Pages

Sunday, January 15, 2012

அம்மாவும் பொங்கலும்

இந்த ஆண்டுக்கான முதல் பதிவை பொங்கல் அன்றாவது எழுத வேண்டும் என்று ஒரு வரமாக சிந்தனை எதைப்பற்றி எழுதலாம் என்று.
கடுமையான பணிச்சுமையால் பிளாக் பக்கம் வருவதே குறைந்து விட்டது எதாவது ஒரு பதிவை எழுதி ஆக வேண்டும் என்று நேற்று நீண்ட நேரம் நினைத்துகொண்டே படுத்தேன்.


ஒவ்வொரு பொங்களுக்கும் எங்கள் கிராமத்துக்கு செல்வோம் இந்த வருடம் அண்ணின் திருமணம் காரணமாக சில வேலைகள் இருப்பதால் சென்னையில் தான்.

காலை 6.30 மணிக்கு அம்மா வந்து எழுப்பினார்கள் என்னைக்குமே அவர்கள் இவ்வளவு சீக்கிரமாக எழுப்பமாட்டார்கள். தெருவில் கோலம் போட்டுள்ளேன் அதை வந்து படம் எடு என்று கூப்பிட்டார்கள் கூட மாட தான் யாரும் உதவி செய்ய மாட்டிங்க இதை ஒரு படமாவது எடுத்து வை என்று கூறிகொண்டு இருந்தார். விடியற்காலை 4.30 மணிக்கு எழுந்து கோலம் போட்டுள்ளார்கள் போல. அடுத்த பொங்கலுக்கு எல்லாம் கூட ஒரு பெண்ணு இருப்பாள் என்று தனது மருமகளை எதிர்நோக்கி கூறி கொண்டு இருந்தார். இந்த ஆண்டின் முதல் பதிவை அம்மாவைப் பற்றி உடனடியாக எழுதலாம் என்று உட்கார்ந்து விட்டேன்.


கிராமத்திலிருக்கும் பெண்கள் எல்லாரும் திருமணம் செய்து நகரத்தை நோக்கியே அவர்கள் வாழ்க்கை இருக்கும் ஆனால் எங்கம்மா மட்டும் இதற்கு விதிவிலக்கு சென்னையில் பிறந்து வளர்ந்த எங்கம்மா எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் சரியான பட்டிக்காட்டு கிராமத்தில் வாழ்கைப்பட்டார்கள் (கஷ்டபட்டார்கள்) என்று தான் செல்ல வேண்டும்.
எந்த வேலையும் தெரியாமல் கிராமத்திற்கு குடிபெயர்ந்த அவர்கள் கிராமத்து பெண்களையும் மி்ஞ்சி வயல் வேலைகள் அனைத்தும் அருமையாக செய்தார்கள். பல பேர் பட்டணத்திலிருந்து வந்து அருமை எல்லா விவசாய வேலைகளும் செய்யுறாங்க பாரு என்று கிராமத்து பெண்கள் பல பேர் கூறுவதை நாங்களே பல முறை கேட்டிருக்கிறோம்.


எங்களது பள்ளி நாட்களில் எங்களது பிடிவதாத்திற்கும். வறுமைக்கும். கொடுமைக்கார மாமியாரின் ஆட்டத்திற்கும். போதது என்று வயல் வெளிகளில் ஆட்கள் இல்லாம் தானே செய்யும் வயல் வேலை என்று பம்பரமாக சுழன்று சுழன்று பாரத்தை சுமையாக இல்லாமல் சுகமாகவே சுமந்தார்கள் பல நாட்கள் அவர்கள் இரண்டும் பையனா பெத்து தொலைச்சுட்டேன் ஒரு பெண் புள்ளை இருந்த எனக்கு எவ்வளவு ஒத்தாசக இருப்பாள் என கூறிக்கொண்டுதான் இருப்பார்கள். நாங்கள் ஒவ்வொரு நாளும் வேலையை அதிகரிக்க செய்வோமே ஒழிய உதவி என்று செய்தாக நினைவில்லை.
   சுமார் 25 வருடம் கிராமத்து வாழ்கையிலும் குடும்பத்தின் முன்னேற்றத்திற்காகவும் பாடுபாடும் கிராமத்து குடும்ப தலைவிகளில் ஒருவராய் வாழ்ந்து வந்தார். விவசாயத்தை மட்டுமே செய்பவன் பணக்காரனாக முடியாது கடன்காரனாக தான் ஆக முடியும் என்பது எங்கள் கிராமத்தின் சாபக்கேடு. கடன் சூழலில் இருந்து மீள்வதற்கு ஓரே வழி விவசாயத்தை கைவிட்டு விட்டு  நகரத்தை நோக்கி புலம்பெயர்வதே சிறந்ததாக உள்ளது எங்களது கிராமத்தின் தலையெழுத்து புலம்பெயர்ந்தவர்கள் எல்லாம் ஓரளவு வசதி வாய்ப்புடன் கடன் இல்லாமல் நிம்மதியாக தான் உள்ளார்கள் அந்த பட்டிலில் இப்போதும் நாங்களும். 

 இப்போது கடந்த 6 வருடமாக சென்னையில் சொந்தமாக தொழில் நிறைவான வாழ்க்கை சொந்தாக வீடு இப்போது சிறப்பாக நடைபெற இருக்கும் அண்ணன் திருமணம் என கடந்த 25 ஆண்டுகால கிராமத்து வாழ்க்கையில் எங்கள் அம்மா பட்ட கஷ்டங்கள் சிறதளவாவது குறைந்துள்ளது என்று தான் கூற வேண்டும்.  எத்தனை மகன்கள் அம்மாவை பாராட்டுகிறார்கள் பிடிவதாதம் செய்வதும் அதுசரியில்லை இது சரியில்லை  சண்டைபோட்டுவதும் எங்களை போன்ற மகன்களின் வேலையாக உள்ளது பண்டிகை நாட்களிலாவது  அவர்களை ஒரிரு வார்த்தைகளால் பாராட்டலாம் என்று இந்த கிராமத்து காக்கைக்கு தோன்றியது உங்களுக்கும் தோன்றினால் நலமே!


4 comments:

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
எங்கள் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

Anonymous said...

Fantastic Puplish aboiutmother...

ஹேமா said...

உங்கள் அம்மாவுக்குத்தான் பொங்கல் வாழ்த்துகள்.சரி சரி போனா போகுது உங்களுக்கும் !

vel murugan said...

நன்பரே! இன்றுதான் உங்கள் பிளாக் பார்த்தேன்!!! மிக அருமை அற்புதமான எழுத்துநடை...

Post a Comment