Pages

Sunday, April 17, 2011

இளம் சாதனையாளர்

தன்னார்வத்தாலும், தனித்திறமையாலும் ஐடி துறையில் இளம் சி.இ.ஓ (C.E.O) ஆகி 14 வயதில் சாதனை படைத்திருக்கிறார் சுகஸ் இந்தியா இளைஞர்களுக்கு இவர் ஒரு சிறந்த ரோல் மாடல்
        சுகாஸ் கோபிநாத்துக்கு எட்டாம் வகுப்பு படிக்கும் போதே கணினி என்றால் பிரியம். வீட்டிலோ கணினி கிடையாது மாதந்தோறும் அப்பா  தருகிற 15 ரூபாய்க்கு இன்டர்நெட் சென்டரில் ஒரு மணி நேரம் உட்கார்ந்தாலே காசெல்லாம் தீர்ந்து விடும்.  என்ன செய்வது என யோசித்தான், சுகாஸ் படித்த பெங்களுரு ஏர்போர்ஸ் பள்ளிக்கு மிக அருகில் இருந்தது அந்த இன்டர்நெட் சென்டர். மதியம் 1 மணிக்கு மூடினால் 4 மணிக்கு தான் மீண்டும் திறப்பார் அதன் உரிமையாளர். மதிய உணவு இடைவேளை அவனுடைய பள்ளி 1மணிக்கு முடிந்து விடும் சுகாஸ் நேரடியாக உரிமையாளரைச் சந்தித்தான். 1 மணிக்கு மேல் 4 மணிவரை நான் கடையை பார்த்துக் கொள்கிறேன் சம்பளமே தேவையில்லை ஆனால் எனக்கு ஒரு மணி நேரம் இன்டர்நெட் இலவசமாக கொடுங்கள் என்று கேட்டுக் கொண்டான் உரிமையாளருக்கு அந்த டீலி்ங் ஓகே.
    இலவசமாக கிடைத்த இன்டர்நெட்ல் கண்டதையும் பார்த்து மனதை வீணடிக்காமல் இணையதளங்கள் எப்படி வடிவமைப்பது என தன்னார்வத்தோடு தேட தொடங்கினான். அதற்கான புத்தகங்களை தேடி படித்தான் அவனே இணையதளங்களையும் வடிவமைக்க தொடங்கினான்.
         இணையத்தின் மூலம் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு சிறிய நிறுவனத்திற்கு இணையதளம் ஒன்றை வடிவமைத்து கொடுக்கிறான் அதற்காக அவனுக்கு 100 டாலர் (5000) தருவதாக கூறினார்கள். அப்போது அவனுக்கு வங்கியல் அக்கவுண்ட் கிடையாது. அப்பாவிடம் கூறினான் ஆச்சர்யமாக இருந்தாலும் என்ன வேணா பண்ணிக்கோ படிப்புல கவனம் இருக்கட்டும் என கண்டித்தார். அப்போது சுகாஸ் ஓன்பதாம் வகுப்புதான் படித்துக் கொண்டிருந்தான்.
     அதைத் தொடர்ந்து தன்னை பிரபலபடுத்திக் கொள்ள www.coolhindustan.com என்ற தளத்தை வடிவமைத்துக் கொண்டான்.தன்னைப் பற்றியும் விவரங்களை வெளியிட்டான். அதைப் பார்த்து எனக்கும் ஒண்ணு பண்ணிக் குடுங்க என்று நிறைய வாய்ப்புகள் வரத் தொடங்கியது. சுகாஸ் இப்போது ஒரு பிஸினஸ்மேனாக உணரத் தொடங்கினான்.
    தன் சம்பாத்தியத்தில் 13 வயதில் ஒரு கணினியை வாங்கினான் வீட்டில்பாதி  இன்டர்நெட் சென்டரில் பாதியென கழி்ந்தது பிஸினஸ் வாழ்க்கை. அது நிச்சயமாக அவனுடைய படிப்பை பாதித்தது 10 வகுப்பில் கணிதப்பாடத்தில் தோல்வியடைந்தான் குடும்பத்திலும் பள்ளியிலும் அனைவருக்கும் அதி்ர்ச்சி சுயதொழில் செய்வதை பாவச் செயலாக கருதும் பெங்களுரைச் சேர்ந்த சாதாரண மத்திய தர வர்கக் குடும்பத்தை சேர்ந்தவர் சுகாஸ்.
அம்மா ரெம்ப பயந்துட்டாங்க எங்க ஸ்கூல் பிரின்ஸ்பால் என்னை திட்டினாங்க அம்மா என்கிட்ட சத்தியம் வாங்கிட்டாங்க இனிமே இன்டர்நெட் சென்டருக்கு செல்ல மாட்டேன் என்று.
பிறகு நான்கு மாதம் கம்பெனிக்கு லீவு விட்டுவிட்டு படிப்பு படிப்பு மட்டும் தான் நல்ல மதிப்பெண் எடுத்து பாஸ் பண்ணினேன் என்று கூறுகிறார் சுகாஸ்
மேலும்
இந்திய இளைஞர்களுக்கு வெறும் புத்தக அறிவோடு நின்றுவிடக்கூடாது அதை நேரடியாக உபயோகித்துப் பார்க்க வேண்டும் என்று கூறுகிறார்
சுகாஸ்.
