Pages

Saturday, August 31, 2013

தடுமாறும் ஆயாக்கள்   கடந்த இரண்டு வாரமாக அந்த ஆயா நினைப்பு தான் வரவே காணோம் என்ன ஆயிருக்கும் ஒரு வேளை இப்படியே அப்படியே ஆயிருக்குமோ என மனதில குடைந்து கொண்டு இருந்தது மூன்று வருடமாக தெரியும் வாரத்தில் ஒரு நாள் கண்டிபாக வரும் ஆயா இரண்டு வாரமா காணோம் அதை எங்குன்னு போய் தேட முடியும் இந்த பாட்டி  தனது பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு நாடோடி வாழ்கை முறைதான் ஒரு வழியா நேற்று பொறுமையாக நொண்டி நொண்டி வருது என்ன ஆயா என்னாச்சு இல்லாய்யா விழுந்துட்டான்னு கால்ல பாருன்னு அடிபட்ட இடத்தை காண்பிக்குது இதனால உடம்பு சரியில்லை எழுதிருக்கவே முடியலை சேறு தண்ணி இல்லாம கஷ்டபட்ட ய்யா என்று  சொன்னார். வரும்பொழுது எல்லாம் எங்கள் கடையில் உள்ள எல்லாரையும் விசாரிப்பார்.   அரக்கோணத்துல கோவில்களில் தான் தாங்குவராம் அங்கிருந்து ரெயில் தான் வருவாராம்....  அதிகப்படியான இந்த முதியவர்கள் வெள்ளிக்கிழமைகளில் தான் கடை கடையாக பிச்சையேந்தி வருகிறார்கள். ஒரு நாளைக்கு 10. - 15  கிலோ மீட்டர் நடந்து 400-500 கடைகளில் ஏறி இறங்கி  இவர்களுக்கு கிடைக்கும் 100 (அ) 150 ல் தான் தினசரி உணவு.... ஒவ்வொரு நாளும் போராட்டமே இவர்களது வாழ்கை. ஊனமுற்றோர் நிலைமை இன்னும் மோசமானது. எல்லாருமே ஒரு கால கட்டத்தில் நன்றாக  வாழ்ந்து கெட்டவர்கள் இவர்கள் ஒவ்வொருவரின் பின்னாலும் ஆயிரமாயிரம் கதைகள் கஷ்டங்கள் தம் பெற்ற பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு சாப்பாட்டிற்கு இப்படி தெருத்தெருவாக  அலைகிறார்கள். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த முதியவர்களின் இன்னலுக்கு பின்னால் வளர்ந்து வரும் தனி மனித சுயநலமும் ஒரு முக்கிய காரணம்  தான்....

 தன் சக மனிதன் ஒரு வேலை உணவு கூட இல்லாமல் பரதேசியாக அலைகிற இந்த சமூகத்தில் தினமும் நாம் ஒவ்வொருவரும் ஏதே ஒரு வீண் செலவுகள் செய்து கொண்டுதான் இருக்கிறோம். இவர்களின் நிலைமை இப்படி இருக்கா  கையில் குழந்தைகளுடன் வரும் பெண்கள் தான் இப்போது இன்னும் அதிகம் தினசரி வருகிறார்கள் பெரும்பாலும் ஆந்திர மாநில பெண்கள் தான் கையில் வைத்திருக்கும் அந்த குழந்தையின் நிலைதான் ரொம்ப பரிதாபம்.....

 இருப்பவர்களை அதிகப்படியாக  கொண்டாடப்படுவதும். இல்லாதவர்களை  கீழே தள்ளி மிதிப்பதும் நமது சமூகத்தில் தான் சாதாரணமாக நிகழ்கிறது... 


 சமீபத்தில் படித்த  எஸ். ராவின் வாரிகள்  உலகின் மிகப்பெரிய தண்டனை புறக்கணிப்புதான். அதை போன்ற வலி வேறில்லை.  நம்மை அறியாமலே நாம் எவ்வளவோ  விஷயங்களை புறக்கணிக்கிறோம் நாம் கண்டு கொள்ளாமல் போனதால் காலப்போக்கில் அவை அடையாளங்களற்று போகின்றன.  அவை மனிர்களாக இருகட்டும் அல்லத அவர்களின்  திறமையாக இருக்கட்டும் இரண்டுமே காலப்போக்கில் அங்கீகரிக்க படாமல் காணமால் போகின்றன தெருவில் படம்  வரையும் ஓவியன். ரயிலில் பாட்டு பாடும் பாடகன். வேசமிட்டு வரும்  வேசாந்திரி இவர்களில் யாரையுமே நாம் பாராட்டியது  இல்லை.

தடுமாறும் முதுமை தடம் மாறும் சமுதாயம்

1 comment:

Srini Vasan said...

தடுமாறுவது ஆயாக்கள் மட்டுமல்ல நம் எல்லோருடைய உணர்வுகளும் தான் !பழுத்த மட்டையை பார்த்து இளக்காரம் செய்த இளம்மட்டையை போல !

Post a Comment