Pages

Thursday, August 1, 2013

காணாமல் போன கிராமத்தின் நிழல்கள்.....


மண் சாலையில்  பயணித்தும் விளையாடியும் வளர்ந்த கால்கள்
இன்று சிமெண்ட் சாலையாக இருந்தும் ஏனோ  
அதில் செல்ல மனிதர்கள் தான் இல்லை.....

நாங்கள் பந்தடித்து வளர்ந்த இந்த தெருவில் பல பெரிசுகளின்
 ஏச்சுகளும் பேச்சுகளும் தான் அதிகம்
ஏனே இன்று அந்த பெரிசுகளும் இல்லை
 யாருமற்று கிடக்கிறது இந்த சாலை..........

மாலை நேரத்தில் கை பம்பில் தண்ணீர் கொண்டு வர  
சொல்லும்  பெண்களுக்கு  எங்களின் பந்தடிகள் பழகிய ஒன்று  
அதில் புத்துார் கட்டும் ஒன்றிரண்டு.......

இன்று பல தண்ணீர் குழாய்கள் இருந்தும்
 தண்ணீர்  பிடிக்க கூட்டம் இல்லை......

எங்களது பல  கார்க் பந்துகள் வீட்டின் ஓட்டை உடைத்தது
  சண்டையிட்டும் பந்தை வாங்க முடியாது.......

இன்று பல வீடுகள் இடிந்தும் வீழுந்தும் கொண்டு இருக்கிறது


ஒவ்வொரு பருவத்திலும் ஒன்பது குழந்தைகளாது இருக்கும் இன்று
ஒரு குழந்தைக்கும் விளையாட யாரும் இல்லை....

ஊர் கூடி பாறையில் நடக்கும் பஞ்சாயத்து  இன்று பாறைமட்டும் 
அனாதையாக  நிற்கிறது பஞ்சாயத்து இல்லாமல்....

மார்கழி மாத பூ கோலங்காளில் நடனம் ஆடும் தெருக்கள் 
எல்லாம் மயானமாய் காட்சியளிக்கிறது.......

பசுமையான இலைகளுடன் நிழல் தரும் மரங்கள் எல்லாம் தன் 
கண்ணீராக இலைகள் உதிர்த்து  சருகுகளுடன் சாக காத்திருக்கிறது...
இந்த மனிதர்களற்ற இந்த கிராமத்தில் ....

தேய்பிறையான கிராமங்கள்
வளர்பிறையான நகரத்தை பார்த்து ஏங்குகிறது 
என்னை அழித்து கொண்டு இருக்கிறாய் என்று.......

ஓடிக்கொண்டே இருக்கிறான் மனிதன் மட்டும் ந(ர)கரத்தில்.....

Wednesday, May 15, 2013

கீரைக்காரி


           இன்னிக்கு காலை எழுந்திருக்கும்போதே எங்க வீட்ல வாசல்ல  என் அம்மா கீரை வாங்கு பெண்ணிடம் 5 நிமிடமாக பேரம் பேசுறாங்க நான் எழுந்து வெளியேபோனேன் பிறகு கீரைக்காரியம்மாவிடம் என் அம்மா காசு கொடுத்து அனுப்பி விட்டார். எங்க வீட்ல மாசத்துல 2 தடவையாச்சு எனக்கும் என் அம்மாவுக்கும்  வாக்குவாதம் நடக்கும். அவங்க கேட்குற காசு கொடுத்து அனுப்பு மா உன் கிட்ட வாங்கு காசு வைத்து ஒன்னும் அவங்க பெரிய வீடு ஒன்றும் கட்ட போவதில்லை தினசரி செலவுக்கே அவங்களுக்கு போதுமானதாக இருக்காது. கீரைகட்டு 15 அல்லது 20 ரூபாய் விற்றால் என்ன அவர்களுக்கு அதிகபட்சம 5 ரூபாய் கிடைக்கும் தெருத்தெருவாய் பாரத்தை தூக்கி அலையுறாங்க அவங்கிட்டயெல்லாம் பேரம் பேசமா கேட்குற காசு கொடும்மா என விளக்கமாக  கூறுவேன் சரி சரி என்று தலையாட்டுவாங்க ஆன அடுத்த தடவை இதே பேரம் போசுற வேலைதான் நடக்கும்.  

