Pages

Sunday, November 11, 2012

கனவைத் தேடி



தன்னுடைய வாழ்நாள் கனவே ஒரு சிறந்த ஓவியன் ஆகனும் கனவு அதற்காகவே சிறு வயது முதலே  கனவுகளுடன் தன்னுடன் வாழ்க்கை பயணத்தை தொடங்கினான் அந்த நண்பன். அதற்காகவே சிறந்த குருவை தேர்தெடுத்து அவரின் சீடனாக 10 ஆண்டுகள் தனது ஓவிய பயிற்சியையும் கனவையும் கற்றான். தன்னுடைய திறமையை நீருபிக்க வேண்டிய தருணம் வந்தது தனது 3 நாட்களாக வரைந்து அவனால் சிறந்து வெளிப்படாக நினைத்து வரைந்தான் அதை பரிசோதிக்க அவனுடைய பகுதியில் உள்ள தெருவில்  ஒரு பகுதியில் அனைவரும் பார்க்கும்படி   வைத்து அருகே ஒரு பலகையில் நான் வரைந்த இந்த ஓவியத்தில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அருகிலுள்ள மையினால் கோடு போட்டு தவறை கூறுங்கள் என எழுதி வைத்து மிகவும் பாராட்டுகளை எதிர்பார்த்து இருந்தான்.

ஆனால் அவன் மாலையி்ல் வந்து பார்க்கும் போது படம் முழுவதும் தவறு தவறு என பெருக்கல் கோடு போட்டு  இருந்தனர். அந்த பகுதியில் சென்றவர்கள் எல்லாரும்  உன்னலாம் எவன்டா ஓவியன் சொன்னது என பல வாசகங்கள் வேறு மனம் உடைந்தான் நான் தோற்றுவிட்டேன் என அழுதான் என்னால் சிறந்த படைப்பை தரமுடியவி்ல்லை என வருந்தினான். தன் குருவிடம் நடந்தவற்றை கூறினான். அவர் வா அந்த படத்தை காட்டு அட போங்க குரு அதைவேற நீங்க பார்த்து  நீங்களும் ஏதாவது சொன்ன  என்னால தாங்கமுடியாது விடுங்க எனக்கு அவ்வளவு தான் போல என  வருந்தி கொண்டான். குருவிடாமல் போய் அந்த படத்தை பார்த்தார்  நல்ல  தாப்ப இருக்கு அருமையா பெயிண்ட் பண்ணீயிருக்க என கூறினார் அட போங்க குரு இந்த தெருவுல போனவங்க எல்லாம் குருடா என்ன என்று கூறினான். அதற்கு அந்த குரு சரி இதே ஓவியத்தை சிறிதும் மாறாமல் என்கிட்ட வரைந்து கொடு என்றார். எதற்கு குரு என்றான் நான் சொன்னதை செய் என்றார். 


3 நாட்கள் கழித்து அதே படத்தை வரைந்து கொடுத்தான் அதே தெருவில் அதே இடத்தில் குரு கொண்டு போய் வைத்தார். என்ன குரு பட்ட அசிங்கம் போததா மறுபடியும் நீங்களும் சேர்ந்து அசிங்கபடனுமா என்றான்ஃ அதற்கு குரு சிரித்து கொண்டே அருகில் உள்ள பலகையில் அவன் எழுதியது போல் இல்லாமல் இந்த படத்தை வரைந்துள்ளேன் இந்த படத்தில் உங்களுக்கு ஏதேனும் பிழைகள் தெரிந்தால் சரி செய்து கொடுக்கவும் என்ற வாசகம் எழுதி அருகில் பெயிண்ட்  வைத்துவிட்டு வந்தார்.

இருவரும் மாலை வந்து பார்த்த போது என்ற மாற்றமும் இல்லாமல் காலையி்ல் வைத்து போலவே இருந்தது.  2 நாட்கள் 3 நாட்கள் என அப்படியே இருந்தது.எப்படி குரு இதே படத்தை வைத்தற்கு  தவறு என்று அடித்ததும் இல்லாமல் என்னை திட்டிவிட்டு சொன்றார்கள் ஆனால் நீங்கள் வைத்த ராசியே என்னவோ தெரியலை யாரும் எதுவும் செய்யவில்லை என்றார். 

அதற்கு குரு அவனிடம் கூறினார். தவறுகளை சுட்டி காட்டுவதற்கு அனைத்து கைகளும் நீளும் ஆனால் திருத்துவதற்கு ஒருவரும் தயாரில்லைஎன்பதை புரிந்து கொள்ள வேண்டும். இந்த உலகம் கூறும் வெறுப்பையும் புகழையும் மனதில் சுமக்காதே. நீ நியாக ன் பாதையை நடத்து உன் நம்பிக்கை தான் உன் உண்மையான அடையாளம்  மகிழ்ச்சியும் துயரமும் வெளியிலிருந்து வருவதில்லை உன்னில் தான் ஆரம்பிக்கிறது என்கிறார். தன் கனவை நோக்கி அந்த ஓவியன் நகர்கிறான்.


நண்பர்கள் அனைவருக்கும் 
                                                   கிராமத்து காக்கையின்
                                                                        தீபாவளி நல்வாழ்த்துக்கள்

5 comments:

பால கணேஷ் said...

ஆஹா... அந்த குரு சொன்ன கருத்து அட்டகாசம். நல்ல நீதிக்கதை. பகிர்வுக்கு நன்றி. கிராமத்து காக்கைக்கு என் இதயம் நிறைந்த இனிய தீபஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நல்லதொரு நீதிக்கதை...


இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.. நண்பரே...

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லதொரு நீதிக்கதை... நன்றி...

குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

”தளிர் சுரேஷ்” said...

அருமையான நீதிக்கதை! வாழ்த்துக்கள்!

Unknown said...

ब्लॉग पर बधाई
से अभिवादन:
http://el-blog-de-bruce-lee.blogspot.com/

Post a Comment