14 வயதில் ஒருவரால் எப்படி நிறுவனத்தை துவக்க முடியும்? இந்தியாவில் ஒருவர் தன் பெயரில் நிறுவனத்தை துவக்க 18 வயது நிரம்பியிருக்க வேண்டும் சட்டச் சிக்கலை எப்படி சமாளிப்பது என யோசித்தார் சுகாஸ். அமெரிக்காவில் படித்து கொண்டிருந்த நண்பனின் உதவியோடு அமெரிக்காவிலேயே குளோபஸ் என்ற நிறுவனத்தை துவக்கினார் சுகாஸ். நண்பரையும் பங்குதாரரக சேர்த்துக் கொண்டார். 14 வயதில் அவருக்கே தெரியாமல் தெரிந்திருக்கவில்லை இந்த வயதில் முதல்   C.E.O.  இவர் தான் என்று.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தை போல தன் நிறுவனத்தையும் வளர்க்க வேண்டும் என்று ஒரு இந்திய இளைஞன் கனவுகளோடு  மும்முரமாக இந்தியாவில் இருந்தபடியோ தன்னுடைய பிஸினஸை செய்கிறார். ஆர்டர்கள் குவியத் தொடங்கின வேலை செய்ய நேரமில்லை. அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களை இணையத்தின் மூலம் தொடர்பு கொண்டு பகுதிநேர பணியாளார்களாக பணியில் அமர்த்தினார். அமெரிக்காவை விடஐரேப்பாவில் மிகப் பெரிய சந்தை இருப்பதை உணர்ந்த சுகாஸ் ஐரோப்பிய நிறுவனங்களை தொடர்பு கொண்டு  பேசினார் எல்லாமே இணையவழி தான். 
ஒரு ஸ்பெயின் நிறுனத்தை தொடர்பு கொண்ட போது உங்களுக்கு ஆங்கிலம் மொழி மட்டும் தான் தெரியும் ஸ்பானீஸ் மொழி தெரிந்தால் தான் ஆர்டர் என கூற ஒருவாரம் டைம் கொடுங்கள் என்று சுகாஸ்.  ஸ்பெயினில் உள்ள சில மாணவர்களை தொடர்பு கொண்டு பேசினார் நல்ல சம்பளம் தருவதாக கூறி அவர்களையே மார்க்கெட்டிங் வேலைகளையும் பார்த்துக் கொள்ள செய்தார்.
இதே வெற்றியை தொடர்ந்து இத்தாலி ஐரோப்பிய நாடுகளில் ஆர்டன் குவியத்தொடங்கி பல கோடிகளில் பிசினஸ் அப்போது அவருக்கு வயது 16 மட்டுமே.
ஒவ்வொரு இளைஞனுக்கும் ஒரு கனவு சுகாஸ் தன் பதினெட்டாவது வயதில் தன் நிறுவனத்தை இந்தியாவில் பதிவு செய்தார் தன் சென்ற இன்டர்நெட் மையத்திற்கு அருகிலேயே ஒரு சிறிய அலுவலகம் பிஸினஸ் ஒரு பக்கம் தன் படிப்பு ஒரு பக்கம் என பிசியாக சென்றது அவருடைய வாழ்ககை. என்ஜினீயர் கல்லுாரியில் படித்த இவரை எம்.பி.ஏ பயிற்றுவிக்கும் கல்லுாரிகள் சிறப்புரையற்ற அழைத்தார்கள்.
ஒரு கல்லுாரியில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட போது என் உருவத்தை பார்த்து வாட்ச்மேன் என்னை உள்ளே அனுமதிக்க மறுத்திவி்ட்டார். பின்னர் நான் நிகழ்ச்சி ஏற்பட்டாளை தொடர்பு கொண்டு உள்ளே சென்றேன் என்று கூறுகிறார் சுகாஸ்.
தன்னுடைய 19 வயதில் சுவிட்ஸர்லாந்தில் ஒரு அலுவலகத்தையும் திறந்துள்ளார். என்னுடைய நிறுவனத்தில் யாரைப் பணியில் அமர்த்தினாலும் அவருடைய வயது, கல்வியைவிட அவர்களின் ஆர்வம் மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும் என்கிறார் இந்த கோடீஸ்வர பிசினஸ்மேன் தற்போது. இவருக்கு 25 வயது ஆகிறது. நான் இன்னமும் எதையுமே சாதித்து விடவில்லை இன்னும் சாதிக்க நிறைய இருக்கிறது  அதை நோக்கிய பயணமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்கிறார் இந்த இளம் சாதனையாளர்
தற்போது சுகாஸின் நிறுவனத்திற்கு ஐரோப்பா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா தொடங்கி பல நாடுகளிலும் அலுவலகம் உண்டு. 2005 ஆம் ஆண்டு கர்நாடக அரசின் ராஜ்யோஸ்தவா விருது. 2007 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் சிறப்புரையாற்றினார். உலகெங்கும் கல்வி மேம்பாடு குறித்து ஒரு சிறப்பு கமிட்டி அமைக்கப்பட்டது. அதில் உலகின் முன்னணி நிறுவத்தலைவர்களுட்ன இவரும் சிறப்பு உறுப்பினராக உள்ளார்


நன்றி புதிய தலைமுறை

No comments:

Post a Comment