Pages

Wednesday, May 15, 2013

கீரைக்காரி


           இன்னிக்கு காலை எழுந்திருக்கும்போதே எங்க வீட்ல வாசல்ல  என் அம்மா கீரை வாங்கு பெண்ணிடம் 5 நிமிடமாக பேரம் பேசுறாங்க நான் எழுந்து வெளியேபோனேன் பிறகு கீரைக்காரியம்மாவிடம் என் அம்மா காசு கொடுத்து அனுப்பி விட்டார். எங்க வீட்ல மாசத்துல 2 தடவையாச்சு எனக்கும் என் அம்மாவுக்கும்  வாக்குவாதம் நடக்கும். அவங்க கேட்குற காசு கொடுத்து அனுப்பு மா உன் கிட்ட வாங்கு காசு வைத்து ஒன்னும் அவங்க பெரிய வீடு ஒன்றும் கட்ட போவதில்லை தினசரி செலவுக்கே அவங்களுக்கு போதுமானதாக இருக்காது. கீரைகட்டு 15 அல்லது 20 ரூபாய் விற்றால் என்ன அவர்களுக்கு அதிகபட்சம 5 ரூபாய் கிடைக்கும் தெருத்தெருவாய் பாரத்தை தூக்கி அலையுறாங்க அவங்கிட்டயெல்லாம் பேரம் பேசமா கேட்குற காசு கொடும்மா என விளக்கமாக  கூறுவேன் சரி சரி என்று தலையாட்டுவாங்க ஆன அடுத்த தடவை இதே பேரம் போசுற வேலைதான் நடக்கும்.  


எங்கம்மான்னு இல்லைங்க பெரும்பாலும் மக்கள் அப்படி தாங்க இருக்காங்க தெருவில் வரும் பொருளுக்கு மதிப்பு கிடையாதுங்க. ஆனால் பன்னாட்டு வணிக வளாகங்களில் அங்கு போரம் போச முடியாது கூடுதல் விலை கொடுத்து வாங்குகிறோம். அது போல 10 ரூபாய் கூட  மதிப்பில்லா பாப்கார்ன் தியேட்டர்ல  30. 40. ரூபாய் விற்றால் கூட அச்சப்படாமா வாங்கி சாப்பிடுகிறோம். ஆனா சின்ன சின்ன தெரு வியாபாரிகளிடம் நம்முடைய பேச்சாற்றலை காண்பிடித்து ஜெயிக்கப்பார்க்கிறேம். ஆடம்பரங்களில் எல்லாம் நாம் பேரம் பேசுவதில்லை அத்தியாவசப் பொருட்களுக்கு தான் அதிக கணக்கு பார்க்கிறோம். பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களால் ஏமாற்றப்படுகிறோம்.  ஆனால் சமூகத்தில் நம்முடன் வாழும் சக வியாபர நண்பன் கூடுதலாக 2 ரூபாய் கேட்டால் கொள்ளை அடிக்கிறான் என்று குறைபட்டு கொள்கிறோம்.

நண்பர்களே வயதான பூவிற்கும் அம்மா, தலையில் பாரத்தை தூக்கி அலையும் கீரைக்காரம்மா, தெருவில் சிறு சிறு பொருட்களை விற்கும் தனி மனிதன் இவர்களின் மீதான நம்முடைய பார்வை மாற்றுவோம் இவர்களையும் நம்பி அவர்கள் குடும்பம் வாழ்கிறது. ஒருநாள் அந்தகீரைக்காரம்மாவிடம் கடைசியாக  என்ன சினிமா பார்த்திங்க என்று கேட்டேன் அதற்கு அவங்க போ தம்பி சினிமா எல்லாம் பார்த்து பல வருஷம் ஆச்சு அந்த 100 ரூபாய் இருந்த என் பையனுக்கு நோட்டு புக் வாங்கலம் என்று சலித்து கொண்டார்கள்.  இது தான் அவர்களின் நிலைமை ??

காலையில் தூங்கி கொண்டிருக்கும் நம்மை போல் பல மனிதர்களுக்கு அவர்களின் உண்மையான முகங்கள் தெரிவதில்லை. 
எதை நோக்கி ஓடுகிறோம் நாம்?

2 comments:

ப.கந்தசாமி said...

உண்மை.
எழுத்துகள் மிகச்சிறியதாக இருக்கின்றன.

Unknown said...

True, People may think about this...

Post a Comment