பயணங்கள் மனிதனை பண்பட வைக்கின்றன. பயணங்கள் பல வித மனிதர்களுடன் பழகும் வாய்ப்பு ஏற்படுத்துகின்றன. தன் வாழ்நாளில் அதிக பயணங்களை மேற்கொண்ட மனிதன் சிறந்த பண்பாளன் ஆகிறான். என்ற வரிகள் இறையண்பு அவர்களின் பயணங்கள் புத்தகங்களில் படித்த வரிகள்.
இதற்கு முன்பு பல பயணங்கள் செய்திருந்தாலும் இந்த வரிகளின் படித்த பின்பு நான் சென்ற பயணம்
கடந்த வாரம் நண்பரின் திருமணத்திற்காக திருவரூர் வரை செல்ல கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இரவு 9.30 மணியளவில் மயிலாடுதுறை செல்லும் பேருந்தில் எனது பயணம் தொடங்கியது. நகரத்தை விட்டு எப்போது தொலைவோம் என்று தோன்றியது. என் அருகில் உட்கார்ந்த என் நண்பர் என் வயதுகாரர் வேலை நிமிர்த்தமாக சென்னை வந்து சொல்கிறார். சீர்காழி வரை என்னுடன் பயணம் செய்வதாக கூறினார். கிழக்கு கடற்கரை சாலையில் இனிமையான பயணம் தொடங்கியது. நான் அதிகமாக இரவு நேர பயணங்கள் சென்றதில்லை. இரவு முழு நேர பயணம் இதுவாக தான் இருக்கும்.
|
கிழக்கு கடற்கரை சாலை |
|
|
|
இரவு நேர பயணங்களில் இசை நமக்கு மிகவும் நெருங்கிய நண்பர்.
பேருந்து ஓட்டுநர்களுக்கும் இசை தான் மிக நெருங்கிய நண்பன் என்பதை அந்த பயணத்தில் நான் கவனித்த ஒன்று இளையராஜவி்ன் சுகமான ராகங்கள் மெல்லிய ஒலியில் ஒலித்துகொண்டு இருந்தது.
அரை தூக்கத்தில் இசையுடன் பயணம். சுமார் இரவு 11. 45 மணியளவில் என் அருகில் இருந்த நண்பர் திடிரென விழித்து ஏதே சத்தம் வருகிறது பேருந்து டயர் பஞ்சர் ஆகியுள்ளது என்று என்னிடம் கூறினார் பின்பக்கம் ஜன்னல் அருகில் உட்கர்ந்ததால் அவருடைய கணி்ப்பு மிகவும் சரியாகவே இருந்தது. சுமார் 15 நிமிடம் சென்ற பின் தான் ஓட்டுநர் அதை கவனித்தார் போலும்
சுமார் 12.00 மணியளவில் புதுச்சேரி, தமிழ்நாடு எல்லையில் உள்ள ஒரு சிறிய இரவு நேர உணவு விடுதியில் பேருந்து நிறுத்தினார். இந்த உணவு விடுதி வரை வருவதாற்காகவே 15 நிமிடம் பஞ்சர் ஆன பேருந்தை செலுத்தி வந்தார் என்பதை பின்பு நானும் எனது அருகில் இருந்த நண்பருக்கும் புரிந்தது.
சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக அங்கே மீண்டும் சுமார் 12.45 மணியளவில் பயணம் தொடர்ந்தது. பெரும்பாலன பயணிகள் ஆழ்ந்த உறக்கம் ஓட்டுநரின் கண்களும் அந்த இசைப்பானும் மட்டுமே விழிந்திருந்தது.
இரவு 2.30 மணிளவில் சீர்காழி எனது அருகில் இருந்த நண்பர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார் அவரை எழுப்பினேன். என்னிடம் நன்றி கூறிவிட்டு என்னுடைய மின்முகவரி வாங்கி கொண்டு விடைபெற்றார். இப்பொழுதும் இறையண்பு அவர்களின் வரிகள் சில என் ஞாபகத்தில் சில மணிநேர பயணங்களில் பல வருட நட்பு கிடைக்கும் என்று.
விடியற்காலை 4.45 மணியளவில் மயிலாடுதுறை பேருந்து நிலையத்தை அடைந்தேன்.
அங்கே திருவாரூர் செல்லும் பேருந்துக்காக 30 நிமிடம் காக்க வேண்டியதாக இருந்தது.
பிறகு தனியார் பேருந்து ஒன்றில் ஏறி உட்கார்ந்தேன்.
பெரும்பாலும் தென்மாவட்ட தனியார் பேருந்துகளில் இருபுறமும் தொலைக்காட்சி வைத்து சினிமா குத்து பாடல்களை ஒலியும். ஒலியும் செய்து சினிமா சேவை செய்து வருகிறார்கள்.
பயணங்களை இனிமையாக்க இயற்கையை ரசித்தவாறு செல்வதற்கு பதிலாக ஊடகங்களில் அடைபட்டு கிடக்கும் மனித மனங்களை மேலும் சிறைப்படுத்துகிறார்கள் இந்த சேவகர்கள்.
30 நிமிட பயணத்திற்கு பிறகு நான் செல்ல வேண்டிய இடம் பேரளம் நிறுத்தத்தில் சுமார் 6.00 மணி
நண்பரை நேரில் சந்தித்து 2 வருடம் ஆகியுள்ளது. அவர் இப்போது இருப்பது சிங்கப்புரில் சென்னை நாங்கள் இருவரும் ஒரே இடத்தில் 1 வருட காலம் இருந்தோம் இருவருமே கிராமத்தான்கள் தான்
சி்ங்கப்புரில் உள்ள கிருஸ்ணர் கோவிலில் கணக்காளராக உள்ளார். பெரும்பாலும் தொலைபேசி. மின்னஞ்சலில் அவரே மாதம் ஒரு முறை தொடர்பு கொள்வார்.
நேரில் சந்தித்தவுடன் நலம் விசரித்து சற்று உடல் கூடியுள்ளது என்று கூறினார். திருமணம் 9.00 மணிக்கு மேல் என்பதால் எங்களுக்கு ஒரு அறை ஏற்படுத்தி கொடுத்து சிறிது நேரம் ஓய்வு எடுத்து வருமாறு கூறினார். மேலும் இரண்டு நண்பர்கள் ஒருவர் சென்னையில் இருந்து வந்ததாகவும். ஒருவர் துபாயில் இருந்து வந்தாகவும் கூறினார். 3பேரும் குளித்து விட்டு மண்டபத்தில் சென்றோம் மணக்கோலத்தில் எமது நண்பர் எங்களுடனோ உணவருந்தினார். பின்னர் நாங்கள் ழூவரும் புகைப்படத்தில். திருமண முடிந்தது நண்பரிடம் விடைபெற்று என் பயணம் துவங்கியது. இனிமையான தருணங்கள் வாழ்வில் சில சமயங்கள் தான் அதனை முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்ற ஆட்டோகிராப் வசனம் மனதில் தோன்றியது.
திருமண மண்டபம் | | |
|
|
|
பயணங்கள் தொடரும் |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|