தமிழ் நாட்டின் வளர்ச்சியில் அக்கறை கொண்ட பலரின் உள்ளத்தில் நிழலாடிக் கொண்டிருந்த ஒரு நிதர்சனமான உண்மையை தமிழ் நாட்டின் முதலமைச்சர் சட்டப் பேரவையில் தேவை உள்ளவர்களுக்கும், இல்லாதவர்களுக்கும் மட்டுமே இலவச திட்டங்களை அளிக்க வேண்டும் என்றும் மற்ற அனைவருக்கும் கொடுத்து அவர்களை சோம்பேறி கூட்டமாக்கி விடக்கூடாது. என்பதை ஆணித்தரமாக கூறியுள்ளார்.
மறைந்த நாவலர் நெடுஞ்செழியன் பேசிய பல கூட்டங்களில் ஒரு கருத்தை மிக தெளிவாக அவருக்கே உரிய பாணியில் ஏற்ற இறக்கி இழுத்து கூறுவார். எந்த வேலைக்கும் போகாமல் சொம்பேறியாய் திரிபவர்களை அப்படி கூறுவார்
வெந்ததையும் வேகாததையும் தின்று விட்டு. வேலை வெட்டி எதற்கும் போகாமல் சத்திரம். சாவடி கண்ட இடத்தில் படுத்து தூங்கிவிட்டு என்ன செய்கிறாய்? என்று கேட்டால் சும்மா தான் இருக்கிறேன் என்பவனெல்லாம் சமுதாயத்தில் இருந்து என்ன பயன்? என்று அவர் கூறியது கேட்பதற்கு நகைச்சுவையாக இருந்தாலும் உழைப்பின் உன்னதத்தை உணர வைக்கிறது அவ்வளவு ஏன் இன்றைய காலகட்டத்திலும் ஏராளமானவர்களின் வாழும் தெய்வமாகக் கருதப்படும் ஒரு உத்தமர். வாழ்க்கையில் முன்னேறுவதற்கு உழைப்போம் உயர்வோம்! என்பார்.
உழைத்து வாழ்வதில் ஒரு தனி இன்பம் இருக்கிறது. உழைத்து ஈட்டிய பணத்தில் விலை கொடுத்து, ஒரு பொருள் வாங்கினால் அது அனுபவிக்கும் போது ஏற்படும் இன்பம் இலவசங்களால் கிடைப்பதில்லை நிலைமை இவ்வாறு இருக்க வாக்காளர்களை கவர கடந்த பல ஆண்டுகளாகவே அரசியல் கட்சிகள் இலவசங்களை கொடுக்கத் தொடங்கினர். மக்களும் ஓசியில் கொடுத்தால் வேண்டாம் என்று சொல்வார்களா? மகிழ்ச்சியோடு வாங்கத் தொடங்கினார்கள். எல்லாமே இலவசமாக கிடைக்கத் தொடங்கியவுடன், மக்களுக்கு உழைக்கும் எண்ணம் மங்கி சோம்பேறித்தனம் தலையெடுத்து மக்களின் வருமானத்தை பெருக்கி, அவர்களாகவே பொருட்களை வாங்க முடிகிற தகுதியை வளர்ப்பதற்கு பதிலாக இப்படி ஓசிக்கு எல்லாவற்றையும் கொடுத்து சோம்பேறியாக்குகிறோமே என்று நல்லோர் பலர் கவலைப்பட்டனர் இதற்கெல்லாம் சரியான பதிலை முதலமைச்சர் கூறிவிட்டார். சட்டசபையில் பேசும் போது ஏதோ ஒரு பொருளாதாரப் புரட்சியைக் கொண்டு வரப்போவதை கோடிட்டுக் காட்டி விட்டார். ஒரு காலகட்டத்தில் தமிழக மக்களுக்கு யாரும் எந்த உதவிகளையும் இலவசமாக தரவேண்டிய அவசியம் இருக்ககூடாது.
தமிழக மக்கள் யாரிடத்திலேயும் கையை நீட்டி பெறுகின்ற நிலைமை இருக்கக்கூடாது. இந்த நிலையை என் வாழ்நாளில் நான் காணவேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது அது தான் என்னுடைய இலட்சியம் என்று பேசியிருப்பது சமூக ஆர்வலர்களிடையே ஒரு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் வறுமைகோட்டிற்கு கீழே உள்ளவர்கள் யார் யார் என்ற கணக்கு சரியாக இல்லை. அரசு இந்த கணக்கை துல்லியமாக எடுக்க வேண்டும். உடல் ஊனமுற்றோர், முதியோர்கள் போன்றவர்களுக்கு இலவசங்களை கொடுப்பதில் தவறேயில்லை. ஆனால் உழைப்பதற்கு உடலில் தெம்பு உள்ளவர்களுக்கு இலவசங்களை கொடுப்பதற்கு பதிலாக உழைத்துப் பிழைக்க வேலையை கொடுப்பதுதான் அவர்களுக்கு மகிழ்ச்சி, சமுதாயத்திற்கும் மகிழ்ச்சி. எந்த திட்டமென்றாலும் ஏராளமான வேலைவாய்ப்பை கொடுக்க முடியுமா என்ற நோக்கில் தான் அரசு திட்டங்கள் இருக்க வேண்டும்.
நெற்றி வியர்வை சிந்தினாமே முத்து முத்தாக அது நெல் மணியாய் விளைந்திருக்கு கொத்துகொத்தாக என்று உழைப்போம் உயர்வோம் என்ற இத்தகைய தமிழகத்தை காண்பதே அனைவரின் விருப்பமாக இருக்கட்டும்...
5 comments:
நெற்றி வியர்வை சிந்தினாமே முத்து முத்தாக அது நெல் மணியாய் விளைந்திருக்கு கொத்துகொத்தாக என்று உழைப்போம் உயர்வோம் என்ற இத்தகைய தமிழகத்தை காண்பதே அனைவரின் விருப்பமாக இருக்கட்டும்..
அருமையான ஆக்கத்தைத் தொடர்ந்து முடிவில் நீங்கள் கொடுத்த இந்த வாசகம் என் மனதை ஈர்த்தது தோழி.. உங்கள் எண்ணமும் ஓர்நாள் ஈடேற வாழ்த்துக்கள் .மிக்க நன்றி பகிர்வுக்கு .வாருங்கள்
என் தளத்துக்கும் ....
தமிழ்மணம் 1
உழைத்து வாழ்வதில் ஒரு தனி இன்பம் இருக்கிறது.
உண்மை.
உழைத்து வாழவேண்டும் ...
உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே
என்ற பாடல் தான் யாபகம் வருகிறது நண்பா
Post a Comment