Pages

Sunday, August 21, 2011

இளைஞர்களின் எழுச்சி நாயகன்

      கடந்த வாரத்தில் நமது காந்திய தேசத்து பாரத பிரதமர் உண்ணாவிரதத்தால் ஒன்றும் பெரிதாக சாதிக்க முடியாது என்று கூறியவர் இன்று அதை தவறு என்று உணர்த்தும் வகையில் அன்னாவின் பின்னால் இருக்கும் கோடிக்கணக்கான மக்களின் எழுச்சியும் ஒட்டுமொத்த நாட்டு மக்களின்  மன வேதனைகளும் அன்னாவிற்கு முழுவதுமாக ஆதரவாக உள்ளது அகிம்சையால் அடைந்த சுதந்திர நாட்டில் மீண்டும் ஒரு சுதந்திர போராட்டம் என்றுதான் கூற வேண்டும்.

           அன்னாஹசாரேயின் கோரிக்கை குறித்து மத்திய அரசு பேச்சு நடத்தவும், அவரது குழுவினருடன் விவாதிக்கவும் தயாராக இருக்கிறது என்று பிரதமர் மன்மோகன்சிங் நேற்று அறிவித்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் அன்னாஹசாரே இன்று ராம்லீலா மைதான உண்ணாவிரத மேடையில் இருந்தவாறு ஆதரவாளர்கள் மத்தியில் கூறியதாவது:-

மத்திய அரசுடன் பேச்சு நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்கள் கதவு மூடப்படவில்லை. திறந்தே வைத்திருக்கிறோம். பேச்சுவார்த்தை மூலமே பிரச்சினையை தீர்க்க முடியும்.   எங்களுடன் பேச்சு நடத்த தயார் என்ற பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்துள்ளார். ஆனால் மத்திய அரசிடம் இருந்து முறைப்படி எந்த தகவலும் வரவில்லை.
 
பாராளுமன்றத்தை விட, மக்கள் மன்றம் மிக உயர்ந்தது. எம்.பி.க்கள் மீது நம்பிக்கை வைத்து மக்கள் அவர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்புகிறார்கள். மக்கள் பணத்தை கொள்ளை அடிக்க அனுப்பவில்லை. இப்போது மக்கள் இந்த விஷயத்தில் விழித்துக் கொண்டார்கள். ஊழலில் ஈடுபட்ட மந்திரிகள் பதவி இழந்துள்ளனர். சிலர் சிறையில் இருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.


அன்னாஹசாரே குழுவைச் சேர்ந்த கெஜ்ரி வால் கூறுகையில், இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம் சார்பில் நடந்த உயர்மட்ட குழு கூட்டத்தில் லோக்பால் மசோதா குறித்து 5 முடிவுகள் எடுக்கப்பட்டன. இதுபற்றி யாருடன் எங்கே போய் பேச்சு நடத்துவது என்று தெரியவில்லை என்றார்.   எம்.பி.க்கள் வீடுகள் முன்பு தர்ணா போராட்டம் நடத்துமாறு ஆதரவாளர்களுக்கு அன்னாஹசாரேயும், கெஜ்ரிவாலும் நேற்று தெரிவித்து இருந்தனர். இப்போது மத்திய மந்திரிகளின் வீடுகள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களின் வீடுகள் முன்பும் தர்ணாவில் ஈடுபடுமாறு ஆதரவாளர்களுக்கு இருவரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
     காங்கிரஸ் கட்சியின் கபட நாடகத்தின் மூலம் இந்த உண்ணாவிரதத்தை நிறுத்தி எரியும் விளக்கை அனைத்துவிடலாம் என மூத்த அரசியல் தலைவர்கள் காய் நகர்த்தி வருகின்றனர் ஆனால் இந்தியாவி்ன் அனைத்து இளைஞர் சக்திகளும் ஒன்று திரண்டு மிகப் பெரிய போரட்டத்தை அரசாங்கம் சந்திக்கும் என்பதில் சந்தேகமில்லை

நம்மால் முடிந்த பங்கை அந்தந்த பகுதிகளில் ஊழலுக்கு எதிராக நடக்கும் போராட்டங்களில் பங்கேற்போம். நாங்கள் காந்தியை பார்த்தது இல்லை ஆனால். இந்த காந்தியவதி (அன்னா ஹசாரே) இந்த நாட்டுக்கு தேவையான காந்தியாக வாழ்கிறார் இளைஞர்கள் மனதில்.
இந்த வயதான இளைஞனுக்கு பின்னால் துணை நிற்போம்

2 comments:

கவி அழகன் said...

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

வே.நடனசபாபதி said...

// இந்த வயதான இளைஞனுக்கு பின்னால் துணை நிற்போம்//

உங்கள் கூற்றை நான் வழிமொழிகின்றேன்.

Post a Comment