்கள் ! நன்றி நண்பரே!

கூடல் பாலா said...

நலமா சகோ ....நல்ல விழிப்புணர்வு பதிவு!

சி.பி.செந்தில்குமார் said...

நியாயமான கேள்விதான். கோடிகளின் போதை தமிழனை மீண்டும் மீண்டும் தவறிழைக்கச் செய்கிறது.

Admin said...

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள்.

அவசியமான விழிப்புணர்வு பகிர்வு.

Anonymous said...

குறுக்கு வழியில் வாழ்க்கை தேடி கொள்ளும் திருட்டு உலகமடா இது கொல்லி அடிப்பதும் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா!!!!!!!!! பட்டு கோட்டை அன்றைக்கே பாடி விட்டார் ...........நாம நல்ல இருக்கறது யார்க்கும் பிடிகள போல ........... உலகம் அல்யறது நிஜம் தான் போல......

ஹேமா said...

யோசிக்க வைக்கிறது பதிவு !

Anonymous said...

நானும் போன் செய்து பத்துருபாய் இழந்தது தான் மிச்சம்

..பகிர்வுக்கு நன்றி பாஸ்

aalunga said...

மிகவும் உண்மை...

இன்று தொலைகாட்சி நிகழ்ச்சிகள் பலவும் சூதாட்டமாகி போனது!

Post a Comment