Sunday, March 3, 2013

சாரா - ரி்ச்சார்ட் ஒரு உண்மை காதல் கதை


காலைபொழுதின் அழுதத்தை  இரவுகள் நேரத்தில் புத்தகம் மற்றும் இசையின் மூலமாக என்னை புதுப்பித்து கொள்ளவதே என்னுடைய வாடிக்கை  

நேற்றைய இரவில்  fm Radio  சேனல் மாற்றிகொண்டு இருக்கையில் ஒரு சேனலில் ஒரு பெண் அழுதுக்கொண்டே தன்னுடைய காதல் கதையை  அந்த ரேடியோ ஜாக்கியிடம் (லவ் குரு) பகிர்ந்து கொண்டு இருக்கிறாள் அவள் பெயர் சாரா என்றும் அவளுடைய காதல் கணவன் பெயர் ரிச்சர்ட்  என்றும் அவளது உணர்வுபூர்வமான வார்த்தைகள் ஆரம்பிக்கிறது.

சாரா காதல் திருமணம் செய்து 5 மாதத்தில் பிரிவு. பிரிவை தாங்க முடியாத பெரும் துக்கம் அவளது வாழ்வில்.  பெங்களுரை பூர்விகமாக கொண்ட  ஒரு தமிழ்பெண் சிறந்த படிப்பு உயர்ந்த பன்னாட்டு நிறுவனத்தில் சென்னையில் வேலை ரிச்சர்ட் அவளுடன்  பணிபுரிந்தவன் தன்னுடைய முதல் பார்வையில் அவளின் மீது காதல் கொண்டு தொடர்நது 6 மாதம் அவள் பின்னால் அலைந்து காதலுக்கு கீரின்  சிக்னல். என தன்னுடைய அற்புதமான காதல் கதையை சொல்லிக் கொண்டு இருக்கிறாள் சாரா  சிறந்த படிப்பறியுள்ள குடும்ப பிண்ணனி   நிறைவான வாழ்க்கை   காதலை பெற்றோரிடம் தெரிவித்து முதலில் சம்மந்தம்  வாங்கி தன்னை பெண் பார்க்க ரிச்சார்ட் குடும்பத்தை வர  வைத்துள்ளாள் இருவீட்டாரின் சம்மதத்தில் வெகு சிறப்பாக திருமணம் நடந்தேறியது.

     மருமகளாய் சென்னையில் ரிச்சார்ட் விட அதிக படிப்பு அதிக சம்பளம் என தன் சுய முயற்சியால் முன்னேற்றிக் கொண்டவள். அப்புறம் எப்படி  சார 5 வது மாதத்திலே டைவர்ஸ் வரைக்கும் கேட்க.  ஆமாம் லவ் குரு என் மாமியார் தான் எல்லாம் பிரச்சனைகளுக்கும் காரணம். எனக்கு கூட்டு  குடும்ப வாழ்ககை தான் பிடிக்கும் அப்படியே தான் அமைந்தது. இருவரும் அதே இடத்தில் தான் வேலை செய்து கொண்டு இருந்தோம் எனக்கு பல கனவுகள் media பணியற்ற  வேண்டும் என்பது அதற்கான முயற்சியும்  எடுத்தேன் ஆனால் என் மாமியார் இதெல்லாம் எங்க குடும்பத்திற்கு சரிவாரது நீ டி.வி யில் நடிப்பது  குடும்பத்திற்கு நல்லதல்ல என கனவுகளுக்கு  தடை போட்டார்கள். ரிச்சர்ட்டும்  அவர் அம்மாவின்  சொல்லுக்கு மட்டுமே தலையாட்டுகிறார். அவங்க சொன்ன நல்லது தான் சொல்லுவாங்க  கேளுன்னு சொல்லவார். எனக்கு ஒரு புரிதல் இருந்தது வேண்டாம் என்று வி்ட்டு வி்ட்டேன். வேலையை விட்டு விட்டு வீட்டில் இருந்து கணவர்  மாமியார் சந்தோஷத்துடன் வாழ கூட ஆசைப்பட்டேன் ஆனால் அதிகப்படியான பிரச்சனைகள் என்னை வேலைக்கு போக வைத்தது  என்னுடைய   சேமிப்பு முழுவதையும்  என் கணவரின் குடும்பத்திற்காக செலவி்ட்டேன் பணம் ஒரு பெரியதாக நான் எப்போதும் நினைத்ததேயில்லை.  பல  தனிப்பட்ட ஆசைகளை கூட தியாகம் செய்தேன்.